அர்ஜென்டினா முதல் ஹங்கேரி வரை: உலகின் முக்கிய மிதமான புல்வெளிகள்!

தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா, நியூசிலாந்து, ஹங்கேரி ஆகிய நாடுகளில் பரந்து விரிந்த புல்வெளிகள்;
major-temperate-grasslands
major-temperate-grasslands
Updated on

ந்த நாடுகள் பெரும்பாலும் கால்நடை வளர்ப்புக்கும், விவசாயத்திற்கும் பயன்படும் இயற்கை புல்வெளிகளைக் கொண்டுள்ளன.

அர்ஜெண்டினா - பாம்பாஸ்

இங்கு கால நிலை ஆண்டு முழுவதும் இதமான மழையுடன் மிதமான கால நிலைநிலவுகிறது. பெரும்பாலும் மரங்கள் இல்லாத சமமான நிலப்பரப்பு காணப்படுகிறது. தென் அமெரிக்காவின் முக்கிய வளமான, மிதமான பரந்த புல்வெளி பகுதி ஆகும். இப்பகுதி அர்ஜென்டைனாவின் மிக முக்கியமான விவசாயம் மையமாகும். இங்கு கால்நடை வளர்ப்பு, விவசாயத்திற்கு உலக அளவில் புகழ் பெற்றது.

தென் ஆப்பிரிக்கா - வெல்ட்

இது மிதமான புல்வெளிப் பகுதியாகும். இப்பகுதி லெசோதோ, ஈஸ்வதினி, ஜிம்பாப்வே, போட்ஸ்வானா ஆகிய நாடுகளில் பரவி உள்ளது. இப்பகுதி பொருட்கள் மற்றும் குறைந்த முட்செடிகளால் சூழப்பட்ட திறந்த நிலப்பரப்பை கொண்டது. இங்கு மிதமான குளிர்காலம் மே முதல் செப்டம்பர் வரை கோடை காலம் நவம்பர் முதல் மார்ச் வரை. கால்நடை மேய்ச்சல் மற்றும் விவசாயத்திற்கு உப்பில் வெளி பரவலாக பயன்படுத்தப்படுகிறது.

அமெரிக்கா - பரந்த பிரெய்ரி புல்வெளிகள்

இடம் அமெரிக்காவின் மத்திய பகுதியில் அமைந்துள்ள பரந்த மரங்கள் அற்ற மிதமான புல்வெளி சுற்றுச்சூழல் அமைப்பாகும். இவை கிரேட் ப்ளைன்ஸ் என்றும் அழைக்கப்படுகின்றன. இவை  குட்டை புல்வெளிகள் முதல் உயரமான புல்வெளிகள் வரை மாறுபட்டு வளர்கின்றன. புல்வெளிகள் பல்லுயிர் பெருக்கதத்திற்கு பெயர் பெற்றவை. கோதுமை, சோளம் போன்ற பயிர்கள் விளையும் முக்கிய விவசாய பகுதியாகும். மிதமான மழைப்பொழிவு பெறும் மத்தியபகுதியாகும்.

நியூசிலாந்து - ரஸ்ஸாக் புல்வெளி

நியூசிலாந்தின் இந்த புல்வெளி பகுதியில் அந்நாட்டின் தனித்துவமான இயற்கை அழகு சுற்றுச்சூழல் அமைப்பின் முக்கிய அங்கமாகும். பனி மூடிய மலைகளுக்கு மத்தியில் பரந்து விரிந்த மஞ்சள் பழுப்பு நிற டஸ்ஸாக் புல்வெளி நிலப்பரப்புகள் குறிப்பாக தெற்கு ஆல்ப்ஸ் அடிவாரத்தில் கண்கொள்ளாக் காட்சியாக காணப்படுகிறது. நியூசிலாந்தின் இந்த புல்வெளிப் பகுதிகள் அந்நாட்டின் தனித்துவமான இயற்கை அழகு, சுற்றுச்சூழல் அமைப்பின் முக்கிய அங்கமாகும். கால்நடை மேய்ச்சல் மற்றும் சுற்றுலாவுக்கு பெயர் பெற்றது.

இதையும் படியுங்கள்:
1 ஆம் எண் புயல் முதல் 11 ஆம் எண் புயல் வரை... எச்சரிக்கை விடும் எண்கள்! தெரிஞ்சுக்கோங்க...
major-temperate-grasslands

ஹங்கேரி - புஸ்டாஸ் புல்வெளி

கிழக்கு ஹங்கேரியில் அமைந்துள்ள ஒரு பரந்த மிதமான புல்வெளிப் பிரதேசம் இது. இந்த நாட்டில் தனித்துவமான புல்வெளி பகுதிகளை கொண்டு உள்ளது. இந்த நாடுகள் பல்லுயிர் பெருக்கத்திற்கும் கால்நடை வளர்ப்பிற்கு உகந்த இயற்கையான புல்வெளி சூழலை கொண்டுள்ளன. இது ஒரு முக்கிய சுற்றுலா தலமாகும். இங்கு பார்வையாளர்கள் ஹங்கேரிய  பாரம்பரிய வாழ்க்கை முறை கைவினைப் பொருட்கள் மற்றும் இயற்கை அழகை ரசிக்கலாம். சுருக்கமாகச் சொன்னால்

புல்டாஸ் என்பது ஹங்கேரியின் இயற்கை புல்வெளி மற்றும் கலாச்சார பாரம்பரியத்தின் ஒரு முக்கிய அடையாளமாகும்.

logo
Kalki Online
kalkionline.com