பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டது மயிலாடுதுறை!

Mayiladuthurai.
Mayiladuthurai.

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மயிலாடுதுறை மாவட்டத்தை அறிவித்து அரசாணை வெளியீடு.

தமிழ்நாட்டின் மிக முக்கிய விளைச்சல் பகுதியாக கருதப்படுவது காவேரி நீர் பாயும் மாவட்டங்கள். இந்த டெல்டா பகுதிகளில் நிலத்திற்கு அடியில் எண்ணற்ற கனிம வளங்கள் நிரம்பி இருப்பதால் பல்வேறு தனியார் நிறுவனங்களும், பொதுத்துறை நிறுவனங்களும் மீத்தேன் எடுக்கவும், ஹைட்ரோ கார்பன் எடுக்கவும் என்று பல்வேறு விதமான கனிம வளங்களை எடுக்கவும் மற்றும் ஆய்வு செய்யவும் பணிகளை மேற்கொண்டனர்.

இதற்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் விவசாயிகள், மாணவர்கள் என்று பல தரப்பினர் நடத்திய போராட்டத்தின் எதிரொலியாக காவேரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களும், புதுக்கோட்டை மற்றும் கடலூர் மாவட்டங்களில் குறிப்பிட்ட சில பகுதிகளும் பாதுகாக்கப்பட்ட மேலாண் மண்டலங்களாக அறிவிக்கப்பட்டது.

இவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டதன் விளைவாக சம்பந்தப்பட்ட பகுதிகளில் கனிம வளங்கள் எடுக்கவோ மற்றும் அது குறித்து ஆய்வுகளை மேற்கொள்ளவோ தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
பொங்கலுக்கு வரும் அயலான்.. விற்றுத்தீர்ந்த தமிழ்நாடு உரிமை!
Mayiladuthurai.

இந்த நிலையில் சமீபத்தில் நாகப்பட்டினம் மாவட்டத்திலிருந்து பிரிந்த மயிலாடுதுறை மாவட்டத்தையும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழந்தது. இதை அடுத்து சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவின் அடிப்படையில் தற்போது மயிலாடுதுறை மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மயிலாடுதுறை அறிவிக்கப்பட்டதனால் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கனிம வளங்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதன் மூலம் விவசாயம் செய்ய தேவையற்ற தடைகள் ஏற்படா வண்ணம் தடுக்கப்பட்டுள்ளது என்று விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com