ஸ்கூபா டைவிங் ஆர்வலர்களை கவர்ந்திழுக்கும் 'Great Blue Hole'

'Great Blue Hole' அதன் ஆழம் மற்றும் தெளிவான நீர் காரணமாக உலகில் உள்ள அனுபவம் வாய்ந்த ஸ்கூபா டைவர்ஸை ஈர்க்கிறது.
Great Blue Hole
Great Blue Holeimg credit -wikipedia
Published on

கடலுக்கு அடியில் ஒரு துளை இருப்பது ஆச்சரியத்திற்குரிய விஷயம் இல்லையா? இந்த நீல துளை ஒரு காலத்தில் ஒரு தீவாக இருந்தது என்பதைக் கேள்விப்படும்போது ஆர்வம் இரட்டிப்பாகிறது. மத்திய அமெரிக்காவில் பெலிஸ் கடற்கரையிலிருந்து 100 கி.மீ தொலைவில் கிரேட் ப்ளூ ஹோல் (Great Blue Hole) அமைந்துள்ளது.

இது லைட்ஹவுஸ் ரீஃப் அட்டோலின் ஆழமற்ற நீரில் அமைந்துள்ள பெரிய, நீருக்கடியில் மூழ்கும் வட்ட வடிவத்தில் உள்ள இந்த கிரேட் ப்ளூ ஹோல், சுமார் 1,000 அடி அகலம் (300 மீட்டர்) மற்றும் 400 அடி ஆழம் (120 மீட்டர்) கொண்டது. இதன் பரப்பளவு 70,650 சதுர மீட்டர் (7,60,500 சதுர அடி) ஆகும்.

உலகின் மிகப்பெரிய நீல துளை, கிரேட் ப்ளூ ஹோல், ஒரு நீரில் மூழ்கிய பள்ளமாகும். இது ஒரு பிரபலமான டைவிங் இடமாகும், அதன் ஆழம் மற்றும் தெளிவான நீர் காரணமாக உலகில் உள்ள அனுபவம் வாய்ந்த ஸ்கூபா டைவர்ஸை ஈர்க்கிறது.

இது மறக்க முடியாத ஸ்கூபா டைவிங் அனுபவத்தை உறுதியளிக்கும் அதே வேளையில், இது உலகின் மிகவும் ஆபத்தான டைவ் தளங்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறது. இதில் டைவிங் செய்வதில் உள்ள சவால்கள் காரணமாக, குறைந்தது 24 டைவர்ஸை முடித்த டைவர்ஸ் மட்டுமே ப்ளூ ஹோலை ஆராய அனுமதிக்கப்படுகிறார்கள்.

அதுமட்டுமின்றி கிரேட் ப்ளூ ஹோல் டைவர்ஸுக்கு தனித்துவமான கடல்வாழ் உயிரினங்களைக் கண்டறியும் வாய்ப்பையும், அதன் செங்குத்தான சுவர்களில் அசாதாரண டைவிங் அனுபவத்தையும் வழங்குகிறது. மெக்ஸிகோவில் உள்ள சினோட்ஸ் டைவ்ஸ் போன்ற பிற உள்நாட்டு சிங்க்ஹோல் அமைப்புகளைப் போலல்லாமல், இந்த ப்ளூ ஹோலில் அதன் பக்கங்களில் அரிக்கப்பட்ட கிடைமட்ட சுரங்கப்பாதைகள் அல்லது பாதைகள் இல்லை.

புகழ்பெற்ற பிரெஞ்சு ஆவணப்படக் கலைஞரும் கடல் உயிரியலாளருமான ஜாக் கூஸ்டியோ 1971-ல் நீல துளையைப் பார்வையிட்டார். பின்னர் இதை அவர் உலகின் முதல் 10 ஸ்கூபா டைவிங் தளங்களில் ஒன்றாக அறிவித்தார். 1971-ம் ஆண்டில் அவர் அதன் ஆழத்தை வரைபடமாக்கினார்.

கிரேட் ப்ளூ ஹோலுக்குள் உள்ள நீர் வெப்பநிலை பொதுவாக 80F (27C) அளவில் நிலையானதாக இருக்கும். இருப்பினும், 90 முதல் 100 அடி (27மீ முதல் 30மீ) வரை ஒரு குறிப்பிடத்தக்க தெர்மோக்லைன் உள்ளது. அங்கு நீர் வெப்பநிலை சுமார் 72F (22C) ஆகக் குறைகிறது. தெர்மோக்லைனுக்குக் (thermocline) கீழே, தெரிவுநிலை மேம்படுகிறது, இருப்பினும் இந்த ஆழங்களுக்கு குறைந்த சூரிய ஒளி ஊடுருவுவதால் அது இருட்டாக காட்சியளிக்கிறது. கரீபியன் ரீஃப் சுறாக்கள் (Caribbean reef sharks), nurse sharks மற்றும் ஹேமர்ஹெட் (hammerheads) உள்ளிட்ட பல்வேறு கடல்வாழ் உயிரினங்கள் கிரேட் ப்ளூ ஹோலில் வாழ்கிறது.

கிரேட் ப்ளூ ஹோலின் உண்மையான அழகு 100 அடி (30 மீ) க்கு கீழே மட்டுமே தெளிவாகத் தெரியும். படகு மூலம் மட்டுமே இந்த இடத்திற்கு செல்ல முடியும். பெலிஸில் உள்ள கடலோர துறைமுகங்களிலிருந்து பகலில் பயணம் செய்ய மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. இருப்பினும், இந்த புவியியல் நிகழ்வை உண்மையிலேயே ஆராய மற்றும் அனுபவிக்க, ஒரு லைவ்போர்டு (liveaboard) மூலம் செல்வது சிறந்த வழியாகும்.

இதையும் படியுங்கள்:
கடலுக்கு அடியில் ஒரு தனித்துவமான உலகம்… அப்படி என்ன அதிசயம் இருக்கு அங்கே?
Great Blue Hole

அமெரிக்காவிலிருந்து, பெலிஸின் பிலிப் எஸ்.டபிள்யூ. கோல்ட்சன் சர்வதேச விமான நிலையத்திற்கு செல்ல (BZE) வழக்கமான நேரடி விமானங்கள் உள்ளன. கிரேட் ப்ளூ ஹோலில் ஆண்டு முழுவதும் டைவ் அடிக்கலாம், இருப்பினும், ஏப்ரல் முதல் ஜூன் வரை சிறந்த தெரிவுநிலையையும், நம்மை கடந்து செல்லும் திமிங்கல சுறாக்களைக் காண சிறந்த வாய்ப்பையும் வழங்குகிறது.

1996-ல் யுனெஸ்கோ (UNESCO) உலக பாரம்பரிய தளமாகவும், 1999-ல் ஒரு தேசிய நினைவுச்சின்னமாகவும் நியமிக்கப்பட்ட பெலிஸின் கிரேட் ப்ளூ ஹோல் (Great Blue Hole), ஆய்வுக்கு முதிர்ச்சியடைந்த ஒரு புவியியல் அதிசயமாகும்.

2012-ம் ஆண்டில், டிஸ்கவரி சேனல் 'பூமியில் உள்ள 10 அற்புதமான இடங்கள்' பட்டியலில் கிரேட் ப்ளூ ஹோலை முதலிடத்தில் மதிப்பிட்டது.

இதையும் படியுங்கள்:
பார்க்கப் பார்க்க பரவசப்பட வைக்கும் பாலி தீவுகள்!
Great Blue Hole

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com