"தெய்வத்துக்கே மாறு வேஷமா?" விவசாயத்தில் இறங்கிய ஜாக் மா.. ஓ! இதுதான் காரணமா?

Jack Ma into The agriculture.
Jack Ma into The agriculture.

ஒரு காலத்தில் மிகப்பெரிய பிரபலமாக இருந்த சீன தொழிலதிபர் ஜாக் மா, தற்போது என்ன செய்கிறார் என்பது பற்றிய விவரங்கள் அவ்வளவாக வெளியே வருவதில்லை. இந்நிலையில் அவர் தற்போது விவசாயத்தின் பக்கம் திரும்பி உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. 

இவர் விவசாயத்தில் இறங்கியது என்ன அவ்வளவு பெரிய செய்தியா? என நீங்கள் கேட்கலாம். ஆனால் தொழில்நுட்பத் துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய ஜாக் மா அதை விட்டுவிட்டு விவசாயத்தின் பக்கம் வந்திருப்பது மிகப்பெரிய விஷயம்தான். சில கோடிஸ்வரர்கள் கூட ஒரு கட்டத்தில் அவர்கள் செய்து கொண்டிருக்கும் வேலையை விட்டுவிட்டு விவசாயம் செய்வதைப் பார்த்திருப்போம். ஏனெனில் என்னதான் நாம் அதிகமாக பணம் சம்பாதித்தாலும், அதில் போதிய மன நிறைவு கிடைப்பதில்லை என்பதால் பலர் விவசாயத்தின் பக்கம் திரும்புகின்றனர். 

கடந்த 1999 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு இ-காமர்ஸ் பிசினஸில் தலைசிறந்து விளங்கிய நிறுவனம்தான் அலிபாபா. அதன் 19 நிறுவனர்களில் ஜாக் மாவும் ஒருவர். கிட்டத்தட்ட பில்லியன் கணக்கான சொத்து மதிப்புகளோடு உலகெங்கிலும் பிரபலமாக வளம் வந்தவர். ஆனால் கடந்த 2019 ஆம் ஆண்டு அலிபாபா நிறுவனத்தை விட்டு வெளியேறி, தான் ஓய்வு பெறப்போவதாக அறிவித்தார். சீன அரசுக்கு எதிராக இவர் பேசியதால் இவரது நிலை மோசமாகிவிட்டது என சொல்லப்பட்டது. அதன் பிறகு பொது வாழ்விலிருந்து மொத்தமாக விலகி, தன்னைப் பற்றிய விவரங்கள் வெளியே வராதவாறு தனியாக வாழத் தொடங்கினார். 

அதன் பிறகு 2020ல் விவசாயம் குறித்து பல கல்வி நிறுவனங்களில் பயிலத் தொடங்கினார். பல உலக நாடுகளுக்குச் சென்று ஆக்ரோ டெக் படித்தார். பின்னர் கடந்த 2023 நவம்பரில் “ஹாங்ஜோ மாஸ் கிச்சன் ஃபுட்” என்ற நிறுவனத்தை தொடங்கி விவசாய பொருட்களை பதப்படுத்துவது சார்ந்த விஷயங்களில் இந்நிறுவனம் ஈடுபட்டது. இவர் ஏன் விவசாயத் துறையை தேர்வு செய்தார் என்பது பற்றி அவர் வெளியே சொல்லவில்லை.

இதையும் படியுங்கள்:
Long Distance Relationship-ல் இருப்பவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய 7 விஷயங்கள்! 
Jack Ma into The agriculture.

ஆனால் கடந்த ஆகஸ்ட் 2023ல் விவசாயம் குறித்து ஒரு காணொளியில் பேசியிருந்த ஜாக் மா, “விவசாயத்துறையில் வெற்றி பெறுவது ஒன்றும் அவ்வளவு கடினமில்லை. அதற்கு அதிக வளங்களும் தேவையில்லை. தனித்துவமான செயல்பாடு மற்றும் கற்பனை உள்ளவர்களால் இதில் வெற்றி பெற முடியும் என்பதை நானாகவே கண்டுபிடித்தேன். கிராமப்புறங்களுக்கு தொழில்நுட்பங்களின் தேவை எந்த அளவுக்கு முக்கியமோ, அதேபோல மற்ற துறைகளைப் போலவே விவசாயத்தில் ஜெயிப்பதற்கு படைப்பாற்றல் மற்றும் தனித்துவமான சிந்தனை முக்கியம்” என்று கூறியிருந்தார்.

இதை வைத்துப் பார்க்கும்போது, தொழில்நுட்பத்துறையில் தான் சாதித்ததைப் போலவே, விவசாயத் துறையிலும் இவர் சாதிக்க நினைக்கிறார் என்பது நமக்குத் தெரிகிறது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com