கடலுக்கு அடியில் ஒரு தனித்துவமான உலகம்… அப்படி என்ன அதிசயம் இருக்கு அங்கே?

Sea of Cortes
Sea of Cortes

லிபோர்னியா வளைகுடா (Gulf of California) என்றும் அழைக்கப்படும் கோர்டெஸ் கடலின் (Sea of Cortes) வசீகரிக்கும் உலகில் மூழ்குவோமா வாசகர்களே?!

நீலநிற நீர்பரப்பு, சூரியன் முத்தமிட்ட கடற்கரைகள் மற்றும் கடல்வாழ் உயிரினங்களின் சொர்க்கபூமி இது. இந்த வசீகரிக்கும் கடல் பாஜா கலிபோர்னியா தீபகற்பத்திற்கும் (Baja California Peninsula), மெக்சிகன் நிலப்பரப்புக்கும் (Mexican mainland) இடையில் வடமேற்கு மெக்சிகோவில் அமைந்துள்ளது. வாருங்கள் நாம் ஒரு குட்டி ட்ரிப் போயிட்டு வருவோமா…

The Sea of Cortes: ஒரு அற்புதமான கடல் தோற்றம் மற்றும் புனைப்பெயர்கள்

ஒரு படைப்பாற்றல் மிகுந்த கலைஞன் நீர் நிறைந்த சொர்க்கத்தை எப்படி இத்தனை நுட்பமாகப் பொறித்திருப்பார் என்பதை கற்பனை செய்துபாருங்கள். அதைத்தான் பசிபிக் பெருங்கடலின் அமைந்துள்ள Cortes கடலுக்குப் போனால் நீங்கள் உணரலாம். உள்ளூர்வாசிகள் இதை ‘ஸ்பானிஷ்’ மொழியில் Mar de Cortés என்று அன்புடன் அழைக்கிறார்கள். மற்றவர்கள் இதன் கவிதைப் பெயரான Vermilion Sea என்று அழைப்பார்கள்.

புவியியல் மற்றும் கடற்கரை

ஏறக்குறைய 4,000 கிலோமீட்டர்கள் (அதாவது சுமார் 2,500 மைல்கள்) நீளமுள்ள இந்தக் கடலானது Baja California, Baja California Sur, Sonora, and Sinaloa மாநிலங்களைத் தழுவி அமைந்துள்ளது. அனைவரையும் ஈர்க்கக்கூடிய அதன் மின்னும் மேற்பரப்பு சுமார் 160,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது (அது தோராயமாக 62,000 கால்பந்து மைதானங்களின் அளவு). ஆனால், நம் மனதில் ஒன்றை வைத்துக்கொள்ள வேண்டும் டெக்டோனிக் தட்டுகள்( tectonic plates) மூலம் மாற்றப்பட்டுள்ள சிக்கலான புவியியல் சூழ்நிலை காரணமாக, இங்குள்ள ஆழம் 3,000 மீட்டருக்கு மேல் (அது ஈபிள் கோபுரங்களை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைப்பதுபோல) இருக்கும்.

கடல்வாழ் உயிரினங்கள்...
கடல்வாழ் உயிரினங்கள்...

கடல்வாழ் உயிரினங்களின் சொர்க்கம்

ஆழ் கடல் உலகத்தின் அற்புதக் காட்சிக்கு உங்களைத் தயார்படுத்திக்கொள்ளுங்கள்! கோர்டெஸ் (Cortés) கடலில் 5,000 வகையான நுண்ணிய முதுகெலும்பில்லாத உயிரினங்கள் உள்ளன. இவை கூட்டம் கூட்டமாய் வாழும். அந்த ஒவ்வொரு சிறிய உயிரினமும் sequins(பிளாஸ்டிக் தோல்) போன்ற வடிவமைப்பைக் கொண்டுள்ளதால் பளபளக்கும் கண்ணாடிபோல் காட்சி அளிக்கும். அதேபோல் குறும்புத்தனத்தைச் செய்யக்கூடிய டால்பின்கள் மற்றும் மர்மமான திமிங்கலச் சுறாக்களுடன் நீந்த வாய்ப்புகளும் உங்களுக்கு உண்டு. கடல் அந்த உயிரினங்களின் உலகமாகும். அவற்றைப் பின்தொடர்ந்து போகும்போது மெய்மறந்து போய்விடாதீர்கள்.

