நெமவாஷி டெக்னிக்: மரங்களை வெட்டாமல் வேறிடத்தில் நடும் ஜப்பானிய டெக்னிக்!

நெமவாஷி டெக்னிக்: வளர்ச்சிக்காக இயற்கையை அழிக்காத ஜப்பானின் அதிசய முறை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
நெமவாஷி டெக்னிக் | Nemawashi technique
நெமவாஷி டெக்னிக் | Nemawashi techniqueGemini AI
Updated on

நெமவாஷி எனப்படும் ஜப்பானிய மர இடமாற்ற முறையில், சரித்திர முக்கியத்துவம் கொண்ட மரங்களை வெட்டாமல், வேர்களை சீரமைத்து புதிய வேர்கள் வளரச் செய்து, சிறப்பு பொருளால் மூடி, தயாரான குழிகளில் மாற்றி நட்டுவிடுகிறார்கள். செலவு அதிகம், சிக்கலான பணியாக இருந்தாலும், நகர வளர்ச்சியுடன் இயற்கை, பாரம்பரியத்தை இணைத்து காக்கும் தனித்த முயற்சியாக இது விளங்குகிறது.

பொதுவாக சாலைகள், ரயில்வே பாதையை அகலப்படுத்தவும் மற்றும் பெரிய கட்டடங்கள் கட்டுவதற்கும் மரங்கள் தடையாக இருந்தால் வெட்டப்படும். ஆனால், ஜப்பானில் பழமையான மரங்களை வெட்டுவது கிடையாது‌. அதை வேறிடத்தில் பெயர்த்து விடுவார்கள். இதற்கு பலமாதங்களோ, ஒருவருடமோகூட ஆகலாம்‌. மரத்தை வேறிடத்திற்கு பெயர்க்கும் போது மரத்தின் வேர்களுக்கு எந்தவித ஆபத்தும் ஏற்படாமல் புதிய இடத்தில் வைப்பதற்கான ஏற்பாடுகள் நன்கு செய்யப்படுகின்றன.

இந்த டெக்னிக்கை நெமவஷி (Nemavashi) என்று ஜப்பானில் கூறுகிறார்கள். இது பல நூற்றாண்டு காலமான தோட்டக் கலையையும் மற்றும் நவீன உத்திகளும் இணைத்துச் செய்யப்படுகிறது.

இது ஜப்பானியர்களுக்கு கலாசாரம் மீதும், இயற்கை மீதும் இருக்கும் அதீத அக்கறையை வெளிப்படுத்துகிறது‌.

மரத்தை வெட்டாமல் ஏன் இடமாற்றம்‌ செய்கிறார்கள்?

எல்லா மரங்களையும் இப்படிச் செய்வதில்லை‌. சரித்திர, கலாசார முக்கியத்துவம் கொண்ட மற்றும் சுற்றுச்சூழலுக்கு அதன் பயன்களைத் தரக்கூடிய சில வகை மரங்கள் வெட்டப் படாமல் வேறு இடத்துக்கு பெயர்க்கப்படுகிறது‌. கோவில்கள், பழமையான தோட்டங்களில் உள்ள மரங்கள் மற்றும் காலம் காலமாக சரித்திர வரலாறு உள்ள மரங்களை பாரம்பரியத்தைக் கட்டிக்காப்பதற்காக இப்படிச் செய்கிறார்கள்‌. சில இடங்களில் வளர்ச்சியை முன்னிட்டு அங்குள்ள மரங்கள் வேறு இடத்தில் வைக்கப்படுகினாறன.

இதையும் படியுங்கள்:
மருத்துவ உலகையே மிரள வைத்த பாம்பு கடி.... தியாகத்தால் விளைந்த ஒரு சூப்பர் மருந்து!
நெமவாஷி டெக்னிக் | Nemawashi technique

நெமவாஷி டெக்னிக் எனப்படும் இந்த டெக்னிக் மிகவும் செலவு அதிகமாவதாலும் மேலும் வேறிடத்துச் சூழலில் அவை நன்கு பாதுகாக்கப்படுமா போன்ற விஷயங்களில் மிகவும் அக்கறை வைத்து இதைச் செய்கிறார்கள்‌. ஒரு மரத்தைச் வேறிடத்திற்கு மாற்றுவதற்கு பல மாதங்கள் முன்பே மரங்களின் வேர்களை வெட்டிசீரமைக்கிறார்கள்‌. எல்லா வேர்களையும் வெட்டாமல் மரத்தின் அருகில் இருக்கும் வேர்களை வெட்டுகிறார்கள். இதன்மூலம் மரத்தை ஒட்டி புதிய வேர்கள் வளருகின்றன. இந்த புதிய வேர்கள் (feeder roots) மூலம் மரத்திற்கு தேவைய தண்ணீர் மற்றும் ஊட்டச் சத்துக்கள் கிடைக்கின்றன.

