உலகின் அதிவேகமான விலங்கு சிறுத்தைகள். மணிக்கு 60 முதல் 70 மைல் வேகத்தை எட்டும் திறன் கொண்டது. சர்வதேச சிறுத்தைகள் தினமான இன்று சிறுத்தைகள் குறித்து சில சுவாரஸ்யமான தகவல்களை இந்தப் பதிவில் காண்போம்.
தோற்றம்: சிறுத்தைகளுக்கு நீண்ட மெல்லிய கால்களும், நெகிழ்வான முதுகெலும்பும் நீண்ட வாலும் உள்ளன. இவற்றின் நகங்கள் குட்டையாகவும் மழுங்கியதாகவும் இருக்கும். சிறுத்தைகளுக்கு சக்தி வாய்ந்த கால் தசைகள் உள்ளன. குறிப்பாக, பின்னங்கால்களில் வேகத்தை அதிகப்படுத்தவும் நீண்ட தசை மூட்டுகள் விரைவான ஓட்டத்தை அவற்றுக்கு எளிதாக்குகின்றன. சிறுத்தையின் வால் ஒரு சுக்கான் போல தட்டையான மேற்பரப்பைக் கொண்டுள்ளது. அதிக வேகத்தில் கூர்மையான திருப்பங்களை செய்ய உதவுகிறது. தனது திசை மாற்றியை கட்டுப்படுத்தவும் அதன் சமநிலையை பராமரிக்கவும் வால் உதவுகிறது.
தனித்துவமான கோட்: சிறுத்தைகளுக்கு தங்க மஞ்சள் நிற கோட் உள்ளது. இவை கருப்புப் புள்ளிகளால் அலங்கரிக்கப்பட்டது. இதனால் இயற்கையான புல்வெளிகளில் தங்கள் உருவத்தை மறைத்துக்கொள்ள உதவுகிறது. இரையை வேட்டையாடும்போது உயரமான புற்களுடன் இந்தப் புள்ளிகள் தங்களை மறைத்துக் கொள்ள உதவுகிறது.
கண்ணீர்க் கோடுகள்: சிறுத்தைகள் சிறந்த கண் பார்வை கொண்டவை. பகலில் நீண்ட தொலைவில் இருந்து இரையைக் கண்டறிய முடியும். அவற்றின் தனித்துவமான கண் அடையாளங்கள் பெரும்பாலும் கண்ணீர்க் கோடுகள் என்று குறிப்பிடப்படுகின்றன. சூரியனிலிருந்து வெளிப்படும் கண் கூசும் வெளிச்சம் அவற்றின் இலக்குகளில் கவனம் செலுத்துவதில் மேம்படுத்த கண்ணீர்க் கோடுகள் உதவுகிறது. அவை மலர்க்கோடுகள் என்றும் அழைக்கப்படுகின்றன.
வேட்டையாடும் திறன்: சிறுத்தைகள் மாமிச உண்ணிகள். அவை மிருகங்கள், முயல்கள், முள்ளம்பன்றிகள் மற்றும் தரையில் வாழும் பறவைகள் போன்ற சிறிய விலங்குகளை சாப்பிடுகின்றன. இவை மிக விரைவாக உண்ணும் திறன் படைத்தவை. அதனால் தன்னை வேட்டையாட வருபவர்களிடமிருந்து விரைவில் தப்பிக்க முடியும். பெரும்பாலும் சிறுத்தைகள் காலை 6 முதல் 10 மணி வரையிலும் மாலை நான்கு முதல் ஆறு மணி வரையிலும் வேட்டையாடும். இவை பகல் நேரத்தில் சுறுசுறுப்பாக இருக்கும். சில பகுதிகளில் இரவிலும் சிறுத்தைகள் சுறுசுறுப்பாக இருக்கும். பௌர்ணமி நாளின்போது சிறுத்தைகள் இரவு நேர நிபுணர்களாக மாறுகின்றன.
சிறுத்தைகளின் இயல்புகள்: சிறுத்தைகள் பெரிய பூனைக் குடும்பத்தின் நேர்த்தியான மற்றும் சுறுசுறுப்பான விலங்குகள். இதன் விரைவான தன்மை மற்றும் தனித்துவமான தோற்றத்திற்கு பெயர் பெற்றவை. ஆண் சிறுத்தைகள் குழுக்களாகவும் பெண் சிறுத்தைகள் தனிமையிலும் வாழ விரும்புகின்றன. சிறுத்தைகள் சிங்கங்கள் போல கர்ஜிக்காது. ஆனால், ஆபத்தை எதிர்கொள்ளும்போது உறுமுகின்றன. சிறுத்தையின் உறுமல் ஒரு பறவையின் அழைப்பைப் போல ஒலிக்கும். பழங்காலத்தில் பேரரசர்கள், மன்னர்கள் செல்வத்தின் அடையாளமாக சிறுத்தைகளைக் கருதி தங்கள் அரண்மனைகளில் வைத்து வளர்த்து வந்தனர்.
தாகத்தை அடக்கும் திறன்: வறண்ட சூழ்நிலைக்கு ஏற்றவாறு சிறுத்தைகளால் தண்ணீர் இன்றி நான்கு நாட்கள் வரை கூட இருக்க முடியும். மேலும், தண்ணீர் இன்றி 10 நாட்கள் வரை உயிர் வாழும் உயிரினம் சிறுத்தையாகும். தான் வேட்டையாடிக் கொன்று உண்ணும் விலங்குகளில் இருந்து தண்ணீரை எடுத்துக்கொள்ளும். இவற்றால் நீந்த முடியும். ஆனால், பொதுவாக தண்ணீரில் இறங்குவதை தவிர்க்கின்றன.
அழிவை நோக்கி அரிய விலங்குகள்: சிறுத்தைகள் அழிவை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும் விலங்குகளாகக் கருதப்படுகின்றன. இவற்றைப் பாதுகாப்பது மிகவும் அவசியமாகும். காட்டு சிறுத்தைகள் தங்கள் ரோமங்களுக்காக அதிகமாக வேட்டையாடப்படுகின்றன. 2020ம் ஆண்டு நிலவரப்படி காடுகளில் சுமார் 7,500 சிறுத்தைகள் மட்டுமே எஞ்சியுள்ளன. எனவே, சிறுத்தைகளைப் பாதுகாப்பது மிகவும் அவசியம்.