புதிய வகை கொரோனா பற்றி நாம் அறிய வேண்டியவை! 

JN1 Corona Virus.
JN1 Corona Virus.

இப்போதுதான் கொரோனா அச்சத்தில் இருந்து மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் வந்து கொண்டிருக்கும் நிலையில், உலக நாடுகள் சிலவற்றில் மீண்டும் புதிய வகை கொரோனா பரவி வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்தியாவின் கேரள மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள சம்பவம் அச்சத்தை ஏற்படுத்துகிறது. 

இந்த புதிய வகை ஓமைக்ரான் மரபணு மாற்றப்பட்ட கொரோனா உலகம் முழுவதும் பல இடங்களில் பரவி சில மோசமான தாக்கங்களை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு JN1 வகை கொரோனா என பெயர் வைத்துள்ளனர். இதனால் மற்றொரு மிகப்பெரிய கொரோனா அலை உருவாகுமோ என்ற அச்சத்தில் உலக நாடுகள் உள்ளது. 

இந்நிலையில் கொரோனா அறிகுறி உள்ள அனைவரையும் சோதிப்பது கடினம். ஆனால் மருத்துவமனையில் அறிகுறிகளுடன் உள்ளவர்களை சோதிப்பது கட்டாயம் என மருத்துவ வல்லுநர்கள் கூறுகின்றனர். அதே நேரம் வெளியில் கூட்டமான இடங்களுக்கு செல்லும்போது முகக்கவசம் அணிவது கொரோனா பாதிப்பை குறைக்கும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது. 

இதுவரை இந்தியாவில் முக்கவசம் கட்டாயமாக்கப்படவில்லை என்றாலும், கர்ப்பிணிகள், முதியவர்கள் முன்னெச்சரிக்கையாக முகக் கவசம் அணிந்து கொள்வது பாதுகாப்பானது. மேலும் யாருக்காவது சளி, இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படாமல் இருக்க முகக்கவசம் அணியலாம். 

இதையும் படியுங்கள்:
JN1: கேரளாவில் புதுவகை கொரோனா!
JN1 Corona Virus.

JN1 வகை கொரோனா வைரசின் பரவும் தன்மை அதிகமாக இருப்பதால், உலக நாடுகளுக்கு உலக சுகாதாரம் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் மூலமாக இணை நோய் உள்ளவர்கள், வயதானவர்கள், மக்கள் கூட்டமான இடங்களில் பணிபுரிபவர்கள் பூஸ்டர் டோஸ் ஊசி போட்டுக்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறார்கள். 

அதேநேரம் இது குளிர்காலம் என்பதால், பருவகால நோய் அறிகுறிகளை கொரோனா அறிகுறி என அச்சப்பட வேண்டாம் என்றும் கூறப்படுகிறது. எனவே மக்கள் சற்று எச்சரிக்கையாகவே இருங்கள். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com