கொளுத்தும் வெயிலிலும் ஒரு நன்மை இருக்கிறது; எப்படி தெரியுமா?

Salt
உப்பளங்கள்https://ruralindiaonline.org
Published on

‘கொளுத்தும் வெயிலில் நன்மையா?’ என்று எண்ணாதீர்கள்! உண்மையிலேயே வெயில் கொளுத்தினாலும் அதிலும் ஒரு நன்மை இருக்கத்தான் செய்கிறது என்பதை இப்பதிவில் காணலாம்.

புதுச்சேரிக்கு அடுத்த தமிழகப் பகுதியான  மரக்காணம் கிழக்கு கடற்கரை சாலை அருகே 3500 ஏக்கர் பரப்பளவில் உப்பளம் உள்ளது. இதில் இரண்டாயிரத்திற்கும் அதிகமான தொழிலாளிகள் உப்பு உற்பத்தி பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்த ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த மஞ்சள் அலர்ட்டும் உப்பு உற்பத்தி செய்வதற்கு உதவியாகத்தான் இருக்கிறது என்று கூறப்படுகிறது.

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் பகுதியில் 100 டிகிரி தாண்டி கடுமையான சுட்டெரிக்கும் வெயிலுடன் அனல் காற்றும் வீசிக்கொண்டிருக்கிறது. இதன் காரணமாக உப்பு உற்பத்தி இங்கு அதிகரித்துள்ளது. கடும் வெயிலின் காரணமாக வழக்கத்திற்கு மாறாக, 400 டன் உப்பு நாள் ஒன்றுக்கு உற்பத்தி செய்யப்படுவதாகக் கூறுகின்றனர். உப்பு விவசாயத்தை நம்பி உள்ள தொழிலாளர்களுக்கு இது அதிக லாபம் ஈட்டித் தருவதால் மகிழ்ச்சியுடன் காணப்படுகிறார்கள்.

அன்றாடத் தேவைகளில் முக்கியமானது உப்பு. சமையலில் முக்கியப் பங்கு வகிக்கும் உப்பு இல்லை என்றால் சமையலில் ருசி இல்லை. உணவில் பயன்படுத்தப்படும் உப்பு, நம் உடல் நலத்துக்கு தேவையான முக்கியமான பொருளாகும். சோடியம் குளோரைடு என அழைக்கப்படும் சாதாரண உப்பே நம் உணவில் பயன்படுகிறது.

இதையும் படியுங்கள்:
பிக்மேலியன் விளைவால் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரியுமா?
Salt

கடல் நீரை ஆவியாக்கி உப்பளங்கள் மூலம் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. சுமார் 8000 ஆண்டுகளுக்கு முன்னரே உப்பை பதப்படுத்தும் வழக்கம் மக்களிடையே இருந்து வந்துள்ளது என்பதற்கான சான்றுகள் உள்ளன. உருமேனியா நாட்டின் ஒரு பகுதியில் வாழ்ந்த மக்கள் ஊற்று நீரை கொதிக்க வைத்து உப்பை பிரித்தெடுத்துள்ளனர். சீனாவிலும் இதேபோல் உப்பு உற்பத்திப் பணிகள் நிகழ்ந்துள்ளன. உப்புக்காக போர்களும் நடைபெற்றுள்ளன. வெனிஸ் ஜெனோவாவுடன் மோதி வெற்றி பெற்றதாக சரித்திரம் சொல்கிறது. வணிகத்தில் உப்பு முக்கியமான ஒரு இடத்தை பிடித்திருந்தது.

உப்பு தயாரிக்கும் முறைகள்: கடல் நீரை பாத்திகளில் பாய விட்டு வெயிலின் வெப்பம் காரணமாக கடல் நீர் ஆவியாகி அடியில் உப்பு படிந்து விடும். இப்படி உப்பளங்கள் மூலம் எடுக்கப்படும் உப்புகள் ஒருபுறம். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி போன்ற நாடுகளில் உப்பு நீர் கிணறுகள் தோண்டி உப்பு தயாரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. உப்பு நீர் ஏரிகளிலிருந்தும் உப்பு தயாரிக்கப்படுகிறது. வட இந்தியாவின் பல பகுதிகளிலும், உலகின் பல்வேறு இடங்களிலும் தரைப்பகுதிகளில் சுரங்கம் அமைத்து உப்பை வெட்டி எடுக்கிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com