வீணான செடி அல்ல... வியக்கவைக்கும் மூலிகை ஆகாயத்தாமரை!

medical-benefits-
medical-benefits-
Updated on

ஆகாயத் தாமரை நீரில் கூட்டம் கூட்டமாக படர்ந்து வளரும். இந்த அழகான மூலிகைக்கு அந்த ரத்த தாமரை, வெங்காயத் தாமரை, குளிர்த் தாமரை, குளித்தாமரை, ஆகாய மூலி போன்ற பல பெயர்களும் உண்டு. இந்த தாவரத் தண்டுகளில் காற்று நிரப்பப்பட்டிருப்பதால் இது நீரில் மிதந்தபடியே வாழ்கிறது. இது ஊதா நிற பூக்களை கொண்டது. இது சிறு செடி வகையை சேர்ந்தது.

இதனை வீணான பொருளாக மட்டுமே நாம் பார்க்கிறோம். ஆனால் இதன் இலைகள் சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப் படுகின்றன. இது பல்வேறு மருத்துவ நன்மைகளைக் கொண்டுள்ளது. இதன் அற்புதமான பலன்களை பற்றி விரிவாக காணலாம்.

சிறு புண்கள் குணமாக

ஆகாயத்தாமரையின் இலையை நன்றாக அரைத்து கரப்பான், தோல்நோய் போன்ற பண்களின் மீது வைத்துக்கட்டினால் புண்கள் விரைவில் குணமாகும்.

மார்பக பிரச்னை சரியாக

பெண்களின் மார்பினுள் ஏற்படும் கிருமிகளின் தாக்கத்தை குணப்படுத்த 25 மில்லி ஆகாயத் தாமரையின் இலை சாறை எடுத்து சிறிது தேன் கலந்து தினமும் காலை, மாலை குடித்தால் கிருமிகள் அழிந்துவிடும். மேலும் நீர் சுருக்கு, மூலம், சீதபேதி ஆகியவையும் குணமாகும்.

கண் எரிச்சல் குணமாக

ஆகாயத்தாமரை இலையின் சாறு 400 மில்லி மற்றும் நல்லெண்ணெய் 800 மில்லி சேர்த்து இளம் சூடாக காய்ச்சி அதில் கிச்சிலிக் கிழங்கு (சந்தனத்தூள், வெட்டிவேர் கஸ்தூரிமஞ்சள், சாம்பிராணி என ஒவ்வொன்றையும் சிறிது எடுத்து அதனுடன் காய்ச்சி குளிரச்செய்து தினமும் காலை மாலை தலைக்கு தேய்த்து வந்தால் உடல் சூடு, கண்ணெரிச்சல் ஆகியவை குணமாகும்.

மூல நோய் குணமாக

மூல நோய்க்கு மருந்து தேடி அலைபவர்களுக்கு இதுமிகச் சிறந்த மருந்தாகும். இது எளிதில் கிடைக்கக்கூடியதும் கூட.

மூல நோய்க்கு இதன் இலைகளை அரைத்து வெளி மூலம், படித்திரம் உள்ள இடங்களில் பற்று போல போட்டு வந்தால் வலி, வீக்கம் குணமடையும்.

இதையும் படியுங்கள்:
பூச்சிகளை ஏமாற்றி வேலை வாங்கும் செடிகள்… தாவரங்களின் மாஸ்டர் பிளான்!
medical-benefits-

விஷ முறிவு குணமாக

தேள் கடி, வண்டுக்கடி போன்ற பூச்சிக் கடிகளால் ஏற்படும் வீக்கம் மற்றும் வலியைப் போக்க அதன் இலைகளுடன் சுண்ணாம்பு சேர்த்து அரைத்து பூசினால் குணமாகும்.

வயிற்றுப் போக்கு, சீதக்கழிச்சலயும், சிறுநீர் தாரையில் உண்டாகும் தொற்றுக்களையும் குணமாக்கும் மருத்துவ குணங்கள் இதற்கு உண்டு. ஆகாயத் தாமரையின் இலைகள் உள் வெளி மருந்தாக பயன்தருகிறது. பல்வேறு நன்மைகளை கொண்ட ஆகாயத் தாமரையை பயன்படுத்தி உடல் நலம் பெறலாம்.

நல்ல தண்ணீரில் உள்ளதா என்பதை கவனித்துப் பார்த்து சித்த வைத்தியரிடம் கேட்டு தெரிந்துகொள்ளலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com