ஃபிரிகேட் (frigate bird) - kleptoparasitism குணம் கொண்ட அற்புத கடற்பறவை!

இந்த Magnificent Frigatebirds கிளெப்டோபாராசிடிசம் (kleptoparasitism) எனப்படும் ஒரு தனித்துவமான குணம் கொண்டவை. அவை மற்ற பறவைகளிடமிருந்து உணவைத் திருடி வாழ்பவை என்பதாகும்.
Frigatebirds lifestyle
Frigatebird lifestyle
Published on

ஃபிரிகேட் பறவை (Frigatebird) - வியக்க வைக்கும் பறக்கும் திறன்கொண்ட ஒரு பெரிய கடற்பறவை ஆகும். இது ஃபிரிகேட் பெட்ரல் (frigate petrel) அல்லது மேன் ஓ வார் (man o' war) என்றும் அழைக்கப்படுகிறது.

இது சுமார் 89–114 செமீ நீளமும், 2.17–2.44 மீ இறக்கை விரிவையும் கொண்டது. இதன் எடை 1.1 முதல் 1.59 கிலோகிராம் வரை இருக்கும்.

பொதுவாக பழுப்பு-கறுப்பு நிற இறகுகள், நீண்ட, குறுகிய இறக்கைகள் மற்றும் ஆழமாகப் பிளவுபட்ட வால் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.

ஆண் பறவைகள் முழுவதுமாக கருப்பு நிறத்தில் இருக்கும். இனப்பெருக்க காலத்தில் பெண் பறவைகளை ஈர்க்க, பலூன் போல உப்பக்கூடிய பிரகாசமான சிவப்பு தொண்டைப்பையை (gular sac) பெற்றிருக்கும். சூரிய ஒளி அவற்றின் கருப்பு இறகுகளில் படும்போது, அவை ஊதா நிறப் பளபளப்பைக் காட்டும்.

பெண் பறவைகள் ஆண் பறவைகளை விட சற்று பெரியவை. பெரும்பாலும் கருப்பு நிறத்தில் இருந்தாலும், மார்பில் வெள்ளை நிறமும், தலையில் கருப்பு நிறமும் இருக்கும்.

இளம் பறவைகள் முதலில் வெள்ளை நிறத் தலையுடனும் வயிருடனும் இருக்கும், பின்னர் படிப்படியாக அவற்றின் தலைகள் கருமையாக மாறும்.

ஃபிரிகேட் பறவை உலகின் வேகமான பறவைகளில் ஒன்றாகும். இது மணிக்கு 95 மைல் வேகத்தில் பறக்கக்கூடியது. இவை 223 கிமீ (139 மைல்) தூரம் வரை இடைவிடாமல் பயணிக்கின்றன.

இந்த ஃபிரிகேட் பறவைகள் வெப்பமண்டல மற்றும் துணை வெப்பமண்டல நீர்நிலைகளில் வாழ்கின்றன. 

இவற்றை வடக்கு மெக்சிகோவிலிருந்து பெரு வரையிலும், புளோரிடாவிலிருந்து தெற்கு பிரேசில் வரையிலும் காணலாம். பசிபிக் பெருங்கடலில் உள்ள கலாபகஸ் தீவுகளிலும், அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள கேப் வெர்டே தீவுகளிலும் இவை காணப்படுகின்றன.

இதையும் படியுங்கள்:
துப்புரவுப் பறவைகள் ஐந்தும் அவற்றின் வாழ்வியல் அமைப்புகளும்!
Frigatebirds lifestyle

இவற்றின் முக்கிய உணவு மீன், ஸ்க்விட், ஜெல்லிமீன் மற்றும் ஓட்டுயிரிகள் (crustaceans) ஆகும்.

இந்த Magnificent Frigatebirds கிளெப்டோபாராசிடிசம் (kleptoparasitism) எனப்படும் ஒரு தனித்துவமான குணம் கொண்டவை. (இதன் பொருள், அவை மற்ற பறவைகளிடமிருந்து உணவைத் திருடி வாழ்பவை என்பதாகும்.)

பெண் பறவை பொதுவாக ஒரே ஒரு வெள்ளை முட்டையை இடும். இந்த முட்டையை ஆண் மற்றும் பெண் பறவைகள் இரண்டும் இணைந்து 50 முதல் 60 நாட்கள் வரை அடைகாக்கும். முட்டை பொரித்த பிறகு, ஆண் பறவை குஞ்சை விட்டுச் சென்றுவிடும். ஆனால் பெண் பறவை மட்டும் கிட்டத்தட்ட ஒரு வருடம் வரை குஞ்சைப் பராமரிக்கும்.

"ஃபிரிகேட் " என்ற பெயர் பிரெஞ்சு மாலுமிகளிடமிருந்து வந்தது. அவர்கள் இவற்றின் வேகம் மற்றும் சுறுசுறுப்பை ஒரு ஃபிரிகேட் போர்க் கப்பலுடன் ஒப்பிட்டனர்.

இதையும் படியுங்கள்:
இயந்திர ஒலிகளை அப்படியே காபி செய்து கத்தும் Liar Bird!
Frigatebirds lifestyle

கிறிஸ்டோபர் கொலம்பஸ் மற்றும் வில்லியம் டாம்பியர் போன்ற ஆய்வாளர்கள் இவற்றின் குறிப்பிடத்தக்க தோற்றத்தையும் நடத்தையையும் பதிவு செய்துள்ளனர். ஆங்கில மாலுமிகள் இவற்றை "மேன்-ஓ-வார் பறவைகள்" என்றும் அழைத்தனர்.

தற்போது, ஃபிரிகேட் பறவைகள் பாதுகாப்பு குழுக்களால் குறைந்த அக்கறை (Least Concern) கொண்ட இனமாக கருதப்படுகின்றன. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com