
தோட்டக்கலைத் துறையில் திராட்சை சாகுபடி அதிக இலாபத்தைத் தரக் கூடியது. திராட்சை சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகளுக்கு நிச்சயமாக இது தெரிந்திருக்கும். இருப்பினும் திராட்சை சாகுபடி தமிழ்நாட்டில் மிகக் குறைவு தான். இந்நிலையில், திராட்சைப் பழத் தோட்டம் அமைக்க விரும்புபவர்களுக்கு நடவு, யுக்திகள், அறுவடை குறித்து சில யோசனைகளை வழங்குகிறது இந்தப் பதிவு.
ஆரோக்கியமான திராட்சைப் பழத் தோட்டத்தை உருவாக்க நீங்கள் விரும்பினால், முதலில் திராட்சை குறித்து விரிவாக அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். திராட்சை கொடியானது, சிட்ரஸ் பழங்கள் மற்றும் மெழுகு பச்சை இலைகளைக் கொண்ட சிட்ரஸ் வகையைச் சேர்ந்தது. பழங்கள் புளிப்பு முதல் அரை இனிப்பு வரையிலான சுவையுடன் இருக்கும்.
நடவு மற்றும் இடம்:
திராட்சைக் கொடிகளை 6 முதல் 10 அடி இடைவெளியில் நடவு செய்ய வேண்டும். வெயில் நன்றாக படும்படியான இடத்தைத் தேர்வு செய்வது முக்கியம். அதாவது திராட்சைப் பழக் கொடிகளுக்கு தினந்தோறும் 6 முதல் 8 மணி நேரம் வரை சூரிய ஒளி தேவை. நடவுக்கு நல்ல வடிகால் வசதி கொண்ட வண்டல் மண் ஏற்றதாக இருக்கும்.
தண்ணீர் பாய்ச்சுதல்:
கொடிகளை நட்ட உடனேயும், 3வது நாளும் தண்ணீர்ப் பாய்ச்ச வேண்டும். பின்னர் வாரம் ஒருமுறை நீர்ப் பாய்ச்சினால் போதுமானது. கவாத்து செய்வதற்கு ஒரு நாள் முன்பும், அறுவடை செய்வதற்கு ஒரு நாள் முன்பும் தண்ணீர்ப் பாய்ச்சுவதை நிறுத்த வேண்டும்.
பழ உற்பத்தி:
திராட்சை மரங்கள் ஒவ்வொரு ஆண்டும் பழங்களைக் கொடுக்கின்றன. இவை அக்டோபர் மாதத்தின் இறுதியில் பழுக்கத் தொடங்கும். கொடிகள் மே மாதம் வரையில் வளரந்து கொண்டே இருக்கும். தோட்டத்தில் கருவுற்ற பூக்கள் அனைத்தும் பழங்களாக மாறுகின்றன. ஒரு திராட்சை குலையில் 6 முதல் 300 வரையிலான பழங்கள் இருக்கும். அக்டோபர் முதல் மே மாதங்களுக்கு இடையில் எந்த நேரத்திலும் திராட்சைப் பழங்களை அடுக்கி வைத்துக் கொள்ளலாம். திராட்சைப் பழங்கள் கருப்பு, கருநீலம், பச்சை, மஞ்சள் மற்றும் இளஞ்சிவப்பு ஆகிய நிறங்களில் காணப்படும். திராட்சையின் இலைகள் தான் இனிப்பு சுவையுடைய சர்க்கரையை உருவாக்குகின்றன. பின்னர் இந்த சர்க்கரையானது பழங்களுக்கு மாற்றப்படுகிறது.
பூச்சி மேலாண்மை:
திராட்சைக் கொடியில் நூற்புழுக்களைக் கட்டுப்படுத்த, ஒவ்வொரு கொடியிலும் தலா 200 கிராம் வேப்ப புண்ணாக்கு இட்டு, பின்னர் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். மருந்து தெளித்த பின், அடுத்த 15 நாள்களுக்கு மண்ணைக் கிளறக் கூடாது. மாவுப்பூச்சிகளைக் கட்டுப்படுத்த இவற்றை உணவாக்கிக் கொள்ளும் புள்ளி வண்டுகளை, கொடி ஒன்றுக்கு 10 வீதம் விடலாம்.
அறுவடை:
திராட்சைப் பழங்கள் அறுவடைக்குத் தயாராக இருப்பதை அறிய முதலில் நிறத்தைக் கண்காணிக்க வேண்டும். காயாக இருக்கும் போது பச்சை நிறத்தில் இருக்கும். அதன்பின் மெல்ல மெல்ல கருநீலத்திற்கு மாறும். சில நேரங்களில் பழத்தின் அளவைக் கொண்டும் அறுவடையைத் தீர்மானிக்கலாம். இருப்பினும் திராட்சைப் பழத்தை சுவைத்துப் பார்ப்பது தான் அறுவடைக்கான நேரத்தைக் கண்டறியும் சிறந்த வழியாகும். கத்தரிகள் மூலம் அறுவடை செய்த பிறகு, பழங்களைப் பாதுகாக்க மூடி வைக்க வேண்டும். பழங்களை 85% ஈரப்பதத்துடன், துளையிடப்படப்பட்ட ஒரு பையில் 2 மாதங்கள் வரை சேமிக்கலாம்.