பற்று போட்டால் பறந்து போகும் பச்சிலைகளும் பலன்களும்!

பச்சிலை மூலிகை பற்று
பச்சிலை மூலிகை பற்று
Published on

சில உடல் பிரச்னைகளுக்கு எளிமையாகத் தீர்வு காண மூலிகை பற்று போடுவது எப்பொழுதும் நாம் கடைபிடிக்கும் பழக்கம். நம் கைக்கெட்டும் தொலைவில் இருக்கும் சில பச்சிலைகளைக் கொண்டு பற்று போடுவது எப்படி? எந்தெந்த மூலிகையை அரைத்துப் பற்று போட என்ன பலன் கிடைக்கும் என்பதை இந்தப் பதிவில் காண்போம்.

* நெருஞ்சில் இலை, தும்பை இலை, நொச்சி இலை, மாவிலை, அத்திப்பட்டை, வேப்பம்பட்டை இவற்றை நன்கு அரைத்து பசைப் போல செய்து இதனை உடலெங்கும் பூசி விட காய்ச்சல் குறையும். மேலும் இதனை நெற்றியில் பற்று போட தலைவலி குணமாகும்.

* லவங்கப் பட்டையுடன், சின்ன வெங்காயம், கடுகு சேர்த்தரைத்து நெற்றியில் பற்று போட தலைவலி குணமாகும்.

* சித்தரத்தையை பச்சையாக எடுத்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றிட தலைவலி மற்றும் தலைபாரம் குணமாகும்.

* சிறு உள்ளியை நன்கு அரைத்து நெற்றியில் பற்றிட தலைவலி குணமாகும்.

* லெமன் கிராசினை நன்குக் கசக்கி அந்தச் சாற்றினை நெற்றியில் பற்றிட தலைவலி குணமாகும்.

* சவுக்கு இலைகளை நன்கு அரைத்து பித்த வெடிப்பு உள்ள இடங்களின் மீது பற்றிட்டு வர, பித்த வெடிப்பு குணமாகும்.

* தண்ணீர் விட்டான் கிழங்கின் இளம் தண்டு மற்றும் இலைகளை நன்கு அரைத்து பித்த வெடிப்பு உள்ள இடங்களில் பற்றிட பித்த வெடிப்பு விரைவில் குணமாகும்.

* சிறுகுறிஞ்சான் இலைகளை நன்கு அரைத்து மூட்டு வலி உள்ள இடத்தின் மேலே பற்றிட்டு வர மூட்டு வலி குணமாகும்.

* சிவலிங்கக் கொடியிலைகளை நன்கு அரைத்து மூட்டு வலி உள்ள இடத்தின் மேலே பற்றிட்டு வர மூட்டுவலி குணமாகும்.

* தொட்டால் சிணுங்கி இலைகளுடன் சிறிது மஞ்சள் வைத்து அரைத்து மூட்டு வலி உள்ள இடத்தின் மேலே தினமும் இரவு வேளைகளில் பற்றிட்டு வர மூட்டு வலி குணமாகும்.

* பூனைக்காலி விதைப்பருப்பை நன்கு அரைத்து மூட்டு வலி உள்ள இடத்தின் மீது இரவு வேளைகளில் தொடர்ந்து பற்றிட்டு வர மூட்டு வலி குணமாகும்.

* எள்ளு விதைகளை புதியதாக எடுத்து சிறிது தேங்காய் எண்ணெய் ஊற்றி நன்கு அரைத்து உடல் முழுவதும் பூசி விட்டால் சரும நோய்கள் குணமாகும்.

* குப்பைமேனி இலைகளை நன்கு அரைத்து நோய் உள்ள இடங்களில் பூசி வர சரும நோய்கள் குணமாகும்.

* தேள் கொடுக்குயிலை, ஆவார இலை, நொச்சி இலை இவற்றை சம அளவு எடுத்து நன்கு அரைத்து நோயுற்ற பகுதிகளில் தினம் இரண்டு வேளை பூசி வர 15 நாட்களில் சரும நோய்கள் குணமாகும்.

இதையும் படியுங்கள்:
தயக்கத் தடைக்கற்களை தகர்த்தெறிய பெண்களுக்கு சில ஆலோசனைகள்!
பச்சிலை மூலிகை பற்று

* நீர் நொச்சி இலைகளை சிறிது வேப்ப எண்ணெய் சேர்த்து அரைத்து உடல் முழுவதும் பூசிக் குளிக்க சரும நோய்கள் குணமாகும்.

* புன்னை இலைகளை அரைத்து சரும நோய் உள்ள இடங்களில் பூசி வர குணம் கிடைக்கும்.

* தொட்டால் சிணுங்கி இலை, விஷ்ணு கிரந்தி, கோவைவேர், நன்னாரி வேர் இவற்றை நன்கு அரைத்து பருக்கள் உள்ள இடத்தின் மீது பூசி வர பருக்கள் குணமாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com