பச்சை மிளகாயில் பல வகைகள் உண்டு. குண்டூர் மிளகாய், காஷ்மீரி மிளகாய், காந்தாரி மிளகாய் என பல வகைகள் உள்ளன. ஆனால் இவற்றில் எல்லாம் காரம் அதிகம் இருக்கும். காரம் சற்று குறைவான பச்சை மிளகாய் மாற்றான சில வகைகளை பார்க்கலாம்.
1) புத் ஜோலிகியா:
கின்னஸ் புத்தகத்தில் சாதனை படைத்த புத் ஜோலிகியா "பேய் மிளகு" என்றும் அழைக்கப்படும். இது அருணாச்சல பிரதேசம், அசாம், நாகாலாந்து மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் பயிரிடப்படுகிறது. இது மிகவும் காரமான மிளகாய். ஆனால் சிலருக்கு பச்சை மிளகாயின் அதிகப்படியான காரம் பிடிக்காது. இந்நிலையில் பச்சை மிளகாய்க்கு மாற்றாக வேறு எதனை சமையலில் சேர்க்கலாம் என்று இப் பதிவில் பார்க்கலாமா?
2) குடமிளகாய்:
பச்சை மிளகாய்க்கு சற்று காரம் குறைந்த பச்சை நிற குடைமிளகாயை சேர்த்து சமைக்க சுவையும் மணமும் கூடுதலாக இருக்கும்.
3) வாழைப்பழ மிளகாய்:
இது தோற்றத்தில் வாழைப்பழம் போல் வளைந்த வடிவம் மற்றும் மஞ்சள் நிறத்தில் காணப்படும். இது பச்சை மிளகாயை விட சற்று காரம் குறைவாகவும் அதே நேரத்தில் பச்சை மிளகாய்க்கு இருக்கும் அதே சுவையும் கொண்டுள்ளது. எனவே இந்த வாழைப்பழ மிளகாயை தாராளமாக பச்சை மிளகாய்க்கு மாற்றாக சமையலில் சேர்க்கலாம்.
4) போப்லனோ மிளகாய்:
மெக்ஸிகோவில் உள்ள போப்லெனோ எனும் இடத்தை பூர்வீகமாகக் கொண்டதால் இந்த மிளகாய்க்கு இப்பெயர் வந்தது. மணம், குணம் இரண்டுமே குடைமிளகாயின் காரத்துக்கு நிகரானது. பச்சை மிளகாய் போல் அதிக காரம் இல்லாமல் இருப்பதால் இதனையும் பச்சை மிளகாய்க்கு மாற்றாக பயன்படுத்தலாம்.
5) ஜால்பினோ மிளகாய்:
குடைமிளகாயின் ஒரு கிளை வகையாக கூறப்படும் இந்த ஜால்பினோ மிளகாய் பீட்சா போன்ற உணவுகளில் சேர்க்கப்படுகிறது. இதன் காரம் குடைமிளகாயின் காரத்துக்கு நிகராக இருக்கும். பொதுவாக பச்சை நிறத்தில் இருக்கும்போதே பயன்படுத்தப்படும் இது பழுத்து சிவப்பு, ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறமாக மாறியும் உணவில் பயன்படுத்தப்படுகிறது.
6) பெர்ஸோனோ மிளகாய்:
பார்ப்பதற்கு ஜால்பினோ மிளகாய் போல் தோற்றம் அளிக்கும் இதனை நூடுல்ஸ் மற்றும் பாஸ்தா போன்ற சீன உணவு வகைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. இதன் மணம் மற்றும் சுவை மிகவும் நன்றாக இருக்கும்.
7) பசிலா மிளகாய்:
குண்டு மிளகாய் போன்று காணப்படும் இந்த பசிலா மிளகாய் ரெண்டு இன்ச் அளவில் இருக்கும். இது காரம் குறைவாகவும் உணவின் சுவையை கூட்டும் தன்மையும் கொண்டது.
8) மெக்ஸிகன் மிளகாய்:
குடைமிளகாய்க்கும் வாழைப்பழம் மிளகாய்க்கு இடைப்பட்ட தோற்றத்தில் இருக்கும் இந்த மெக்சிகன் மிளகாய் இது பச்சை மிளகாயை விட குறைவான காரம் கொண்டது. இதன் பச்சை மற்றும் சிவப்பு மிளகாய் இரண்டும் மெக்சிகன் உணவு வகைகளில் சேர்க்கப்படுகின்றது. ஸ்டியூக்கள், சாஸ்கள் மற்றும் சல்சாக்கள் போன்ற உணவுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. இதனையும் பச்சை மிளகாய்க்கு மாற்றாக சமையலில் சேர்க்கலாம்.
9) செர்ரானோ மிளகாய்:
மெக்சிகோ நாட்டில் உள்ள மலை கிராமங்களில் கிடைக்கும் இந்த மிளகாய் குடைமிளகாயின் மாற்றாக பயன்படுகிறது. மெக்சிகன் மாநிலங்களான பியூப்லா மற்றும் ஹிடால்கோவின் மலைப்பகுதிகளில் விளையும் மிளகாய்கள் பொதுவாக சாஸ்கள் செய்ய பயன்படுகிறது. ஜலபினோ மிளகாயை விட சிறிது காரம் கொண்ட இதனை மெக்சிகன் உணவு வகைகளில் அதிகம் பயன்படுத்துகிறார்கள்.