40 வயதுக்கு மேல் 'புது பறவையாய்' அவதாரம் எடுக்கும் 'பறவைகளின் அரசன்' - பிரமிப்பூட்டும் நிகழ்வு!

Eagle
'King of Birds' Incarnates as 'New Bird' Over 40 Years
Published on

பறவை இனங்களிலே மிக வேகமான மற்றும் விவேகமான பறவை என்றால் அது கழுகு தான். மிகவும் தைரியமான, தந்திரம் மிகுந்த அறிவார்ந்த பறவை கழுகு. கழுகு  எப்போதும் மற்ற பறவைகளோடு சேர்ந்து பறக்காது. தனியாவே  பறக்கும். வானத்தில் பறக்கும் போது நீண்ட நேரம் கூட அதன்  இறக்கைகளை அசைக்காமலே பறக்கும் தன்மை உடையது. கழுகுகள் தனது இரையைப் பிடிக்க சுமார் 320 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்குமாம். 

கழுகின் வேட்டையாடும் திறன் மற்ற பறவைகளை விட தனித்துவமானது. இலக்குகளை சரியாக அடைவதில் கழுகு மிகவும் தனித்துவமானது. சுமார் 5 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள இரையை கூட சரியாக குறி பார்த்து எந்த வித கவனச் சிதறலும் இல்லாமல் அதனால் வேட்டையாட முடியுமாம். நீர்வாழ் பறவைகளை வேட்டையாடும் போது, அவற்றின் கழுத்துப் பகுதியை ஒரே தாக்குதலில் கூட முழுமையாக துண்டித்து விடுமாம் கழுகுகள். 

கழுகுகள் கிட்டத்தட்ட 6 முதல் 10 கிலோ எடை உள்ள விலங்குகளை கூட தாக்கும் வலிமை உடையவை. அவ்வாறு எடை அதிகமான விலங்குகளை தாக்கும் போது, அதன் எடையை கழுகுகளால் தூக்க முடியாத போது, சிறிது தூரம் தூக்கி சென்று உயரமான இடத்திலிருந்து கீழே போட்டு விடுமாம். அப்படி கீழே விழும் இரையானது அடிபட்டு கீழே விழும் போது அதனை தனக்கு உணவாக்கிக் கொள்ளுமாம். 

கழுகுகள் கிட்டத்தட்ட 10000 அடி  முதல் 15000 அடி உயரத்தில் கூட பறக்கும் தன்மை உடையவை. கழுகால் வானத்தில் பறந்து கொண்டே தண்ணீரில் உள்ள மீன்களை  கூட மிக துல்லியமாக வேட்டையாட முடியும். சில நேரங்களில் சுறா மீன், சிறிய முதலைகளை கூட வேட்டையாடி விடும்.

மற்ற பறவைகளை விட கழுகுகளின் இறக்கைகள் மிகவும் தனித்துவம் வாய்ந்தவை. அதன் இறக்கைகள் கிட்டத்தட்ட 7.8  அடி நீளம் வரை இருக்கும். கழுகால் அதன் இறக்கைகளை பயன்படுத்தி நீரில் நீந்த முடியும். 

கழுகின் கண் பார்வை மிகவும் கூர்மையானது. கழுகின் கண்களில் மட்டும் கிட்டத்தட்ட 10 லட்சம் பார்வை செல்கள் இருக்கின்றன. இதனால் மனிதனை விட 2 லட்சம் மடங்கு துல்லியமாக பார்க்க முடியும்.

கழுகுகள் எப்போதும் உயிருடன் இருப்பதை மட்டுமே சாப்பிடும். பிற விலங்குகள் வேட்டையாடியதையோ அல்லது செத்துப்போன இரையையோ சாப்பிடாது. கழுகுகள் நரி மற்றும் கரடியை கூட சில நேரங்களில் அபாரமாக தாக்கும் தன்மை உடையவை. அந்த தாக்குதலில் கழுகால்  முழுமையாக வெற்றி பெற முடியாவிட்டாலும் எதிரியின் உடம்பில் மிகப் பலமான காயங்களை ஏற்படுத்தி விடுகிறது. கழுகுகளின் உடலில் மிகவும் வலிமை வாய்ந்ததாக பார்க்கப்படுவது அதன் அலகு, கூர்மையான கண்கள், கால் நகங்கள்.

இதையும் படியுங்கள்:
தேசியப் பறவையாக அமெரிக்காவுக்குப் பெருமை சேர்க்கும் வழுக்கை கழுகு!
Eagle

கழுகின் ஆயுட்காலம் 70 ஆண்டுகள். ஆனால் 40 வயதுக்கு மேல் கழுகு அதன் உடலில் உள்ள வலிமையை இழந்து விடுமாம். அப்பொழுது உயரமான மலைகளின் மேல் கூடு கட்டும். அவ்வாறு கூடுகட்டி வாழும் போது தன்னுடைய அலகுகளை பாறைகளில் மோதி மோதி உடைத்துக் கொள்ளுமாம். மேலும் தன் உடலில் உள்ள எல்லா இறக்கைகளையும் பிய்த்து எறிந்து விட்டு, கால் நகங்களையும் உடைத்துக் கொள்ளுமாம். கிட்டத்தட்ட 5  மாதங்கள் வரை கூட அந்தக் கூட்டுக்குள்ளே ஒரு ரகசியமான வாழ்க்கையை வாழுமாம். அந்த 5 மாத காலத்தில் அதன் உடலில் மறுபடியும் புதிதான அலகு, நகங்கள், இறக்கைகள் முளைத்து விடுமாம். மறுபடியும் புத்தம் புது பறவையாய் அவதாரம் எடுத்து சீறிப்பாயத் தொடங்கி விடுமாம். 

கழுகு எவ்வளவோ விலங்குகள், பறவைகளை வேட்டையாடினாலும் அதற்கு மிகவும் பிடித்த உணவு என்றால் பாம்புகள் தான். அவ்வாறு பாம்புகளை வேட்டையாடும் போது பாம்புகள் தன்னை கொட்டி விடாத அளவுக்கு மிகவும் சாதுரியமாக அதனை எதிர்கொள்ளும் தன்மை உடையவை கழுகுகள்.

கழுகுகளால் இறக்கைகளை அசைக்காமல் பல மணி நேரம் கூட ஒரே நேரத்தில் வட்டமடித்துக் கொண்டே பறக்க முடியும். கழுகுகள் ஒரே இடத்தில் வட்டமடித்துக் கொண்டிருந்தால் அந்த இடத்தில் ஏதோ ஒரு ஆபத்து நிகழப் போகிறது என்பதை அறிந்து கொள்ள முடியும். 

பொதுவாக மழை பெய்யும் போது அனைத்து பறவைகளும் மரங்களையோ அல்லது மறைவான இடங்களைத்  தேடியோ ஓடி மறைந்து கொள்ளும். ஆனால் கழுகுகள் மட்டும் மழை பெய்யும் போது மேகங்களுக்கு மேலே பறந்து சென்று மழையில் இருந்து தப்பித்துக் கொள்ளும்.

கழுகின் இத்தகைய சிறப்பான, தனித்துவமான பண்புகளால் அது வானத்தின் அரசன் மற்றும் பறவைகளின் அரசன் எனவும் அழைக்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com