புதிய வகை பழத்தை இந்தியாவில் அறிமுகம் செய்த கேரள விவசாயி!

Gac Fruit in Kerala.
Gac Fruit in Kerala.
Published on

கேரளாவைச் சேர்ந்த ஜோஜோ என்ற விவசாயி புதிய வகை பழத்தை கேரள நிலப் பகுதியில் விளைவித்து அதிக மகசூலை பெற்று சாதனை படைத்துள்ளார்.

கேரளாவில் 2018 ஆம் ஆண்டு பேரழிவை ஏற்படுத்திய வெள்ளத்தை அடுத்து, 48 வயதான ஜோஜோ தனது வீட்டில் ஒரு மர்மமான பழத்தின் விதைகளை விதைகளை நட்டார். இதே சமயம் பலாப்பழத்தின் வளர்ச்சி முறையை ஒத்திருந்த அவர் செடிகள் செழித்து வளர்வதைக் கண்டு வியந்தார்.

இறுதியாக இந்த பழம் வியட்நாம், கம்போடியா மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளில் உள்ள விலை மதிப்பற்ற பொருளான கேக் பழத்தின் விதைகள் என்று ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. இது சீன இன் கசப்பான வெள்ளரி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த பழம் ஜோஜோவின் சாகுபடி முயற்சிகளுக்கு பயனாக அதிக மகசூலை தந்து இருக்கிறது. இந்த பழம் ஏராளமான நன்மைகளைக் கொண்டுள்ளது. இதில் ஏராளமாக சத்துக்கள் இருப்பதாக ஆய்வுகள் காட்டுகின்றன.

இது நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் பார்வை ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. இந்த பழத்தின் திறனை உணர்ந்த ஜோஜோ வெறும் பழங்களை வளர்ப்பதில் இருந்து மாறி அதன் விதைகளை பரப்புபவராக உருவெடுத்தார். இதன் மூலம் மாத வருமானமாக 15,000 ரூபாய் சம்பாதிக்கிறார். அவரது நோக்கம் வணிக ரீதியாக வெற்றி பெற்றதோடு மட்டுமல்ல, இந்தியாவில் இந்த புதிய வகை பழத்தின் சாகுபடியை அதிகரித்து இருக்கிறது.

இதையும் படியுங்கள்:
பேரிச்சம் பழம் சாப்பிட்டால் இரத்த சோகை நீங்கும் என்பது உண்மையா?
Gac Fruit in Kerala.

மேலும் இந்த பழம் மாவுச்சத்து, புரதச்சத்து மற்றும் அதிக கலோரிகளை கொண்டதாகவுய் இருக்கிறது. மேலும் இந்த பழம் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகள், முதியோர்களுக்கு ஏற்றதாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com