முத்து வளர்க்க வாறீகளா..? லாபம் தரும் நன்னீர் முத்து வளர்ப்பு!

Pearl farming
Pearls
Published on

இயற்கையில் கிடைக்கும் பொருள்களுக்கு எப்போதுமே மதிப்பு அதிகம். அப்படிப்பட்ட மதிப்பு மிக்க பொருட்களில் ஒன்று தான் முத்து. மாணிக்கம், பவளம் மற்றும் இரத்தினம் ஆகியவற்றின் வரிசையில் முத்தும் விலைமதிப்பு மிகுந்த பொருளாக கருதப்படுகிறது. இருப்பினும் காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகளால் தற்போது முத்துக்களின் உருவாக்கம் வெகுவாக குறைந்துள்ளது. உள்நாடு மற்றும் வெளிநாட்டுச் சந்தையில் இதன் தேவை அதிகம் என்பதால், தற்போது செயற்கையாகவே முத்துக்கள் உருவாக்கப்படுகின்றன.

ஒடிசா மாநிலத்தின் தலைநகரான புவனேஷ்வரில் உள்ள மத்திய நன்னீர் மீன்வளர்ப்பு ஆராய்ச்சி நிலையமானது, நன்னீரில் முத்துக்களை வளர்க்கும் தொழில்நுட்பத்தை உருவாக்கியது. மேலும் இந்தத் தொழில்நுட்பத்தை நாடு முழுவதும் விரிவாக்கம் செய்துள்ளது. நன்னீரில் வளர்க்கும் முத்துக்கும், இயற்கையாக கிடைக்கும் முத்துக்கும் ஒருசில வித்தியாசங்கள் உள்ளன. செயற்கை என்றும் இயற்கைக்கு ஈடாக முடியாது அல்லவா!

வெளியில் இருக்கும் பொருள்களான மண் துகள்கள் மற்றும் பூச்சிகள், சிப்பிக்குள் சென்று வெளிவராமல் இருக்கும். இந்தப் பொருள்களின் மேல் பளபளப்பான பகுதியை சிப்பிகள் உருவாக்கும். இவை உள்கருவாக உருவாகி, முத்துக்களாக உருமாற்றம் அடைக்கின்றன. இதே யுக்தியை நுட்பமான முறையில் பயன்படுத்தி தான், நன்னீர் முத்துக்கள் செயற்கையாக உருவாக்கப்படுகின்றன. முத்துக்கள் இயற்கையான மேட்ரிக்ஸ், கால்சியம் கார்பனேட் மற்றும் தண்ணீர் ஆகியவற்றின் கலவையில் உருவாகின்றன.

இயற்கையான முத்துக்களின் உள்கருவானது அளவில் சிறியதாக இருக்கும். நன்னீர் முத்துக்களில் இருக்கும் உள்கரு சற்று பெரியதாகவும், பளபளப்பான முலாம் பூசப்பட்டும் காணப்படும். இதில் இருக்கும் உள்கரு மனிதனால் செலுத்தப்பட்டது. ஆகையால் இதன் நிறம், வடிவம் மற்றும் அளவை நமக்கேற்றவாறு உருவாக்க முடியும். செயற்கையான முத்துக்கள் தடிமனாகவும், வட்டமான அடிப்பகுதியுடன், அளவில் பெரியதாகவும் இருக்கும். நன்னீர் முத்துக்களை வளர்க்க 6 நிலைகளை செயல்படுத்த வேண்டியது அவசியமாகும்.

1. சிப்பிகளை சேகரித்தல்

2. வளர்ப்புக்கு முன்பு முறைப்படுத்துதல்

3. அறுவை சிகிச்சை

4. வளர்ப்புக்குப் பின்பு முறைப்படுத்துதல்

5. குளத்தில் வளர்த்தல்

6. முத்துக்களை அறுவடை செய்தல்.

அறுவடையின் போது, சிப்பியின் இரண்டு வால்வுகளையும் பிரித்து, முத்தை அழுத்தி எடுக்க வேண்டும். சிப்பி ஓடுகளுக்கு தீங்கு விளைவிக்காமல் முத்தைப் பிரித்தெடுத்தால், அந்த சிப்பிகளை மீண்டும் பயன்படுத்த முடியும். நன்னீர் முத்துக்களை உருவாக்க இந்தியாவில் பேரிசியா காருகேட்டா, ஆவன லேமல்லிடன்ஸ் மார்ஜினாலிஸ் மற்றும் லே கோரியான்ஸ் ஆகிய 3 விதமான சிப்பிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

வடிவமைக்கப்பட்ட அல்லது அலங்கரிக்கப்பட்ட முத்துக்கள் பழைய முறையாக இருந்தாலும், பாரம்பரியமானவை. ஆகையால் தான் இன்றும் இதற்கான சந்தை மதிப்பு அதிகமாகவே உள்ளது. மத்திய அரசின் நன்னீர் மீன் வளர்ப்பு ஆராய்ச்சி நிலையத்தின் ஆய்வு முடிவுகளின் படி, ஒரு ஏக்கருக்கு ஒன்றரை ஆண்டுகளில் வளர்க்கப்படும் நன்னீர் முத்துக்களின் மூலம் ரூ.2.17 இலட்சம் வருமானம் கிடைக்கும்.

முத்து வளர்ப்பு ஒரு இலாபம் நிறைந்த விவசாய வணிகம். போதிய நிபுணத்துவம் இல்லாததால் தான் பலரும் இந்தத் தொழிலை ஏற்று நடத்த முன்வருவதில்லை‌. ஆறுகள் மற்றும் குளங்களின் மூலம் வளர்க்கப்படும் நன்னீர் முத்துக்கள், 200% லாபம் கொடுக்கும் நம்பகமான தொழில் இது என கூறப்படுகிறது. மேலும் கடலோரங்களில் உப்புநீர் முத்துக்களையும் வளர்த்தெடுக்கலாம்‌.

இதையும் படியுங்கள்:
மீன் வளர்ப்புத் தொழிலில் அதிக இலாபம் தரும் 5 வழிகள்!
Pearl farming

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com