இதனால் வேறிடத்திற்குச் செல்லும் போது பதிய சூழலை ஏற்றுக் கொள்ளும் சக்தியை மரம் பெறுகிறது. இந்த ஏற்பாடுகள் சுமார் ஆறு மாதத்திலிருந்து ஒரு வருடம் கூட ஆகலாம்‌.

நெமவாஷி டெக்னிக் | Nemawashi technique
நெமவாஷி டெக்னிக் | Nemawashi techniqueGemini AI

வேர்களை வெட்டி மரத்தைச் சுற்றி புதிய வேர்களை வளர்க்கும் நெமவாஷி டெக்னிக் புதிய உத்தியாக கருதப்படுகிறது‌. முதன் முதலில் நெமவஷி என்ற பெயர் ஜப்பானிய தொழில்துறை மற்றும் அரசியலில் பயன்படுத்தப்பட்டது‌. புதிய மாற்றங்களை ஏறாபடுத்துவதற்கான அடித்தளம் (ground work) என்று இந்த வார்த்தையின் அர்த்தமாகும்‌. இதனடிப்படையில் மரங்களை மாற்றி வைக்கும் போது அதன் பாதுகாப்பிற்காக செய்யப்படும் ஏற்பாடுகள் 'நெமவஷி' என்று குறிப்பிடப்பட்டது‌.

ராக்ஷச மரங்களின் பாதுகாப்பு;

மரத்தின் வேர்களை மிக ஜாக்கிரதையாக ஒரு ஸ்பெஷலான பொருள் கொண்டு மூடி வைக்கிறார்கள். மரங்களின் அளவு குறித்து கிரேன்மற்றும் ஹைட்ராலிக் முறையில் மரத்தை எடுக்கிறார்கள்‌. அதற்கு முன்னதாகவே மரத்திற்கான குழி தயாராக இருக்கும்‌. மேலும் அந்த மரம் உறுதியாக பாதுகாப்பாக வளரும் படியான சூழலை ஏற்படுத்துகிறார்கள்.

இப்படி பல வேலைகள் செய்து கஷ்டப்பட்டும் கூட எல்லா மரங்களையும் பாதுகாப்பது முடியாத செயலாக உள்ளது‌. மரங்கள் சரியானபடி வேறிடத்தில் ஆரோக்கியமாக வளர அதன் வகை, அதன் வயது மற்றும் அதன் ஆரோக்கியமும் காரணங்களாக இருக்கின்றன.

இதையும் படியுங்கள்:
அழகிய தங்க மீன் இவ்வளவு ஆபத்தானதா? விஞ்ஞானிகள் சொல்லும் அதிர்ச்சி உண்மைகள்!
நெமவாஷி டெக்னிக் | Nemawashi technique

ஜப்பானில் உள்ள புதிய தலைமுறைகளுக்காக நெமவாஷி முறையில் பாரம்பரிய மரங்களை காக்க சிறந்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது‌. பழைய மரங்களை வளர்ச்சிக்குத் தடை என்று எண்ணாமல் அவை கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தைக் கட்டிக் காக்கும் அடையாளமாகவே கருதப்படுகின்றன. நகரத்தின் வளர்ச்சிக்காக இயற்கையை அழிக்காமல் பாதுகாப்பதில் நெமவாஷி டெக்னிக் உறுதுணையாக இருக்கிறது‌.

இந்த முறையைப் படிப்பதன் மூலம், நவீன வளர்ச்சிக்கும் இயற்கை பாதுகாப்புக்கும் இடையே உள்ள சமநிலையை எவ்வாறு பேணுவது என்பதற்கான ஆழமான புரிதலைப் பெற்று, சுற்றுச்சூழல் விழிப்புணர்வை உங்கள் வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தலாம்.

logo
Kalki Online
kalkionline.com