வாழையில் 7 புதிய ரகங்கள் அறிமுகம்: திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையம் சாதனை!

வாழையில் 7 புதிய ரகங்கள் அறிமுகம்: திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையம் சாதனை!

திக மகசூலை தரும் வகையில் வாழையில் 7 புதிய ரகங்களை அறிமுகம் செய்து வாழை ஆராய்ச்சி நிறுவனம் சாதனை படைத்துள்ளது. இயற்கை, செயற்கை என்று பல்வேறு விதமான இன்னல்களுக்கு விவசாயத் துறை உள்ளாகி வருகிறது. இந்த நிலையில் விவசாயிகளினுடைய வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், விளைச்சலை பெருக்கும் வகையிலும் வேளாண் துறை பல்வேறு ஆய்வுகளை நடத்தி வருகிறது. திருச்சியில் இயங்கி வரும் தேசிய வாழை ஆராய்ச்சி மையம் வாழை விவசாயத்தினுடைய தன்மையை உணர்ந்து 7 புதிய ரகங்களை அறிமுகம் செய்திருக்கிறது.

இது குறித்து திருச்சியில் இயங்கி வரும் தேசிய வாழை ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள செய்தி, இந்தியாவில் வாழை விவசாயம் பல்வேறு விதமான பாதிப்புகளை சந்தித்து வருகிறது. அவை இயற்கையினால் ஏற்பட்ட இன்னல்களாகவும் இருக்கின்றன. மனிதர்களால் செயற்கையாக உருவான இன்னல்களாகவும் இருக்கின்றன. மேலும் பாக்டீரியா பாதிப்பு, வைரஸ் நோய் பாதிப்பு, பூச்சிகள் தாக்குதல் என்று வாழை மகசூல் குறைந்து வருகிறது. இதனால் வாழை விவசாயத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில் வாழை மகசூலை உயர்த்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தவும் திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையம் நடத்திய ஆய்வில் 7 புதிய ரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. அவை இந்தியாவில் அதிகம் விளைவிக்கப்படும் விருப்பாச்சி, சிறுமலை, தெல்லா சக்கரகேலி, பூவன், கற்பூரவள்ளி, நெய் பூவன், நேந்திரன், செவ்வாழை போன்ற வாழை ரகங்களை சார்ந்து உருவாக்கப்பட்டு இருக்கிறது.

இந்த புதிய ரகங்கள் மூலம் கூடுதலான மகசூல் கிடைக்கும். மேலும் நோய் எதிர்ப்பு சக்தி, அதிக வாழை, இலைகள், வாழைப்பூக்கள், வாழைத்தார்கள் என்று வாழை சம்பந்தமான அனைத்தும் முன்பு இருந்த ரகங்களில் கிடைத்ததை விட கூடுதலான அளவில் கிடைக்கும்.

இந்த புதிய ரகத்திற்கு காவேரி உதயம், காவேரி கலகி குட்டை, காவேரி சுகந்தம், காவேரி ஹரிதா, காவேரி சபா, காவேரி காஞ்சன், காவேரி வாமனா என்று பெயரிடப்பட்டிருக்கிறது. இவை வாழை விவசாயிகளுக்கு அதிக பயன் தரும். இதன் மூலம் வாழை தேவையை பூர்த்தி செய்ய முடியும். மனிதர்களுக்கு அதிக சத்தை தரக்கூடிய பயன் நிறைந்த ரகங்களாகவும் இவை உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com