கேரளாவைச் சேர்ந்த ஜான்சன் வர்கீஸ் என்பவர் வயநாடு மாவட்டத்தில் 17 ஏக்கர் நிலத்தில் சுமார் 142 வகையான மூங்கில் மரங்களை வளர்த்து வருகிறார்.
ஜான்சன் 1992ம் ஆண்டு கோழிக்கோட்டில் அறிவியலில் இளங்கலைப் படிப்பு வரைப் படித்தார். பிறகு இவரின் தந்தைக்கு பக்கவாத நோய் ஏற்பட்டதால் மேல் படிப்பு படிக்காமல் வீட்டிற்கு வந்து வீட்டு பொறுப்பை தானே எடுத்துக்கொண்டார். அவர் அப்பா வைத்திருந்த மிளகு கடையும் அவர் பொறுப்பிற்கு வந்தது. அந்தவகையில் 2010ம் ஆண்டு ஜான்சனுக்கு மூங்கில் மரங்களைப் பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டுமென்றும் அதனை வளர்க்க வேண்டுமென்றும் ஆசைப் பிறந்தது.
நாட்டின் வடகிழக்கு பகுதியில் அதிக வகையான மூங்கில் மரங்கள் இருப்பதைத் தெரிந்துக் கொண்ட ஜான்சன் அங்கு சென்று அனைத்து வகையான மூங்கில் மரங்களையும் வாங்கிக்கொண்டு வந்தார். மேலும் மனிப்பூர், நாகலாந்து, சிக்கிம், அருணாச்சலம், அசாம், திருப்புரா, ஜார்கண்ட் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய நாடுகளுக்கு பயணம் சென்று மூங்கில் மரங்களை சேகரிக்க ஆரம்பித்தார். இத்தனை வகையான மரங்களை அங்கு வளர்ப்பதற்கு முக்கிய காரணம் காலநிலையின் உதவித் தான். அதேபோல் அவருடைய வீட்டில் மட்டுமே பானைகளில் 80 தாவரங்களை வளர்த்து வருகிறார்.
இப்படி பல தரப்பட்ட மூங்கில் மரங்களை பல நாடுகளுக்குச் சென்று ஒவ்வொன்றாக சேர்த்து இப்போது 142 வகைகளை தன்னுடைய நிலத்தில் வைத்திருக்கிறார். இந்த 17 ஏக்கர் நிலத்தில் மூங்கில் மரங்கள் உட்பட சுமார் 10 ஆயிரம் தாவரங்களையும் வளர்த்து வருகிறார். அவரிடம் இருக்கும் Guadua angustifolia என்ற வகையான மூங்கில் மரங்கள் வேகமாக வளரக்கூடியவை, Dendrocalamus brandissi என்ற வகையான மரங்கள் ஒரு நாளிலேயே 2 அடி உயரம் வளரக்கூடியவை, Melocanna baccifera என்ற வகையான மூங்கில் மரங்கள் மருத்துவ குணங்கள் கொண்டவை, Golden Bamboo என்று அழைக்கப்படும் Schizostachyum branchycladum என்ற வகையான மூங்கில் மரங்கள் அணிகலன்கள் செய்ய பயன்படும் மரங்கள். இதுமட்டுமல்லாமல், Bambusa affinis, Bambusa Assamica, Bambusa Vulgaris, Tulda Variegated மற்றும் Phyllostachys Bamboosides போன்ற மூங்கில் வகைகளும் உள்ளன.
ஜான்சன் அந்த ஒவ்வொரு மரங்களின் பலன்கள் தனித்துவங்கள் என அனைத்தையும் அத்துப்படி தெரிந்து வைத்திருக்கிறார். இதனைப் பார்த்து வியந்த கேரளா குடியிருப்பு வாசிகள் அவர்களுக்குப் பிடித்த மூங்கில் மரங்களைத் தேர்ந்தெடுத்து ஓவியம் தீட்டி தருமாறு அவரிடம் கேட்பார்கள். அவர்கள் அனைவருக்குமே ஜான்சன் அதனை ஓவியங்களாகவும் பரிசளிக்கிறார்.
மூங்கில் மரங்களின் வகைகளை முழுவதுமாகத் தெரிந்துக்கொண்ட ஜான்சன் ஒவ்வொரு மூங்கில்களின் பல வேறுபாடுகளையும் தெரிந்து வைத்திருக்கிறார். அதாவது சில மூங்கில்கள் பெரியதாகவும் திடமாகவும் உள்ளன. சில மூங்கில்கள் சிறியதாக உள்ளன. சில மூங்கில்கள் எளிதாக வளையக் கூடியதாக உள்ளன. அதேபோல் மூங்கில்களின் மேல் பரப்பை பற்றி பார்த்தவுடனே விவரிக்கிறார், ஜான்சன்.