வெள்ளை ஸ்ட்ராபெர்ரி (Pineberry) பற்றி கேள்விப்பட்டதுண்டா?

White strawberry
White strawberry
Published on

ஸ்ட்ராபெர்ரி என்றாலே சிவப்பு நிறத்தில் தான் இருக்கும் என நாம் அனைவரும் நினைத்துக் கொண்டிருப்போம். அனால், வெள்ளை நிறத்திலும் ஸ்ட்ராபெர்ரி உள்ளதாம். இந்தப் பதிவில் வெள்ளை ஸ்ட்ராபெர்ரி பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை பற்றிக் காணலாம்.

பெரும்பாலான மக்கள் வெள்ளை ஸ்ட்ராபெர்ரியை பார்த்திருக்கவோ, சுவைத்திருக்கவோ வாய்ப்பில்லை. ஏனெனில், இந்த வெள்ளை நிற ஸ்ட்ராபெர்ரி மிகக் குறைந்த அளவிலேயே விளைவிக்கப்படுகின்றன. ஸ்ட்ராபெர்ரி பழங்களின் பூர்வீகம் ஐரோப்பாவாக இருப்பினும், ஜப்பான் நாட்டில் மட்டுமே பலவகையான வெள்ளை நிற ஸ்ட்ராபெர்ரி அறுவடை செய்யப்படுவதாக சொல்லப்படுகிறது. இந்த வெள்ளை நிற ஸ்ட்ராபெர்ரிகள் ஜப்பானியர்களால் 'White jewel' என்று அழைக்கப்படுகின்றன.

வெள்ளை ஸ்ட்ராபெர்ரி, அன்னாசி பழத்தின் சுவையையும் மணத்தையும் கொண்டது. ஒருமுறை சுவைத்த பின்னர் மீண்டிடும் மீண்டும் சுவைக்கத் தூண்டுமாம் இந்த வெள்ளை நிற ஸ்ட்ராபெர்ரி. வெள்ளை நிறம் மற்றும் சிவப்பு விதைகளைக் கொண்ட அல்பினோ ஸ்ட்ராபெர்ரி வகையாகும் இந்த வெள்ளை ஸ்ட்ராபெர்ரி. இது 'பைன்பெர்ரி' (Pineberry) என்றும் அழைக்கப்படுகிறது. அன்னாசி மற்றும் ஸ்ட்ராபெர்ரி வார்த்தைகளின் கலவையே பைன்பெர்ரி ஆகும். பைன்பெர்ரி அல்லது வெள்ளை ஸ்ட்ராபெர்ரியானது, தென் அமெரிக்காவில் தோன்றிய ஃப்ராகரியா சிலோயென்சிஸ் மற்றும் வட அமெரிக்காவில் தோன்றிய ஃப்ராகரியா விர்ஜினியானாவின் கலப்பினங்கள் ஆகும். பைன்பெர்ரி வசந்த காலத்திலும் கோடைகாலத்திலும் அறுவடை செய்யப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
குறிஞ்சி மலர்கள் ஏன் 12 வருடங்களுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கின்றன தெரியுமா?
White strawberry

பைன்பெர்ரி நாம் உண்ணும் சாதாரண ஸ்ட்ராபெர்ரியை விட சிறியது. மேலும், இது பழுத்தவுடன் மிகவும் மென்மையாக இருக்கும். எனவே, பைன்பெர்ரிகளை ஏற்றுமதி செய்வது என்பது மிகவும் சிக்கலான செயலாக கருதப்படுகிறது. வெள்ளை ஸ்ட்ராபெர்ரி செடியில் அதிக சூரிய ஒளி படும்போது, அதன் வெண்மை நிறம் சிவப்பாக மாறக்கூடுமாம். ஆனால், சுவையில் எந்த மாற்றமும் இருக்காது என்கின்றார்கள் பைன்பெர்ரி சாகுபடி விவசாயிகள். அதோடு, இதன் அதீத சுவை மற்றும் குறைந்த அளவிலான உற்பத்தி காரணமாக இதன் மதிப்பும் விலையும் மிகவும் அதிகமானதாக உள்ளது.

சிவப்பி நிற ஸ்ட்ராபெர்ரிக்களை விட வெள்ளை நிற ஸ்ட்ராபெர்ரியில் அதிகளவு சத்துக்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இவற்றில் ஆண்டி ஆன்சஸிடண்ட்கள், வைட்டமின் சி மாற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன. வெள்ளை நிற ஸ்ட்ராபெரிகளை உணவாக எடுத்துக் கொள்ளும்போது, இதயம் தொடர்பான நோய்கள், மற்றும் புற்றுநோய் வராமல் தடுக்க முடியும். அதிக நோய் எதிர்ப்புத் திறன் கொண்டது. அஜீரணம் போன்ற செரிமானம் தொடர்பான பிரச்னைகளை சரிசெய்கிறது. இது எலும்பு மாற்றம் பற்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. உடலுக்கும் மனதுக்கும் உற்சாகத்தை தரவல்லது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com