இயந்திர ஒலிகளை அப்படியே காபி செய்து கத்தும் Liar Bird!

Liar Bird
Liar Bird

மனிதர்களை போல நாங்களும் மிமிக்ரி செய்வோம் என்று போட்டிப் போட்டு மிமிக்ரி செய்யும் ஒரு பறவைதான் Liar Bird. மிமிக்ரி பறவை என்றழைக்கப்படும் இந்த Liar Bird, ஆம்புலன்ஸ் ஒலி, மரம் வெட்டும்போது இயந்திரம் எழுப்பும் ஒலி உட்பட பல இயந்திரங்களின் ஒலிகளை அப்படியே மிமிக்ரி செய்யும் பறவைதான் Liar Bird.

Menura Novaehollandiae என்ற அறிவியல் பெயரைக் கொண்ட இந்த Liar Bird ஆஸ்திரேலியாவின் அடர்ந்த காடுகளில் அதிகம் காணப்படுகின்றன. இப்பறவையின் இறகுடன் சேர்த்து இது 31 அங்குலம் நீளம் கொண்டது. ஆண் பறவைகள் கருமையான இறகுகள், பழுப்பு நிற தலைகளைக் கொண்டுள்ளன. இந்த Liar Bird ன் தனித்துவம் என்றால், அதன் குரல்தான்.

குறிப்பாக, இந்தப் பறவை இனத்தின் ஆண் பறவைகள், பல தனித்துவமான குரல்களை எழுப்பும் திறன் கொண்டுள்ளன. கேமரா ஷட்டர் சத்தத்திலிருந்து மனிதர்களால் பயன்படுத்தப்படும் பல இயந்திரங்களின் ஒலிகள் வரை, இந்த பறவை அப்படியே காபி அடித்துக் கத்தும். அதுமட்டுமல்லாது, கிளிகள், புறாக்கள் போன்ற மற்ற பறவைகளின் குரல்களையும் கவனித்து, அப்படியே திரும்பக் கத்தும்.

இந்தத் தனித்துவமான திறமையை வைத்து அது என்ன செய்யும்?

Liar Bird தனது பல வகையான குரல்களினால், தங்களது துணையைத் தேர்ந்தெடுத்து அதனை கவர முயற்சிக்கும். ஆம்! ஆண் பறவைகள் எப்படி பல குரல்களினால் தன் இணையை கவருமோ, அதேபோல் பெண் பறவைகள் தங்கள் கவர்ச்சிகரமான குரல்களினால் ஆண் பறவைகளைக் கவர முயற்சிக்குமாம். இந்தத் திறமைகள் மரபணுக்கள் மூலமாக, அவர்களுடைய குழந்தைகளுக்கும் செல்கின்றன. மேலும் அந்த குழந்தைகள் வளர வளர, சுற்றியுள்ள சத்தங்களை உள்வாங்கி பல ஒலிகளை எழுப்ப தானாகவே கற்றுக்கொள்கின்றன.

இதையும் படியுங்கள்:
அழகுக்கு மட்டுமில்லை நெடுஞ்சாலை அரளிச் செடிகள்!
Liar Bird

இப்போது இந்த வகையான பறவைகள் அழிவில் இல்லையென்றாலும், நகரமயமாக்குதல் மற்றும் காடழிப்பினால், பல அச்சுறுத்தல்களை சந்தித்து வருகின்றன. ஏனெனில், இந்தப் பறவைகள் முழுக்க முழுக்க அடர்ந்தக் காடுகளில் மட்டுமே வாழும். ஆனால், இப்போது நகரமயமாக்கப்பட்டதிலிருந்து சில பறவைகள் நகரங்களுக்குள்ளும் வாழ ஆரம்பித்துவிட்டன.

இந்த Liar Bird பொய்க் குரல்களை மட்டுமல்ல, அவ்வப்போது தங்களது செயல்களாலும் மற்றவர்களை ஏமாற்றி மகிழ்ச்சி அடையுமாம். Liar ன்னு பேர் வச்சா சும்மாவா பின்ன?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com