குட்டிகளை ஈன்றெடுக்கும் ஆண் மீன்கள், ஆழ்கடலில் அரிய உலகம்!

40 வகை கடல் குதிரைகள் கடல் சூழலின் நுட்ப சமநிலையை தாங்கும் போது, வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தில் சிறப்பு பாதுகாப்பு பெற்ற ஆண் தாய்மையின் அரிய உலகம்.
sea-motherhood
sea-motherhood
Updated on

லகின் மிகவும் புனிதமான விஷயம் என்று அனைவராலும் போற்றத்தக்கது தாய்மையே. அத்தகைய தாய்மையை அடையக்கூடிய கடலில் வாழும் மிகவும் அரிதான கடல் குதிரையின் தகவல்கள்.

உலகில் வித்தியாசமான உயிரினங்களின் கடல் குதிரை ஆண் இனம்தான் மிகவும் வித்தியாசமானது. ஏனெனில் இதில் பெண் இனம் குட்டிகளை ஈன்றெடுக்காமல் ஆணினம்தான் குட்டிகளை ஈன்றெடுக்கும். இவ்வளவு அரிதான கடல் குதிரைகள் மீன் இன வகைகளில் ஒன்று. இது மீன் இனத்தில் சேர்ந்தாலும் இதனுடைய முக அமைப்பு குதிரை போன்று இருப்பதால் இதற்கு கடல் குதிரைகள் என்று பெயர். வாய் சற்று நீளமாகவும் வால் குரங்கின் வால் போன்று இருக்கும்.

இது ஆறு முதல் 17 சென்டிமீட்டர் நீளமும் 4 கிராம் முதல் 140 கிராம் எடையை உடையது. இவை மிகவும் ஆழம் குறைவான பகுதிகளிலும் கடற்புற்கள் அல்லது பவள பாறைகள் இருக்கும் இடங்களில்தான் வசிக்கின்றன கடலில். இவை அதிகமாக விரும்பி உண்பது இறால் இனங்களையே.

இதனுடைய ஆயுட்காலம் 1 இருந்து 5 ஆண்டுகள் ஆகும். கடல் குதிரையின் கண்கள் அனைத்து பக்கங்களிலும் பார்க்கக்கூடிய சிறப்பு தன்மை கொண்டது. கடல் குதிரைகளுக்கு பற்கள் கிடையாததால் மூன்று சென்டிமீட்டர் தொலைவில் இருக்கும் உணவுகளை உறிஞ்சிய உட்கொள்ளும். உலகின் பெண் இனமே தாய்மையை உணரக்கூடியது குழந்தைகளை ஈன்றெடுக்கும் பாக்கியம் பெற்றது.

இதையும் படியுங்கள்:
200 கோடி ஆண்டுகளுக்கு முன்பே இயங்கிய இயற்கை அணு உலை... ஆப்பிரிக்காவில் சிக்கிய பகீர் ஆதாரம்!
sea-motherhood

ஆனால் கடல் குதிரைகளில் பெண் குதிரைகள் கடல் குதிரையின் வாள் பகுதிக்கு அருகில் இருக்கும் இனப்பெருக்க பையில் முட்டைகளை இட்டு சென்றுவிடும். ஆண் கடல் குதிரைகள் அந்த முட்டைகளை ஆறு வாரம் பத்திரமாக பார்த்துக்கொள்ளும். சுமார் 100 முதல் 300 குஞ்சுகளை ஆண் குதிரைகள் பொறிக்கும். அப்பொழுது பெண் இனத்தைப் போலவே ஆண் கடல் குதிரைகளும் பிரசவ வலியை அனுபவிக்கும். இந்த ஈன்ற குஞ்சுகள் ஒரு சென்டிமீட்டர் நீளம் கொண்டவை ஈன்ற பிறகும் குஞ்சுகள் தங்களுடைய பாதுகாப்பிற்காக ஆண் கடல் குதிரைகளின் இனப்பெருக்க பையினுள்ளிருக்கும்.

கடலில் 40 வகையான கடல் குதிரைகள் உண்டு. அனைத்து விலங்குகள் மற்றும் கடல் வாழ் உயிரினங்களுக்கு அச்சுறுத்தல் இருப்பது போலவே கடல் குதிரை குஞ்சுகளுக்கும் அதிகமான ஆபத்துக்கள் இருக்கின்றன. நண்டு மற்றும் பெண் குயின்கள் கடல் குதிரையின் குஞ்சுகளை விரும்பி உணவாக உண்கின்றன.

கடல் குதிரைகளே உலகின் தாய்மை உணர்ந்த ஆண் இனங்களாகும். கடல் குதிரைகளில் அதிக அளவு நன்மைகள் இருப்பதால் இவை அதிகமாக கடத்தப்படுவதும் உண்டு. வன உயிரின பாதுகாப்புச் சட்டம் 1972ன் படி கடல் குதிரைகள் மிகுந்த பாதுகாக்கப்பட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com