கடலில் கலக்காத லுனி நதியைப் பற்றி அறிவோம்!

லுனி நதி
Luni Riverhttps://lakesofindia.com
Published on

ரவல்லி மலைத்தொடரின் மேற்கே ராஜஸ்தானின் அஜ்மீர் மாவட்டத்தில் உள்ள நாக் பஹார் அல்லது நாகா மலைகளில்  இருந்து உருவாகும் மிகப் பெரிய நதி  லுனி ஆகும். இது புஷ்கர் பள்ளத்தாக்கில் உருவாகி தார் பாலைவனத்தின் தென்கிழக்கு பகுதியைக் கடந்து, 495 கி.மீ தூரம் பயணித்த பிறகு, ‘ரான ஆஃப் கட்ச்’ சதுப்பு நிலத்தில் முடிவடைகிறது. இது முதலில் சாகர்மதி  என்று அழைக்கப்பட்டது. பின்னர் கோவிந்த்கரை கடந்து அதன் துணை நதியான சரஸ்வதியை சந்திக்கிறது. அதிலிருந்து அது, ‘லுனி’ என்று அழைக்கப்படுகிறது.

லுனி ஆற்றில் உள்ள அணைகள்:

1. சிபு அணை லுனி ஆற்றின் அருகே அமைந்துள்ளது. இருப்பினும் அது நேரடியாக ஆற்றில் இல்லை. மாறாக, இது பனாஸ் நதியுடன் கலக்கும் சிபு நதியில் அமைந்துள்ளது.

2. 1892ம் ஆண்டில், ஜோத்பூரின் மஹாராஜா ஜஸ்வந்த் சிங் ஜோத்பூர் மாவட்டத்தின் பிலாரா மற்றும் பாவி இடையே பிச்சியாக் கிராமத்தில் ஜஸ்வந்த் சாகர் அணையை கட்டினார். இது இந்தியாவின் மிகப் பெரிய செயற்கை ஏரிகளில் ஒன்றாகும். இதன் மூலம் 12,000 ஏக்கர் நிலம் நீர்பாசனம் பெறுகிறது. இது இந்தியாவின் உள் வடிகால் ஆறுகளில் ஒன்றாகும். இது அரபிக்கடலை அடைவதற்குள் வடிகட்டப்படுகிறது.

லுனி நதி நீரின் உப்புத் தன்மை காரணமாக. ‘உப்பு நதி’ (லவனாவரி) என்று  சமஸ்கிருதத்தில் பொருள் படும். அதிக உப்பு தன்மை இருந்தபோதிலும் லுனி இப்பகுதியில் ஒரு முக்கிய நதி மற்றும் நீர் பாசனத்தின் முதன்மை ஆதாரமாக விளங்குகிறது. லுனி நதியின் இரண்டு பெரிய நீர்பாசனத் திட்டங்கள் சர்தார் சமந்த் அணை மற்றும் ஜவாய் அணை.

லுனி ஆற்று நீரின் தரம்  குறைவதற்கு, அதன் கரையோரத்தில் அமைந்துள்ள பலோத்ரா, பிதுஜா, ஜசோல் மற்றும் பாலி உள்ளிட்ட ஜவுளித் தொழில்களால் அபாயகரமான மாசுக்களை வெளியேற்றுவதே முதன்மையான காரணம் ஆகும். மாசுபாடு ஆற்றின் இயற்கையான ஓட்டத்தை இழந்து பலோத்ராவை  அடையும்போது நன்னீரானது உப்பு நீராக மாறுகிறது. இந்த மாசுபாடு ஆற்றை பாதிப்பது மட்டுமன்றி, சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள நிலத்தடி நீர் மற்றும் மேற்பரப்பு நீர்நிலைகளையும் மாசுபடுத்துகிறது.

லுனி நதியின் மாசுபாட்டை எதிர்த்துப் போராடுவதில் தனி நபர்களும், அமைப்புகளும், தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ‘பிரதுஷன் நிவாரன் மற்றும் பர்யவர்ண் சன்ரக்ஷன் சமிதி‘ என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் இந்நதி மாசுபாட்டிற்கு எதிரான போராட்டத்தில் முன்னணியில் உள்ளது. அவர்களின் முயற்சி என்னவென்றால், நதி விதிமுறைகளை அமல்படுத்துவதற்கு வாதிடுவது, இந்தப் பிரச்னை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது, அசுத்தமான தண்ணீரால் பயிர்கள் சேதமடைந்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவது போன்றவை ஆகும்.

இதையும் படியுங்கள்:
பற்று போட்டால் பறந்து போகும் பச்சிலைகளும் பலன்களும்!
லுனி நதி

லுனி நதியின் துணை நதிகள்: லில்ரி, குஹியா, சுக்ரி, ஜவாய், பாண்டி, காரி பாண்டி, சுக்ரி பாண்டி மற்றும் சாகி ஆகியவை லுனியின் முக்கிய துணை நதிகள். ஜோஜ்ரி வலமிருந்து லுனி ஆற்றில் இணையும் ஒரே பெரிய துணை நதி ஆகும்.

தேசிய பசுமை தீர்ப்பாயம் (N.G.T) மற்றும் ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் ஆகியவை லுனி நதியின் மாசு பிரச்னையை தீர்ப்பதில் குறிப்பிடதக்க பங்கு வகித்துள்ளன. மேலும். ஜவுளி சாயமிடும் அலகுகளிலிருந்து மாசுபடுவதால் லுனி நீர் பாசனத்திற்கு தகுதியற்றது என்று அறிவித்தது. பசுமை விதிகளை மீறியதற்காக 800 ஜவுளி அலகுகளை மூட நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com