மழை ஈசல்கள் ஒளியை சுற்றி வட்டமிடுவதற்கு காரணம் என்ன?

மழைக்கால பூச்சிகளின் அறிவியல் விளக்கம்!
earthworms on wet soil monsoon
earthworms on wet soil
Published on

மழைக்காலத்தில் மண்புழுக்கள் மண்ணின் மேற்பரப்பில் நெழிந்து வருவதற்கும் மற்றும் மழை ஈசல்கள் ஒளியை சுற்றி வட்டமிடுவதற்கும் காரணம் என்ன?

மண்புழுக்கள் (Earthworms) இயற்கையின் மிக முக்கியமான பகுதியாகும். அவை மண்ணை உள்வாங்கி, கழிவுகளாக வெளியிடுவதன் மூலம் மண்ணை நச்சில்லாதது, ஆக்குகின்றன. பொதுவாக, இவை மண்ணுக்குள் ஆழமாக வசிக்கின்றன. ஆனால், மழைக்காலங்களில் நாம் அடிக்கடி அவற்றை மண்ணின் மேற்பரப்பில் நெழிந்து வரும் நிலையில் காணலாம். இதற்குப் பல காரணங்கள் உள்ளன.

1. ஆக்ஸிஜன் குறைபாடு: மண் மிகவும் ஈரமாக இருந்தால், அதில் இருக்கும் வாயுக்கள், குறிப்பாக ஆக்ஸிஜன், குறைந்து விடும். மண்புழுக்கள் தோல் வழியே சுவாசிக்கின்றன. ஆக்ஸிஜன் குறைவாகும்போது அவை மேலே வந்து வெளிச்சுவாசம் செய்ய முயலுகின்றன.

2. மழைநீர் காரணமாக இருக்கும் வெள்ளப்போக்கு: மழையினால் மண் நீரில் மூழ்கி போகும்போது, புழுக்கள் தங்களை பாதுகாக்க மேலே வருவதை நாம் காணலாம். மண்ணுக்குள் நீர் தேங்கி இருப்பதால், அவற்றால் சாகடிக்கும் நிலை ஏற்படலாம். அதனால் மேலே கிளம்பி வருவது.

3. இனப்பெருக்கம் (Reproduction): சில நேரங்களில், புழுக்கள் மழைக்காலத்தில் மேலே வந்து இணைவதற்கும் இனப்பெருக்கம் செய்யவும் முயற்சி செய்கின்றன.

4. அதிர்வுகள் மற்றும் சுற்றுச்சூழல் மாற்றங்கள்: மழை வீழும்போது பூமியின் மேற்பரப்பில் அதிர்வுகள் ஏற்படலாம். இந்த அதிர்வுகளை பூமியில் உள்ள சுனாமி போன்ற ஆபத்து என எண்ணி மண்புழுக்கள் மேலே வந்து தப்பிக்க முயற்சி செய்கின்றன (இது ஒரு இயற்கை பதில் செயல்).

இந்த செயல்கள், இயற்கையில் ஒவ்வொரு உயிரினமும் தன்னை பாதுகாப்பதற்காக எடுக்கும் அறிவார்ந்த நடவடிக்கைகளின் ஓர் உதாரணமாக பார்க்கப்படுகின்றன.

மழைக்காலத்தில் மழை ஈசல்கள் ஒளியை சுற்றி வட்டமிடும் நிகழ்வு, ஒரு அறிவியல் காரணத்தால் ஏற்படுகிறது.

மழைக் காலத்தில் நாம் இரவுகளில் பல மழை ஈசல்களை (Rain flies) தெரு விளக்குகள் அல்லது வீட்டில் லைட்டுகளின் சுற்றிலும் வட்டமாக பறப்பதை கவனிக்கிறோம். இதற்குக் காரணம்:

இதையும் படியுங்கள்:
மழைக்காலத்தில் தலைக்கு எண்ணெய் வைக்கும் முன் இத தெரிஞ்சுக்கோங்க! 
earthworms on wet soil monsoon

1. பாசிட்டிவ் ஃபோட்டோ டாக்ஸிஸ் (Positive Phototaxis): மழை ஈசல்கள் ஒளியை நோக்கிச் செல்லும் இயற்கையான செயற்கூறான நடத்தை கொண்டுள்ளன. இதை “Positive Phototaxis” என அறிவியல் உலகில் கூறுகிறார்கள். இதன் பொருள் – ஒளி இருப்பதைக் காணும் பூச்சிகள், அந்த ஒளியை நோக்கிச் செல்லும்.

2. மழைக்கால இனப்பெருக்கம்: மழைக்காலம் என்பது மழை ஈசல்களுக்கு இனப்பெருக்கம் செய்யும் சிறந்த நேரமாகும். வெப்பம், ஈரப்பதம் ஆகியவை அதிகரிக்கும் போது, ஈசல் கூட்டத்தில் உள்ள சில பறக்கும் வகை ஈசல்கள் (alates) வெளியே வந்து ஜோடி சேர முயற்சிக்கின்றன.

3. செயற்கை ஒளி வழிகாட்டியாகும்: இரவில் இயற்கை ஒளி குறைவாக இருக்கும். எனவே மின் விளக்குகள் (bulb, tube light) போன்ற செயற்கை ஒளி மட்டுமே இருக்கும். அந்த ஒளியை அவர்கள் வழிகாட்டி என எண்ணி நோக்கிச் செல்கின்றன. சில நேரங்களில் அந்த ஒளியை சந்திரனின் ஒளியாக உணரும் இயற்கை புரிதல் முறையால் வழிதவறி பல்லாயிரக்கணக்கான ஈசல்கள் லைட்டை சுற்றி வட்டமாகச் சுழலுகின்றன.

இதையும் படியுங்கள்:
தங்க மழைப் பொழிந்தது; திருமகள் திருவருள் கிடைத்தது!
earthworms on wet soil monsoon

மழை ஈசல்கள் லைட்டை சுற்றி வட்டமிடுவதும், அவை ஒளியை நோக்கிச் செல்லும் இயல்பான நடத்தையும் (positive phototaxis), மழைக்கால இனப்பெருக்கச் சூழலும் சேர்ந்ததனால் ஏற்படும் ஒரு இயற்கை அறிவியல் செயல்முறை ஆகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com