நிலத்தில் நீண்ட காலம் வாழக்கூடிய மீன் இனங்கள்!

Land-lived fishes
Land-lived fishes
Published on

மீன்கள் என்றாலே பொதுவாக நீரில் வாழும் ஒரு உயிரினம் என்று அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஆனால், அதில் சில குறிப்பிடத்தக்க இனங்கள் நீண்ட நேரத்திற்கு நிலத்தில் உயிர் வாழ ஏற்றவாறு பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளன. அதற்கேற்றவாறு இந்த வகை மீன்கள் தனித்துவமான சில அமைப்புகளை தங்களுக்கென உருவாக்கியுள்ளன. இதனால் இந்த மீன்களால் காற்றை சுவாசிக்கவும், நிலப்பரப்பு சூழல்களிலும் நீந்தி செல்லவும் முடிகின்றன. அப்படி நிலத்தில் அதிக நேரம் வாழக்கூடிய சில மீன்களை பற்றி தெரிந்து கொள்வோம்.

மட்ஸ்கிப்பர்கள் (Mudskippers):

மட்ஸ்கிப்பர்கள் மிகவும் நன்கு அறியப்பட்ட அம்பிபியஸ் (Amphibious) மீன். ஆப்பிரிக்கா, பாலினேசியா (Polynesia) மற்றும் ஆஸ்திரேலியாவில் காணப்படும் இந்த மீன்கள் தங்கள் வாழ்நாளில் பாதிக்கு மேல் நிலத்தில் செலவிடுகின்றன. மட்ஸ்கிப்பர்களுக்கு சிறப்பு அதன் பெக்டோரல் துடுப்புகளாகும் (Pectoral Fins), அவை நிலத்தில் நடக்கவும், மேலும் அவை மரங்களில் குறிப்பிடத்தக்க தூரத்தை ஏறவும் உதவுகின்றன. இந்த மீன்கள் தோல், வாய் மற்றும் தொண்டையின் இரத்த நாளங்கள் வழிகளில் ஆக்சிஜனை சுவாசிக்கின்றன.

ஸ்னேக் ஹெட் மீன் (Snakehead Fish):

ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவை பூர்வீகமாகக் கொண்டது, ஸ்னேக் ஹெட் மீன். இந்த மீன்களுக்கு என தனித்துவமான சுவாச அமைப்பு உள்ளது. அதன் மூலம் காற்றை சுவாசிக்கின்றன மற்றும் இதன் மூலம் நிலத்தில் பல நாட்கள் உயிர் வாழ்கின்றன. பாம்புகள் எவ்வாறு நிலத்தில் நகர்கிறதோ அதேபோல், இந்த மீன்கள் தங்கள் உடலை நிலப்பகுதிகளில் அலை அலையாக நகர்த்தி நிலத்தில் செல்கின்றன.

நுரையீரல் மீன் (Lungfish):

நுரையீரல் மீன்கள் சுமார் 400 மில்லியன் ஆண்டுகளாக இருக்கும் பண்டைய மீன் வகையாகும். அவை செவுள்கள் (Gills) மற்றும் நுரையீரல் (Lungs) இரண்டையும் கொண்டிருக்கின்றன. இதன் மூலம் நீரிலும் நிலத்திலும் அவைகளை உயிர்வாழ அனுமதிக்கின்றன. வறண்ட காலங்களில் இந்த மீன்கள் சேற்றில் புதைந்து, அவற்றின் உடல் செயல்பாட்டை (Metabolism) குறைத்து அவற்றின் நுரையீரல் வழியாக காற்றை சுவாசிக்கும். இந்த அமைப்பு அவைகளை நீரின்றி பல மாதங்கள் அல்லது சில சமயங்களில் ஆண்டுகள் கூட உயிர் வாழ உதவுகிறது.

இதையும் படியுங்கள்:
ஆச்சரியம் அளிக்கும் பனையேறிக் கெண்டை மீன்!
Land-lived fishes

Epaulette சுறா:

ஆஸ்திரேலியா மற்றும் நியூ கினியாவில் (New Guinea) காணப்படும் இந்த சிறிய சுறா குறைந்த ஆக்ஸிஜன் சூழலில் வாழக்கூடியது மற்றும் அதன் தடுப்புகளை பயன்படுத்தி நிலத்தில் கூட நடக்க செய்யும். Epaulette சுறாக்கள் அவற்றின் வளர்சிதை மாற்றத்தை (Metabolism) குறைப்பதன் மூலம், காற்றில் இருந்து ஆக்ஸிஜனைப் பிரித்தெடுக்க அவற்றின் செவுள்களைப் பயன்படுத்தி நிலத்தில் பல மணி நேரம் தாக்குப்பிடிக்கும் வல்லமை படைத்தது. இந்த திறன் மற்ற மீன்களால் வரும் ஆபத்துகளில் இருந்து தங்களை காத்துக் கொள்கிறது.

பெட்டா மீன் (Betta Fish):

சியாமீஸ் சண்டை மீன் (Siamese fighting fish) என்றும் அழைக்கப்படும் பெட்டா மீன், தென்கிழக்கு ஆசியாவை பூர்வீகமாகக் கொண்டது. இதில் ஆண் மீன்கள் மிகவும் ஆக்ரோஷமாக காணப்படும். பெட்டா மீன்கள் ஒரு சிறப்பான உறுப்பு மூலம் தேவையான காற்றை சுவாசிக்கின்றன, இதன் மூலம் தான் அவற்றை குறைந்த ஆக்ஸிஜன் சூழலில் உயிர் வாழ அனுமதிக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com