
இயற்கையின் நன்மைகளை இறைவனுடன் கலந்து வைத்து இயற்கையையும் வழிபாட்டில் வைத்தார்கள் முன்னோர்கள்.
எல்லா கோயில்களிலும் மூலவர் எனும் கோவிலில் இறைவன், இறைவி, பரிவாரம் தேவதைகள் பல கடவுள் உருவங்களை வழிபட்டாலும் இந்த கோவிலின் தல மரமாக ஒரு தொன்மையான மரம் திகழும் அதுவே அந்த ஊர் மக்களுக்கு மிகவும் தேவைப்படும் ஒன்றாக சுவாசிக்க காற்றாகவும், மருந்தாக உண்ணபயன் தரும் என்பதை நாம் அறிய வாய்ப்பு இல்லை.
மரங்கள் பிராணவாயு தர மட்டுமல்ல, நிழலில் அமர வியாதியையும் தீர்க்கும். சில மரங்களின் நிழலில் அமரும்போது வியாதிகள் சரியாகிவிடும். இந்த மரங்களின் மிதமான காற்று உடலில் படும்போது அந்த மரத்தின் காற்றால் சரியாகக்கூடிய வியாதிகள் விலகிவிடும், என்பதை முன்னோர் நன்கு உணர்ந்தே அத்தகைய மரங்களை தல விருட்சங்களாக கோவில்களில் வளர்த்தனர்.
குறிப்பிட்ட மலர்களில் உள்ள தேன் அதன் தனித்தன்மையால் உடல் பாதிப்பை தீர்ப்பதுபோல அரியவகை மரங்களின் காற்று மனிதரின் உடல் நலத்தை சீராக்கும். அந்த வகையில் கிளுவை மரத்தின் நன்மைகளைப் பார்ப்போம்.
வியாதிகளுக்கு அருமருந்து கிளுவை மரம்!
அடுக்கடுக்கான இலைகள் அமைப்பில் நீண்ட தண்டுகளுடன் காணப்படும் கிளுவை மரங்கள் கிராமப்புறங்களில் வயல்களில் பயிரிட்டுள்ள நெல் மணிகளை கால்நடைகள் மேய்ந்து விடாமல் பயிரைக்காக்கும் வண்ணம் வேலிகள் அமைத்து அந்த வேலிகளுக்கு அரணாக கிளுவை உள்ளிட்ட மரங்களை நட்டு வைப்பர்.
இது புளிப்புடன் துவர்க்கும் குணமுடைய கிளுவை மரத்தின் இலைகள், வேர், தண்டு, பட்டை மற்றும் பிசின் போன்றவை மனிதர்களின் வியாதிகள் தீர்க்க இயற்கை அளித்த நல்ல கொடையாகும்
கிளுவை மரத்தின் பயன்கள்
பொதுவாக கிளுவை மரங்கள் மனிதர்களின் நரம்புத் தளர்ச்சி வியாதிகளை போக்கவும், சிறுநீரக கற்கள் பாதிப்புகள் நீக்கி சிறுநீரகத்தை காக்கும் அருமருந்தாக சித்த மருத்துவம் கூறுகிறது.
கல்லீரல் வீக்கம்
கல்லீரல் வீக்கத்தை போக்கவும் எலும்பு தேய்மான வியாதிகளை சரி செய்யும் மூல வியாதியை விலக்கவும், மலச்சிக்கலை சரியாக்கவும், ஞாபகம் மறதியை போக்கி நினைவாற்றலை அதிகரிக்கும். பெண்களின் மாதாந்திர கோளாறுகளை சரி செய்யும் வல்லமை மிக்கது கிளுவை மரம். உடல் பாதிப்புகள். கிளுவை இலைகளை நீரில் நன்கு கொதிக்க வைத்து, அந்த நீரை பருகிவர உடல் பாதிப்புகள் விலகும்.
உடல் எடை குறைப்புக்கு பக்க விளைவுகள் இல்லாத சிறந்த இயற்கை நிவாரணியாக பிசின் விளங்குகிறது. இதனை வறுத்து தூளாக்கி நேரில் குளிக்க வைத்து சாப்பிட்டு வர அதிக உடல் எடை குறைந்து உடல் வனப்பு பெறுவார்கள். கண்ணீரை நீக்கத்தால் கல்லீரல் செயலிழக்கும் கடுமையான நிலையை சரி செய்யும். கிளுவைப் பிசினை தூளாக்கி வெந்நீரில் கலந்து தினமும் காலையில் பருகி வந்தால் தானே சரியாகும்.
சரும நோய்கள் தீரும்
உடலில் உள்ள கட்டிகளை கரைத்து பக்கவாதத்துக்கும் மருந்தாகிறது. கிளுவை இலையை அரைத்து சருமத்தில் தடவி வர வெண் குஷ்டம், சரும வியாதிக்கு நல்ல மருந்தாகும். இம் மரப்பிசினை நீரில் இட்டு ஊறவைத்து வடிகட்டி பருகிவரலாம்.
சுவாச பாதிப்பு
சிலருக்கு சுவாச பாதிப்புகளால் தொண்டையில் புண் உண்டாகி பேச முடியாமல் அவதிப்படுவர். அவர்கள் கிளுவை பிசினை தண்ணீரில் இட்டு சூடாக்கி அந்த நீரில் வாய் கொப்பளித்தால் விரைவில் தொண்டை புண் ஆறிவிடும்.
வயிற்றுக் கடுப்பு
சிலருக்கு உடல் சூட்டினால் கடுமையான வயிற்று கடுப்பு ஏற்பட்டு சிறுநீர் கழிக்க முடியாத அளவுக்கு வேதனைஏற்படும். இந்த பாதிப்புகள் நீங்க கிளுவை இலைகளை நன்கு அரைத்து கடைந்த மோரில் கலந்து பருகி வந்தால் வயிற்றுக் கடுப்பு பாதிப்புகள் அனைத்தும் நீங்கிவிடும்.
நம்முடைய எலும்பு மூட்டுகளுக்கு இடையே உள்ள பசையை உற்பத்தி செய்யும் அபூர்வமான மூலிகை மரம்தான் கிளுவை. பொதுவாக வேப்பமரத்தின் காற்ைறை சுவாசிப்பது மிக ஆரோக்கியமானது என்று நமக்கு தெரியும். அதேபோல இந்த மரத்தில் காற்றுபட்டாலே வியாதிகள் எல்லாமே தீருமாம்.