நாம் அங்கு போய் என்ன செய்யலாம்

நீங்கள் இயற்கை ஆர்வலராக இருந்தாலும் சரி, நிம்மதியான சூழ்நிலையைத் தேடுபவராக இருந்தாலும் சரி அல்லது அமைதிக்காக ஏங்குபவராக இருந்தாலும் சரி, இந்தக் கடற்கரை உங்களுக்கான இடமாக கண்டிப்பாக இருக்கும்.

ஸ்நோர்கெலிங் மற்றும் ஸ்கூபா டைவிங் (Snorkeling and Scuba Diving): தெள்ளத் தெளிவான ஆழத்தில் மூழ்கி, நீருக்கடியில் இருக்கும் அதிசய நிலத்தை நாம் பார்க்க முடியும். துடிப்பான பவளப்பாறைகள், வண்ணமயமான மீன் வகைகள் மற்றும் விளையாடும் கடல் சிங்கங்கள் உங்கள் ஆர்வத்தை இன்னும் தூண்ட அங்கு காத்திருக்கின்றன.

திமிங்கலத்தைப் பார்க்கலாம்: டிசம்பர் முதல் ஏப்ரல் வரை, ஹம்ப்பேக் திமிங்கலங்கள் மற்றும் அரிய நீலத் திமிங்கலங்களின் இடம்பெயரும் காட்சிகளை அங்குள்ள வழிகாட்டியால் வழிநடத்தப்படும் படகு பயணங்கள் மூலமாகப் பார்க்க இயலும்.

மலைப்பாதைகள் வழியாக ...
மலைப்பாதைகள் வழியாக ...

கயாக்கிங் மற்றும் ஸ்டாண்ட்-அப் பேடில்போர்டிங் (Kayaking and Stand-Up Paddleboarding):

மலைப்பாதைகள் வழியாக சறுக்கி, அதன் இடையில் வரும் மூச்சடைக்கக்கூடிய பாறை அமைப்புகளை ரசிக்கலாம். மேலும், உங்கள் கூடவே வரும் கடல் சிங்கங்களை உங்கள் நீர்வாழ் கூட்டாளிகளாக வைத்துக்கொள்ளலாம். அந்த அளவிற்குக் கூட்டம் கூட்டமாய் அவை அங்கு உலவும். ஆகவே கயாக் அல்லது துடுப்பு பலகையை வாடகைக்கு எடுத்து உங்கள் பொன்னான நேரத்தை செலவழித்து அங்குள்ள விஷயங்களை ஆராயுங்கள்.

இதையும் படியுங்கள்:
வெளி நாடுகளுக்கு சுற்றுலா செல்லும்போது கவனிக்க வேண்டியவை!
Sea of Cortes

சூரிய அஸ்தமனக் கப்பல்கள்: சூரியன் அடிவானத்திற்குக் கீழே மூழ்கும்போது, அமைதியான நீரில் பயணம் மேற்கொள்ளுங்கள். சுற்றிலும் கடல் தங்க நிறத்தில் மின்னும். அந்த அனுபவத்தை வார்த்தைகளால் கூறமுடியாது. காணத்தான் முடியும்; அதனால் போய் பாருங்கள்.

பாலைவன சாகசங்கள்: கரையோரத்திற்கு அப்பால், கரடுமுரடான பாலைவன நிலப்பரப்புகளை ஆராயுங்கள். ஜீப் சஃபாரிகள், ஒட்டக சவாரிகள் மற்றும் ஹைகிங் பாதைகள் மூலம் பாஜா கலிபோர்னியாவின் வறண்ட அழகைக் கண்டுகளிக்கலாம்.

நீருக்கடியில் புகைப்படம் எடுத்தல்: கெலேடோஸ்கோப் மூலம் கடல்வாழ் உயிரினங்களைப் பார்ப்பதுபோன்ற உணர்வைத் தரும் படங்களை capture செய்யுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com