பிக்மேலியன் விளைவால் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரியுமா?

Pygmalion
Pygmalionhttps://www.quidlo.com

பிக்மேலியன் விளைவு என்பது ஒருவர் பிறரின் திறமைகள் மற்றும் நடத்தையின் மீது வைக்கும் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப அவர் தன்னை மாற்றிக்கொண்டு செயலாற்றும் திறனைக் குறிக்கிறது. இது கல்வி, வணிகம், அலுவலகம், குடும்பம், நட்பு, நிறுவனங்கள் போன்ற எல்லா இடங்களிலும் கடைபிடிக்கப்பட்டு சிறப்பாக செயலாற்றப்படுகிறது. அதன் பயன்களை குறித்துக் காண்போம்.

கிரேக்கப் புராணத்தில் பிக்மேலியன் என்ற சிற்பி ஒரு அழகான பெண் சிலையை வடித்து, அதை தான் மணந்து கொள்ள விரும்பி கடவுளை வேண்ட, அதற்கு உயிர் அளிக்கிறார் கடவுள். அவருடைய எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் நிஜமானதால் பிக்மேலியன் விளைவு என்று பெயர் வந்தது.

பிக்மேலியன் விளைவின் பயன்கள்:

1. தன்னம்பிக்கை அதிகரித்தல்: பிறர் தன் மீது அதிக நம்பிக்கை வைக்கும்போது அது அவருடைய தன்னம்பிக்கையை அதிகரித்து மேலும் சாதிக்க முடியும் என்று உணர வைக்கிறது.

2. உந்துதல்: பிறர் தன் மீது அதிக எதிர்பார்ப்புகளை வைத்திருக்கிறார்கள் என்று ஒரு நபர் உணரும்போது அந்த எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய அவர் கடினமாக உழைக்க அவை உந்துதலாக அமைகின்றன.

3. செயல்திறன் மேம்பாடு: பிறர் தன்னை நம்பும்போது மக்கள் சிறப்பாக செயல்பட முயற்சி எடுக்கிறார்கள். இதனால் அவர்களுடைய செயல் திறன் மேம்பாடு அடைகிறது.

4. நேர்மறை பின்னூட்டம்: சிறப்பாக செயல்படும் ஒரு நபரைப் பற்றிய கண்ணோட்டமும் அவரைப் பற்றிய நேர்மறை பின்னூட்டமும் அவரை மேலும் சிறப்பாக செயல்படத் தூண்டி முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும்.

5. கற்றல் திறன்: அவருடைய கற்றல் திறன் மேம்படுத்தப்படும். மேலும் புதியவற்றை கற்று திறனை வளர்த்துக்கொள்ள அவர் முயன்று கொண்டே இருப்பார்.

6. சிறந்த உறவுகள்: மக்கள் ஒருவரை நம்பும்போது தங்களுடன் ஆன அவர்களுடைய உறவை வலுப்படுத்தி ஆதரவான சூழலை உருவாக்குவார்கள்.

7. வாய்ப்புகள்: பிக்மேலியன் விளைவால் பாதிக்கப்பட்ட ஒரு நபர் நேர்மறையான எதிர்பார்ப்புகளின் அடிப்படையில் அவருக்கான அதிக வாய்ப்புகள் மற்றும் பொறுப்புக்களை அடைவார். இதனால் அவருடைய தனிப்பட்ட மற்றும் தொழில் முறை வளர்ச்சிக்கு வழிவகுக்கும்

8. தலைமைத்துவ மேம்பாடு: தலைமைப் பொறுப்புகளில் இருப்பவருக்கு மிகுந்த நன்மை பயக்கும். அவர்கள் சக்திமிக்க மனிதர்களாக இயங்குவார்கள். தன்னை நம்பி பணியாற்றும் மனிதர்களின் எதிர்பார்ப்புகளையும் தான் பணி செய்யும் நிறுவனத்தின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்ய மிக சிறப்பாக அர்ப்பணிப்பு உணர்வுடன் தங்கள் உழைப்பையும் நேரத்தையும் ஆற்றலையும் திறனையும் செலவழித்து தன்னையும் முன்னேற்றி. தான் சார்ந்த நிறுவனங்களையும் முன்னேற்றுவார்கள்.

பிக்மேலியன் விளைவால் பயனடைபவர்கள் யார்?

ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள்: தங்கள் மாணவர்களிடம் அதிக எதிர்பார்ப்புகளை ஆசிரியர்கள் வைக்கும்போது அவற்றை சிறந்த முறையில் செயலாற்ற மாணவர்கள் முயன்று தீவிரமாக படிக்கிறார்கள். அதனால் இரண்டு பேருமே பயனடைகிறார்கள்.

இதையும் படியுங்கள்:
எப்படி வாழ்ந்தோம் என்று இருக்க வேண்டும் வாழ்க்கை!
Pygmalion

பெற்றோர்கள் மற்றும் பிள்ளைகள்: தங்கள் குழந்தைகளின் மேல் அதிக நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் பெற்றோர் வைக்கின்றனர். குழந்தைகள் அவற்றை பூர்த்தி செய்து தங்களுக்கும் பெற்றோருக்கும் நல்ல பெயர் தேடிக் கொள்கிறார்கள்.

சகாக்கள் மற்றும் நண்பர்கள்: ஒருவரின் நேர்மறையான எதிர்பார்ப்பு இன்னொருவரின் சிறந்த செயலாற்றலுக்கு வழிவகுத்து அவர்களது நடத்தையையும் மாற்றி நல்லொழுக்கத்துடன் செயல்பட வைக்கிறது. சகாக்களின் ஊக்கமும் ஆதரவும் அவர்களுக்கு நம்பிக்கையும் ஊக்கத்தையும் அதிகரிக்கிறது.

மேலாளர்கள் மற்றும் தலைவர்கள்: தங்கள் குழு உறுப்பினர்களின் திறனை நம்பும் தலைவர்கள் அவர்களிடமிருந்து மேம்பட்ட செயல்திறனைக் காண்கிறார்கள். அதேபோல், பணியாளர்கள் தங்கள் மேலாளர்கள் தங்கள் திறமைகளில் நம்பிக்கையை வெளிப்படுத்தும்போது சிறப்பாக செயலாற்றுகிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com