
கொத்தமல்லி புதினா போன்ற இலை வகைகள் நமக்கு அடிக்கடி சமையலுக்கு தேவைப்படும் இவற்றையெல்லாம் வீட்டில் வளர்க்க முடியுமா? என்று யோசிப்பவர்களுக்கு சுலபமாக வளர்க்க முடியும் என்று தெரிந்தால் இனி கடைக்கு சென்று கொத்தமல்லி புதினா வாங்கவே மாட்டீங்க! கொத்தமல்லி, புதினா செடி
வீட்டில் எளிதாக எப்படி வளர்க்கலாம் என்பதை பார்ப்போம். புதினா வளர்ப்பது ரொம்பவே சுலபம்தான்.
புதினா கட்டு வாங்கி வந்து அதில் இருக்கும் கீரைகள் எல்லாம் ஆய்ந்து விட்டு மீதம் இருக்கும் தண்டுகளை வாய் அகன்ற ஆறு இன்ச் அளவில் இருக்கக்கூடிய தொட்டி, காலி பிளாஸ்டிக் குடம் பாதியாக வெட்டியது, வீணாக உள்ள தண்ணீர் கேனை பாதியாக வெட்டி அதில் இயற்கை உரங்களை போட்டு நிரப்பி எளிதாக வளர்க்கலாம்.
சாதாரண செம்மண் கலவை உள்ள மண் தொட்டியாக இருந்தால் போதும். இதற்காக பிரத்யேக மண் கலவை தேவையில்லை.
மேலும் சூரிய வெளிச்சம் அதிகம் படாத இடங்களில் வைத்து காலை மாலை இரு வேளையில் தண்ணீரும் தெளியுங்கள்.
அரிசி கழுவில தண்ணீர், பருப்பு கருவிய தண்ணீர், வாழைப்பழ தோல் ஊற வைத்த தண்ணீர் போன்றவற்றை இரண்டு நாட்களுக்கு ஒரு முறை ஊற்றினால் நன்றாக செழித்து வளரும். இதை வீட்டில் செய்து பார்த்து எழுதுகிறேன்.
கொத்தமல்லி செடி.
கொத்த மல்லி விதைகளை ஒன்றிரண்டாக உடைத்து வைக்கவும். இதை தொட்டிகளில் உள்ள மண்ணில் தூவிவிட்டு அதன் மீது மேலாக மண்ணைப் போட்டு மூடாமல் தென்னை நார் கழிவு கொண்டு எல்லா இடங்களிலும் மூடும்படி போட்டு விடவும். இந்தச் செடி முளைத்து வர பத்திலிருந்து பதினைந்து நாட்கள் ஆகும் அதுவரை மேலே ஒரு ஈரமான காட்டும் துணியை போட்டு மூடவும் நீ என் மீது தினம் இரு வேளை என தண்ணீர் தெளித்து ஈரப்பதத்துடன் மண்ணை வைக்கவும்.
15 நாட்களில் நன்கு செழித்து முளைக்கும்.
கொத்தமல்லி விதைகள் முளைக்க ஆரம்பித்ததும் மேலே போட்ட துணியை எடுத்துவிடலாம். சாதாரண முறையில் உரங்களை கொடுத்து வந்தால் பச்சை பசேல் என 30 நாட்களில் முளைத்து விடும்.
மேலே உள்ள கீரைகளை அவ்வப்போது பறிக்கலாம்.
மேலும் அடுத்தடுத்து தொட்டிகளில் இது மாதிரி வளர்த்தால் வீட்டிற்கு தேவையான கொத்தமல்லி புதினா செழிப்பாகவும் வளர்ந்து பறிக்கலாம். இதே மாதிரி வீட்டில் வளர்த்து பயன்பெறலாம்.