குறிஞ்சி மலர்கள் ஏன் 12 வருடங்களுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கின்றன தெரியுமா?

Kurunji Flower
Kurunji Flower
Published on

பூமியில் வாழும் மனிதன், விலங்குகள், பறவைகள் மற்றும் தாவரங்கள் என அனைத்து வகை உயிரினங்களும் தனித்துவம் மற்றும்  சிறப்பு வாய்ந்தவை. அந்த வகையில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறைப் பூக்கும்  குறிஞ்சி மலரிலும் பல சிறப்புகள் உள்ளன.  குறிஞ்சி மலர்களின் தனித்துவமான சிறப்புகள் மற்றும் சுவாரஸ்யமான தகவல்கள் பற்றியும், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை அவை பூப்பதற்கான காரணம் பற்றியும் இந்தப் பதிவில் காணலாம்.

மலையும் மலை சார்ந்த இடங்களையும் குறிஞ்சித் திணையாக பகுத்து வைத்துள்ளனர் தமிழர்கள். அந்த மலைப்பாங்கான இடங்களில் மட்டுமே குறிஞ்சி மலர்கள் செழித்து வளரக் கூடியவை. இந்தக் குறிஞ்சி மலர்கள் நீல நிறத்தில் பூப்பதனால், இவை நீலக்குறிஞ்சி மலர்கள் என்றே பரவலாக அழைக்கப்படுகின்றன. இவை ஆசிய நாடுகளில் மட்டுமே காணப்படும் மலர்களாகும். அதிலும் குறிப்பாக, இந்தியாவில் மட்டும் 150 வகைகள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளுள்  ஒன்றான நீலகிரியில் இந்த குறிஞ்சி மலர்கள் அதிகம் பூத்துக் குலுங்குவதால்தான், அந்தப் பகுதிக்கு நீலகிரி என்று பெயர் வந்ததாகவும் சொல்லப்படுகிறது.

ஒரு குறிஞ்சி மலரில் கிட்டத்தட்ட 82 மஞ்சரிகள் இருப்பதாகவும், அந்த ஒவ்வொரு மஞ்சரியிலும் ஏறத்தாழ 24 பூக்கள் பூப்பதாகவும், ஆக மொத்தமாக ஒரு குறிஞ்சி செடியில் 1,768 குறிஞ்சி மலர்கள் பூப்பதாகவும் ஆய்வு கூறுகிறது. குறிஞ்சி மலர்கள் ஒருமுறை பூத்த பிறகு அதன் விதைகளை மட்டும் நிலத்தில் விட்டு மடிந்து, மீண்டும் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அதிலிருந்து புது செடியாக வளர்ந்து பூக்கின்றன.

இதையும் படியுங்கள்:
கருப்பு ஆப்பிள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
Kurunji Flower

அதோடு, இந்தச் செடிகள் அனைத்தும் ஒரே நேரத்தில் பூப்பதற்கான பண்புகள் அதன் மரபணுவிலேயே அமைத்துள்ளன.

மேலும், மழைப் பகுதிகளில் வாழும் பழங்குடியின மக்கள் குறிஞ்சி மலர்கள் பூக்கும் சுழற்சியைக் கொண்டு அவர்களின் வயதை கணக்கிட்டு வந்ததாகவும் சொல்லப்படுகிறது.

 நீண்ட காலம் கழித்துப் பூப்பதற்கான காரணம்:

பொதுவாக, ஒவ்வொரு வகை குறிஞ்சி மலர்களும் அதன் வகைகளுக்கேற்ப 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை, 7 ஆண்டுகளுக்கு ஒருமுறை, 12 ஆண்டுகளுக்கு  ஒருமுறை, 17 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றும் 36 ஆண்டுகளுக்கு ஒருமுறை என போக்கும் தன்மை கொண்டவை. பெரும்பாலும், குறிஞ்சி மலர்கள் அவை உயிர் தப்பி பிழைப்பதற்காகத்தான் இவ்வாறு தகவமைப்பைப் பெற்றுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். 

இவற்றிலிருந்து கிடைக்கின்ற தேன் மிகவும் இனிமையாகவும், மருத்துவ குணங்கள் நிறைந்ததாகவும் இருப்பதனால் மற்ற உரினங்களிடம் இருந்து தன்னைத் தற்காத்துக் கொள்ளும் வகையில் நீண்ட காலம் கழித்துப் பூப்பதாகவும் கூறப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com