ஆசியாவை பூர்வீகமாக கொண்ட 'பழங்களின் ராணி'!
பொதுவாக நாம் அனைவருக்கும் பழங்களின் ராஜாவை பற்றி தெரிந்திருக்கும். முக்கனிகளில் ஒன்றான மாம்பழமே பழங்களின் ராஜா என அழைக்கப்படுகிறது.
ஆனால் பழங்களின் ராணியை பற்றி நாம் பெரும்பாலும் கேள்விப்பட்டிருக்க மாட்டோம். பழங்களின் ராணி என்று அழைக்கப்படுவது மங்குஸ்தான் பழமே. சற்று மங்கலான நிறத்தில் இருக்கக்கூடிய மங்குஸ்தான் பழமானது இனிப்பு மற்றும் புளிப்பு சுவைகளை உடையது.
தென்கிழக்கு ஆசியாவை பூர்வீகமாக கொண்ட மங்குஸ்தான், தென்னிந்தியாவின் மலைப்பகுதிகளில் தோட்டப்பயிராக வளர்க்கப்படுகிறது. மங்குஸ்தான் பழத்தில் நார்ச்சத்துக்கள் அதிகமாக உள்ளன. மங்குஸ்தான் பழத்தில் 3.5 கிராம் நார்ச்சத்து உள்ளது.
மங்குஸ்தான் பழத்தில் பரவலாக அனைத்து சத்துக்களும் உள்ளன. நீண்ட நேரமாக கணினி முன் அமர்ந்து வேலை செய்பவர்கள் கண் வறட்சியாவதால் கண் எரிச்சலால் அவதிப்படுவார்கள். மங்குஸ்தான் பழத்தை சாப்பிடும் போது கண் நரம்புகள் புத்துணர்வு பெறுவதால் கண் எரிச்சல் நீங்கும்.
பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படக்கூடிய அதிகப்படியான ரத்தப்போக்கை கட்டுப்படுத்துவதில் மங்குஸ்தான் பழம் முக்கிய பங்காற்றுகிறது.
உடலில் உருவாகக்கூடிய அலர்ஜி சம்பந்தமான நோய்களுக்கு மங்குஸ்தான் பழம் சிறந்த பலன் அளிக்கிறது.
ஈறு சம்பந்தமான நோய்களுக்கு இது நல்ல மருந்தாக பயன்படுகிறது.
உடலை எப்போதும் இளமையாக வைத்துக் கொள்ள விரும்புவர்கள் குறிப்பிட்ட சீசனில் மட்டுமே கிடைக்கக்கூடிய மங்குஸ்தான் பழத்தை தாராளமாக சாப்பிடலாம்.
மேலும் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவினை கட்டுப்படுத்துவதால் நீரிழிவு நோய் உள்ளவர்க மங்குஸ்தான் பழத்தை சாப்பிடலாம்.
பார்ப்பதற்கு சற்று மங்கலான நிறத்தில் இருந்தாலும் கூட மங்குஸ்தானில் அரிய வகை சத்துக்கள் நிறையவே உள்ளன.
அதனால்தான் மங்குஸ்தான், பழங்களின் ராணி என்று அழைக்கப்படுகிறது.
இரவில் மலரும் பிரம்ம கமலம் மலரை பற்றி தெரியுமா?
பிரம்ம கமலம் என்பது இரவில் மட்டுமே மலரக்கூடிய ஒரு பூ. மேலும் இது ஆண்டுக்கு ஒரு முறை தான் மலரும். ஜூலை முதல் செப்டம்பர் மாதங்களில் பூவானது மலரத் தொடங்குகிறது. மலரும் போது மிகுந்த நறுமணத்தைத் தரும். இமயமலையில் சில சிகரங்களில் மட்டுமே கிடைக்கக்கூடிய இந்த பிரம்ம கமலமானது பல்வேறு மருத்துவ குணங்களையும் கொண்டது.
சூரியனின் அஸ்தமனத்திற்கு பிறகும் மலரும் ஒரே மலர் பிரம்ம கமலம் மலர் தான்! இதனை பார்ப்பது மிகவும் அரிதானது. புராணங்களிலும் இதிகாசங்களிலும் பிரம்ம கமலம் மலரானது போற்றப்பட்டுள்ளது. வெள்ளை நிற நட்சத்திரம் போன்று பிரம்ம கமல மலரானது பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கும். மலர்ந்து 3 மணி நேரத்துக்குள் வாடும் தன்மை கொண்டது.
பூ மலரும் நேரத்தில் அதனை கண்டு தரிசிப்பதால் நினைத்தது நிறைவேறும் என்ற நம்பிக்கை பரவலாக மக்களிடம் உள்ளது. அபூர்வமாக சில நேரங்களில் ஒரே செடியில் பல பூக்கள் கூட மலரும். குறிப்பிட்ட சீதோஷண நிலையில் மட்டுமே வளரக்கூடிய செடியானதால், இதனை பெரும்பாலும் வீடுகளில் வளர்ப்பது அரிது.