Lion Mane Jellyfish: பிரம்மாண்டத்தின் சுயரூபம்!

Lion Mane Jellyfish
Lion Mane Jellyfish

கடலில் நாம் தவறவிட முடியாத உயிரினங்களில் Lion Mane Jellyfish மிக முக்கியமானதாகும். ஏனெனில் கடலில் வாழும் உயிரினங்களிலேயே மிகப்பெரியது இதுதான். சுமார் 120 அடி நீளம் உள்ள இந்த பிரம்மாண்ட உயிரினம் உலகிலேயே மிகப்பெரிய விலங்கு எனக் கருதப்படும் நிலத்துமிங்கலத்திற்கு போட்டியாக உள்ளது. 

ஆர்டிக் மற்றும் வட பசுபிக் பெருங்கடலில் குளிர்ச்சியான நீர் நிலைகளில் இந்த வகை ஜெல்லி மீன்கள் அதிகம் காணப்படுகின்றன. பார்ப்பதற்கு ஒரு மணி போல காட்சியளிக்கும் இந்த உயிரினத்தின் அடிப்பகுதியில் நீண்ட சிங்கத்தின் பிடரி போன்ற அமைப்பு இருப்பதால் Lion Mane Jellyfish என அழைக்கப்படுகிறது. இந்த அமைப்பைப் பயன்படுத்தி அதன் இரையை அவை மூடும்போது, எந்த உயிரினமாக இருந்தாலும் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துவிடும். குறிப்பாக அவற்றில் விஷம் நிறைந்திருப்பதால், இதன் இரையால் எதுவுமே செய்ய முடியாது.

இந்த வகை ஜெல்லி மீன்கள் ஒளிரும் பயோ லூமினெசன்ட் திறன்களைக் கொண்டுள்ளது. அதாவது இருள் நிறைந்த இடத்திலும் இவற்றால் சொந்தமாக ஒளியை உருவாக்கி ஒளிர முடியும். அதேபோல இவற்றால் தொடர்ந்து நீந்தி, எவ்வளவு வலுவான நீரோட்டமாக இருந்தாலும் அதை கடந்து செல்ல முடியும். அதன் உடம்பில் இருக்கும் 1200 கொடுக்குகளைப் பயன்படுத்தி, மீன்களை இரையாகப் பிடிக்கும் பொறியை உருவாக்கி வேட்டையாடுகின்றன. 

இதையும் படியுங்கள்:
Blue Dragon: பெசன்ட் நகர் பீச்சில் காணப்பட்ட அழகான ஆபத்து!
Lion Mane Jellyfish

மனித நடமாட்டம் இல்லாத பகுதிகளில் இந்த வகை ஜெல்லி மீன்கள் அதிக அளவில் செழித்து வளர்கிறது என ஆய்வுகள் தெரிவிக்கிறது. ஏனெனில் மீன் பிடித்தல், காலநிலை மாற்றம் மற்றும் மாசுபாடு ஆகியவற்றால் இவை பாதிக்கப்படுவதில்லை என்பதால், இதன் இனம் ஓரளவுக்கு செழித்து வளர்கிறது. இதனாலேயே மனித இனத்திடமிருந்து ஒதுங்கி பாதுகாப்பாக வாழ்கிறது Lion Mane Jellyfish இனம். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com