லடோகா ஏரி இயற்கைச் செல்வம் மட்டுமல்ல; ஐரோப்பாவின் நீர்மணியின் முத்து!

Natural wealth Lake Ladoga
Lake Ladoga
Published on

டோகா ஏரி ஐரோப்பா கண்டத்தில் மட்டுமின்றி, உலகின் மிகப்பெரிய இயற்கை இனிமையான (fresh water) ஏரிகளில் ஒன்றாகும். இது ரஷ்ய நாட்டில் வடமேற்கில் லெனின்கிராட் ஒப்லாஸ்ட் மற்றும் கரேலியா குடியரசு இடையே பின்லாந்து எல்லைக்கு அருகில் உள்ளது. இதன் மொத்த பரப்பளவு சுமார் 17,700 சதுர கிலோ மீட்டர் இருக்கும். ஆழம் அதிகமாக 230 மீட்டர், நீளம் சுமார் 219 கிமீ. அகலம் 138 கிமீ. 600க்கும் மேற்பட்ட தீவுகள் இதில் உள்ளன. அதில் வாலாம் தீவுக் குழுமம் (Valaam Archipelago) பிரசித்தம் பெற்றது. ஐரோப்பாவின் பனிக்கால மரபையும், இன்றைய சூழலியல் சமநிலையையும் ஒருங்கே தாங்கி நிற்பதால் இது மிகவும் விசேஷமானது.

பனிக்காலத்தின் நினைவுச்சின்னம்: லடோகா ஏரி சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முன் பனிக்காலம் முடிவடைந்தபோது பனியின் உருகலால் உருவானது. இதனால், இது ஒரு பனிக்கால நிலவியல் அமைப்பின் சிறந்த உதாரணமாகும்.

புதுமையான புவியியல் அமைப்பு: ஏரியின் அடித்தளப் பாறைகள் பழைமையான கிரானைட் மற்றும் பேசால்ட் வகை பாறைகளால் ஆனது. இது ரஷ்யாவின் வடமேற்குப் பாறை மேடுகளைப் பற்றிய ஆய்வுகளுக்கு மிக முக்கியம்.

இதையும் படியுங்கள்:
டைனோசர்களே பிறக்காத காலத்தில் வாழ்ந்த சிலந்தி! அரிசோனா பாலைவனத்தின் ரகசியம்!
Natural wealth Lake Ladoga

நீர்ச் சுழற்சியில் பங்கு: லடோகா ஏரி அதன் வழியே பாயும் நேவா ஆற்றின் மூலம் பால்டிக் கடலை ஊட்டுகிறது. இது வடக்கு ரஷ்யாவின் மழை மற்றும் நிலத்தடி நீர் அமைப்பை சமநிலைப்படுத்தும் முக்கிய நீர்வழி ஆகும். ஏரிக்கரைப் பகுதிகளில் வளமான பாசன நிலங்கள் காணப்படுகின்றன. இவை விவசாயத்திற்கும் இயற்கை மர வளர்ச்சிக்கும் உகந்தவை.

உயிரியல் முக்கியத்துவம்: லடோகா ஏரியில் சுமார் 50க்கும் மேற்பட்ட இனிமையான நீர் மீனினங்கள் காணப்படுகின்றன. உதாரணமாக, சால்மன் (Salmon), டிரவுட் (Trout), பெர்ச் (Perch), பைக் (Pike) போன்றவை. இவை ஏரியின் சுற்றுப்புற மக்களின் முக்கிய உணவு மற்றும் தொழில் ஆதாரமாக மீன் பிடித்தல் இருக்கின்றது. சிறப்பு உயிரினமாகிய லடோகா சீல் பழங்காலத்தில் பனிக்கடலில் வாழ்ந்தவை; பனி உருகியபின் லடோகா ஏரியில் தங்கியவை ஆகும். ஏரியின் தீவுகள் மற்றும் கரையோரப் புல்வெளிகள் இயற்கை பறவைகளின் இனப்பெருக்க மையங்களாக உள்ளன. வாத்துகள், தாரைகள், குருவிகள், கருவேலிகள் போன்ற இனப்பெருக்கப் பறவைகள் இங்கு அதிகம் காணப்படுகின்றன. இது பறவையியல் ஆராய்ச்சிக்கான முக்கிய நிலையமாக விளங்குகிறது. ஏரிக்கரையில் சைபீரிய பைன், பேர்ச் மரங்கள், பாசிப்பூண்டு, நீர்த்தாவரங்கள் போன்ற தாவர இனங்கள் காணப்படுகின்றன. இவை நீர் வடிகட்டும் பணியையும், கரையோரத்தின் மண் அரிப்பைத் தடுக்கவும் உதவுகின்றன.

இதையும் படியுங்கள்:
உங்கள் வீட்டு சமையலறையை சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக மாற்ற உதவும் 3 எளிய வழிகள்!
Natural wealth Lake Ladoga

வரலாற்று முக்கியத்துவம்: பண்டைய காலத்தில் இந்த ஏரி வர்த்தக பாதையாக இருந்தது; வைக்கிங் (Vikings) மற்றும் ஸ்லாவியர்கள் (Slavs) இதை இணைக்கும் நதிப் பாதைகளைப் பயன்படுத்தினர். இன்று லடோகா ஏரி மீன்பிடி, படகு சுற்றுலா மற்றும் பயணவியல் ஆராய்ச்சி ஆகியவற்றில் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஏரிக்கரையிலுள்ள வாலாம் மடாலயம் (Valaam Monastery) மற்றும் இயற்கைக் காட்சிகள் பல சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றன.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகள்: லடோகா ஏரி தற்போது ‘Protected Natural Area’ என்ற பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மீன்பிடி கட்டுப்பாடுகள், கழிவுநீர் சுத்திகரிப்பு மற்றும் சுற்றுலா மரியாதை விதிகள் ஆகியவை ஏரியின் நீர் மற்றும் உயிர் வளங்களைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் நடைமுறையில் உள்ளன.

லடோகா ஏரி என்பது ரஷ்யாவின் இயற்கைச் செல்வம் மட்டுமல்ல; அது ஐரோப்பாவின் நீர் வாழ்வின் இதயம் எனலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com