Long Distance Relationship-ல் இருப்பவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய 7 விஷயங்கள்! 

Long distance love.
Long distance love.

காதல் என்றாலே அது ஒரு மகிழ்ச்சியான உணர்வுதான் என்றாலும், அதிலும் தொலைதூரக் காதலில் இருப்பது தனிவிதமான உணர்வை நமக்குக் கொடுக்கிறது. இதில் காதலர்கள் தொலைதூரத்தில் விலகி இருப்பது இயல்பானது. இப்படி விலகி இருக்கும்போது சரியான புரிதல் இல்லாமல் போனால், அந்த உறவே முடிந்துவிடும் அளவுக்கு சென்றுவிடும். எனவே இந்த பதிவில் தொலைதூரக் காதலில் இருப்பவர்கள் கடைபிடிக்க வேண்டிய 7 விஷயங்கள் என்னவென்று பார்க்கலாம்.

1. தொடர்பு மிக முக்கியம்: லாங் டிஸ்டன்ஸ் ரிலேஷன்ஷிப்பில் கம்யூனிகேஷன் மிக மிக முக்கியமானது. சரியான சமயத்தில் பேசுவது மற்றும் போதிய இடைவெளி கொடுப்பதும் மிக முக்கியம். எந்த நேரத்தில் பேச வேண்டும், எந்த நேரத்தில் இடைவெளி கொடுக்க வேண்டும் என்பதை இருவரும் புரிந்து கொள்ள வேண்டும். இந்த உறவு நீடிக்க வேண்டும் என விரும்பினால் உங்கள் பார்ட்னரை அவ்வப்போது தொடர்பு கொண்டு விசாரியுங்கள். மேலும் உங்களுடன் சில மணி நேரங்கள் பேசாமல் போனால் தவறாக நினைத்துக் கொண்டு, உங்களை நீங்களே காயப்படுத்திகொள்ள வேண்டும். தினசரி ஒருவரை ஒருவர் அன்றைய தின நிகழ்வுகளைப் பகிர்வது உறவை பலப்படுத்தும்.

2. சார்ந்து இருக்காதீர்கள்: எந்த உறவாக இருந்தாலும் அதில் ஒருவரை மட்டுமே சார்ந்து இருப்பது நல்லதல்ல. உறவு மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்தில் சமநிலை இருப்பது அவசியம். இந்த விஷயங்களைப் பற்றி நீங்கள் அவ்வப்போது பேசிக் கொண்டு சமநிலையில் இருக்க முயலுங்கள்.

3. பரஸ்பர புரிதல் முக்கியம்: தொலைதூரக் காதலில் உங்களது பார்ட்னர் உங்கள் அருகில் இருக்கப் போவதில்லை என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். உங்கள் காதலின் நிலையை ஏற்றுக் கொண்டு, அதை அடுத்த கட்டத்திற்கு எப்படி கொண்டு போகலாம் என்பதை இருவரும் சேர்ந்து தீர்மானியுங்கள். 

4. நம்பிக்கை வையுங்கள்: பல உறவுகள் விரைவில் சீர்குலைந்து போவதற்கு நம்பிக்கையின்மை மிக முக்கிய காரணமாக உள்ளது. நம்பிக்கையே ஒரு உறவின் அடித்தளமாகும். தொலைதூரக் காதலில் நம்முடைய பார்ட்னர் நமக்கு தெரியாமல் என்னவெல்லாம் செய்கிறாரோ என்று மோசமான சிந்தனை வேண்டாம். நீங்கள் நம்பிக்கையுடன் இருந்தால், உங்கள் உறவு எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் திடமாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
"அன்பு மகளே" தேவதையை இழந்த தந்தையின் வேதனை பதிவு!
Long distance love.

5. தொழில்நுட்பத்தை சரியாக பயன்படுத்துங்கள்: நேரம் கிடைக்கும்போது வீடியோ கால் பேசுவது, மின்னஞ்சல் குறுஞ்செய்திகள் அனுப்புவது போன்றவற்றால் தொலைதூரக் காதலை உற்சாகத்துடன் வைத்துக் கொள்ள முடியும். முடிந்தவரை மாதம் ஒருமுறையாவது ஒருவருக்கொருவர் பரிசுகளை பரிமாறிக் கொள்ளுங்கள். 

6. பாராட்டுங்கள்: யாராக இருந்தாலும் அவர்களை ஒருவர் பாராட்டினால் மனதிற்கு மகிழ்ச்சியாக இருக்கும். எனவே உங்களது பார்ட்னர் செய்யும் நல்ல விஷயங்களுக்கு அவர்களை புகழுங்கள். மேலும் நீங்கள் சொல்வதை அவர் கேட்டு நடக்கும்போது, உங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினால் உங்களுக்குள் இருக்கும் பிணைப்பு மேலும் பலப்படும்.

7. சில செயல்பாடுகளை ஒன்றாக செய்யுங்கள்: தொலைதூர உறவில் நம்முடைய பார்ட்னர் அருகில் இருக்காதபோது, வீடியோ அழைப்பு மூலமாக ஒன்றாக சமைப்பது, ஒன்றாக திரைப்படம் பார்ப்பது போன்ற விர்ச்சுவல் செயல்களை மேற்கொள்ளுங்கள். மேலும் உங்களது விடுமுறையை ஒன்றாகத் திட்டமிட்டு முடிந்தவரை குறிப்பிட்ட இடைவெளியில் நேரடியாக சந்திக்க முயலுங்கள். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com