மைதா உணவுகளை எடுத்துக்கொள்வதால் உடலில் ஏற்படும் 5 பிரச்னைகள்!

Problems caused by maida foods in the body
Problems caused by maida foods in the body
Published on

பொதுவாக நாம் தினச்சரி எடுத்துக்கொள்ளும் மைதா கலந்த உணவுகளால் உடலில் நச்சு தன்மை அதிகரிக்கிறது. மைதா என்பது கோதுமையிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு இரசாயனப் பொருட்கள் கலந்து வெண்மை நிறமாக்கப்பட்ட ஒரு வகை பவுடர். இதனைப் பயன்படுத்தி நூடூல்ஸ், ரொட்டி, இடியப்பம், தோசை போன்ற உணவுகள் தயாரிக்கப்படுகின்றன. ஆனால், அவை மனித உடலுக்குள் சென்று தேவையற்ற பல உடல் பிரச்னைகளை உருவாக்கிறது. இதனால் ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்கா போன்ற வளர்ச்சியடைந்த நாடுகளில் மைதா மாவை தடை செய்துள்ளனர். அந்த வகையில் மைதா கலந்த உணவுகளை எடுத்துக் கொள்வதால் ஏற்படும் தீமைகள் குறித்து இந்தப் பதிவில் தெரிந்துக் கொள்வோம்.

உடலில் தோன்றும் நோய்கள்:

1. இரத்த சர்க்கரையின் அளவு அதிகரிக்கும்: மைதாவில் கிளைசெமிக் இன்டெக்ஸ் என்ற பதார்த்தம் அதிகம் இருப்பதால் உடலில் இருக்கும் சர்க்கரையின் அளவை அதிகப்படுத்துகிறது. இதனால் நீரழிவு நோயாளிகள் அதிகமாவார்கள். மேலும், இது தொடர்பான ஆராய்ச்சிகள் செய்ததில் 90 சதவீதம் உறுதியாகியுள்ளது.

2. உடல் பருமன் அதிகரிக்கும்: மைதா கலந்த உணவுகள் உடல் பருமனை அதிகரிக்கச் செய்யும். இதனால் இரத்த அழுத்தம், இருதயக் கோளாறு போன்ற நோய்கள் ஏற்பட அதிக வாய்ப்புக்கள் இருக்கின்றன.

3. மலச்சிக்கல் பிரச்னை: பொதுவாக, நார்ச்சத்துக்கள் கலந்த உணவுகளை எடுத்துக் கொள்வதால் மலச்சிக்கல் பிரச்னையை குறைத்துக்கொள்ள முடியும். ஆனால், இதிலிருக்கும் பதார்த்தங்கள் மலச்சிக்கலை அதிகப்படுத்தும்.

இதையும் படியுங்கள்:
ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கச் செய்யும் 8 பானங்கள்!
Problems caused by maida foods in the body

4. இருதயக் கோளாறு: மைதாவிலிருக்கும் கெட்ட கொழுப்புக்கள் இரத்த நாளங்களில் படியும். இதனால் இருதயக் கோளாறு, இரத்த குழாய் அடைப்பு போன்ற ஆபத்தான நோய்களை ஏற்படுத்தும்.

5. செரிமானம்: நாம் சாப்பிடும் உணவு சரியாக செரிமானம் ஆனால்தான் நாம் ஆரோக்கியமாக இருக்க முடியும். ஆனால், மைதாவை தொடர்ந்து சாப்பிட்டால் செரிமானக் கோளாறுகள் ஏற்படுவது நிச்சயம். செரிமானக் கோளாறுகள் ஏற்பட்டால் நமக்குத் தொடர்ந்து என்னென்ன வியாதிகள் வருமோ அவ்வளவும் வந்துவிடும்.

நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவு வகைகளில் கவனம் செலுத்தினாலே போதும். மைதா விஷயத்தில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தி உஷாராக இருப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com