தேசியப் பறவையாக அமெரிக்காவுக்குப் பெருமை சேர்க்கும் வழுக்கை கழுகு!

வழுக்கை கழுகு
வழுக்கை கழுகு
Published on

வ்வொரு நாட்டிற்கும் தனித்துவமான சொந்த அடையாளங்கள் அந்நாட்டின்  வளமான கலாசாரம் மற்றும் பாரம்பரியத்திற்கு உள்ளார்ந்தவையாக அறியப்படுகின்றன. சமீபத்தில் அமெரிக்காவின் தேசிய பறவையாக அறிவிக்கப்பட்டுள்ள வழுக்கை கழுகு அல்லது வெள்ளைத்தலை கழுகு சுமார் 200 வருடங்களுக்கும் மேலாக தொடர்ந்து அந்நாட்டின் தேசியப் பறவையாக இருப்பது சிறப்பு. அவற்றைப் பற்றிய சில தகவல்களை இப்பதிவில் பார்ப்போம்.

அறிவியல் ரீதியாக, ‘ஹாலியேட்டஸ் லுகோசெபாலஸ்’ என்று அழைக்கப்படும் வழுக்கை கழுகுகள் அலாஸ்கா, கனடா மற்றும் வடக்கு மெக்சிகோ போன்ற இடங்களில் வாழ்கின்றன. குறிப்பாக சொல்ல வேண்டுமானால் இந்தப் பறவைகள் வட அமெரிக்காவை மட்டுமே பூர்வீகமாகக் கொண்டுள்ளன.

அமெரிக்க தேசிய ஆவணக் காப்பகத்தின்படி, 1782ல் புதிதாக அமைக்கப்பட்ட காங்கிரஸிடம் வழுக்கை கழுகு பறவையை அமெரிக்காவின் அடையாளமாகப் பயன்படுத்த வரைதல் மசோதா தரப்பட்டு, அது அங்கீகரிக்கப்பட்டு மேலும் அதில் ஆலிவ் கிளைகள் மற்றும் அம்புகள் கழுகின் கூர்மையான, கொக்கி நகங்களில் சேர்க்கப்பட்டது. ஆலிவ் கிளை மற்றும் அம்புகள் முறையே அமைதி மற்றும் போரை குறிக்கின்றன. பிறகு 1787ல் அமெரிக்காவின் தேசியப் பறவையாக வழுக்கை கழுகு முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. தொடர்ந்து உத்தியோகபூர்வ ஆவணங்கள், நாணயம், கொடிகள், பொது கட்டடங்கள் மற்றும் அமெரிக்க அரசாங்கத்துடன் தொடர்புடைய பிற பொருட்களில் வழுக்கை கழுகு அரசு அடையாளமாக முக்கியமான இடம்பெற்றுள்ளதைப்  பார்க்கலாம். மேலும், ராணுவம் மற்றும் அரசாங்க வணிகங்கள் இரண்டும் அதை தங்கள் எழுதுபொருட்களில் பயன்படுத்தப்படுகிறது.

அசாத்திய வலிமை, தைரியம், சுதந்திரம் மற்றும் நீண்ட ஆயுள் ஆகியவற்றின் அடையாளங்களாகக் கருதப்படும் வழுக்கை கழுகை தேசிய சின்னமாக அறிவித்ததால் சில சர்ச்சைகளும் எழுந்துள்ளன. காரணம், மோசமான தார்மீக குணம் கொண்ட பறவை அது என்பதும் கூர்மைப்படுத்துதல் மற்றும் கொள்ளையடிப்பதன் மூலம் வாழும் மனிதர்களைப் போலவே அதுவும் பெரும்பாலும் மிகவும் கேவலமானது என்றும் 18ம் நூற்றாண்டில் அமெரிக்க விஞ்ஞானி, எழுத்தாளர் மற்றும் அரசியல் தத்துவவாதியான பெஞ்சமின் ஃபிராங்க்ளின் தனது நண்பருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்ததன்  மூலம் அறியலாம்.

இதையும் படியுங்கள்:
தயக்கத் தடைக்கற்களை தகர்த்தெறிய பெண்களுக்கு சில ஆலோசனைகள்!
வழுக்கை கழுகு

வழுக்கைக் கழுகை தேசத்தின் சின்னமாகத் தேர்ந்தெடுத்தபோது, ‘பொருத்தமான தேர்வு. இந்தப் பெரிய பறவையின் கடுமையான அழகு மற்றும் பெருமைமிக்க சுதந்திரம் அமெரிக்காவின் வலிமையையும் சுதந்திரத்தையும் சரியாகக் குறிக்கிறது’ என்று ஜனாதிபதி ஜான் எஃப்.கென்னடி  பறவைகள் மற்றும் அவற்றின் வாழ்விடங்களைப் பாதுகாப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்ட அமெரிக்க இலாப நோக்கற்ற சுற்றுச்சூழல் அமைப்புக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டு பெருமை சேர்த்துள்ளார்.

வழுக்கை கழுகுகள் உண்மையில் வழுக்கையா எனில் இல்லை. அதன் வெள்ளைத் தலையால் ஒருவேளை வழுக்கையாகத் தோன்றலாம். பெண் வழுக்கை கழுகுகள் ஆண் கழுகுகளை விட பெரியவை. பட்டாம்பூச்சி ஸ்ட்ரோக்கைப் போலவே தோற்றமளிக்கும் ஒரு ரோயிங் இயக்கத்தில் அவை வெறுமனே இறக்கைகளை நகர்த்துகின்றன. வழுக்கை கழுகுகள் தொண்டைக்குக் கீழே உள்ள தசைப் பையில் அதிகப்படியான உணவை ஒதுக்குகின்றன. ‘க்ராப்’ என்று அழைக்கப்படும் இந்தப் பை, வெளியில் இருந்து பார்த்தால் பருமனாகத் தோற்றமளிக்கிறது.

அழிவிலிருந்து மீட்டெடுக்கப்பட்டு  மீண்டும் அமெரிக்காவின் தேசிய சின்னமாகி இருக்கும் வழுக்கை கழுகு தற்போது உலகத்தின் கவனத்தைப் பெற்றுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com