தொட்டால் உயிரைப் பறிக்கும் மரத்தைப் பற்றி தெரியுமா? 

Manchineel Tree
Manchineel Tree
Published on

உலகில் பல வகையான மரங்கள் உள்ளன. அவை நமக்கு நிழல், ஆக்ஸிஜன், கட்டுமானப் பொருட்கள் மற்றும் பல நன்மைகளை அளிக்கின்றன. ஆனால், அதேசமயம் சில மரங்கள் மிகவும் ஆபத்தானவை. அவற்றைத் தொட்டாலே உயிருக்கு ஆபத்து ஏற்படலாம். அத்தகைய மரங்களில் ஒன்றுதான் மன்சினீல் மரம் (Manchineel Tree). இதன் நச்சுத்தன்மை மிகவும் வீரியமானது. இந்தப் பதிவில் மன்சினீல் மரம் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்களைப் பார்க்கலாம். 

மன்சினீல் மரம் (Hippomane Mancinella) உலகின் மிகவும் ஆபத்தான மரங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இது முக்கியமாக மத்திய அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்காவின் கரிபியன் கடற்கரையோரங்களில் காணப்படுகிறது. இம்மரம் பெரும்பாலும் கடற்கரையோர பகுதிகளிலேயே அதிகம் வளரும். மன்சினீல் என்றால் ஸ்பானிஷ் மொழியில் சிறிய ஆப்பிள் என்று பொருளாகும். ஆனால், இவை மிகவும் நச்சுத்தன்மை உடையவை. 

இந்த விஷ மரம் பொதுவாக 15-20 மீட்டர் உயரம் வரை வளரும். இதன் இலைகள் மிகவும் பளபளப்பாகவும், பச்சை நிறமாகவும் இருக்கும். மரத்தின் பட்டை மென்மையாகவும் சாம்பல் நிறமாகவும் இருக்கும். மன்சினீல் மரத்தின் பழங்கள் சிறிய ஆப்பிள்களைப் போலவே இருக்கும். ஆனால், இவற்றை சாப்பிடக்கூடாது. இம்மரத்தின் ஒவ்வொரு பகுதியும் நச்சுத்தன்மை உடையது. இதன் இலைகள், பழங்கள், பால், பட்டை, வேர்கள் என எல்லாம் மிகவும் ஆபத்தானவை.

மன்சினீல் மரத்தின் நச்சுத்தன்மைக்கு பல காரணங்கள் உள்ளன. இதில் பல வகையான நச்சுப் பொருட்கள் உள்ளன. இந்த நச்சுப் பொருட்கள் தோலில் பட்டாலே தீக்காயங்கள் போன்ற புண்களை ஏற்படுத்தும். கண்களில் பட்டால் குருட்டுத்தன்மை ஏற்படலாம். இந்த மரத்தின் பழத்தை சாப்பிட்டால் வயிற்று வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் சில சந்தர்ப்பங்களில் இறப்பு கூட ஏற்படலாம். 

இதையும் படியுங்கள்:
தமிழர்களின் அடையாளமாக விளங்கிய மரம் எது தெரியுமா?
Manchineel Tree

இந்த மரத்தைப் பற்றி பல புராணங்கள் உள்ளன. சிலர் இந்த மரத்தை ‘மரண மரம்’ என்று அழைக்கின்றனர். சிலர் இந்த மரத்தின் நிழலில் கூட நிற்கக்கூடாது என நம்புகின்றனர். ஏனெனில், இந்த மரத்தின் இலைகளில் இருந்து விடும் நீர் கூட தோலில் புண்களை ஏற்படுத்துமாம். மன்சினீல் மரம் மிகவும் ஆபத்தானது என்றாலும், இதிலிருந்து சில பயன்களும் உள்ளன. சில பழங்குடி இன மக்கள் இந்த மரத்தின் பால் மற்றும் பட்டையைக் கொண்டு விஷத்தை தயாரிக்கின்றனர். சிலர் இந்த மரத்தை மரச்சாமான்கள் தயாரிக்கவும் பயன்படுத்துகின்றனர். ஆனால், இதை செய்யும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். 

இந்த மரம் நமக்கு பட பாடங்களை கற்றுத் தருகிறது. இது இயற்கையின் சக்தி மற்றும் அதன் ஆபத்துகளைப் பற்றி நமக்கு உணர்த்துகிறது. இது நாம் இயற்கையை மதித்து பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com