ஐரோப்பாவை நடுங்க வைத்த மெகா விரியன்... விஞ்ஞானிகளை மிரள வைத்த புதைப்படிவங்கள் இதோ!

Gigantic Viper
Gigantic Viper
கிரி கணபதி

வணக்கம், என் பெயர் கிரி கணபதி. என்னைப் பற்றி அறிய ஆர்வம் காட்டியமைக்கு நன்றி! கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக Content Creation துறையில் இருக்கிறேன். Writing, Video Content, Podcast போன்றவற்றில் அனுபவம் உண்டு. உள்ளடக்க ஆராய்ச்சி மற்றும் AI கருவிகளைக் கையாள்வதில் நிபுணத்துவம் பெற்றுள்ளேன். ஆரோக்கியம், மோட்டிவேஷன், டெக்னாலஜி, சுற்றுச்சூழல் பற்றிய கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் அதிகம். டிஜிட்டல் துறையில் சிறந்து விளங்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் இயங்கிக் கொண்டிருக்கும் நான், நிலையான வசீகரிக்கும் உள்ளடக்கங்கள் மூலமாக வாசகர்களையும், பார்வையாளர்களையும் கவர முடியும் என முழுமையாக நம்புகிறேன்.

Updated on

மது பூமியின் கடந்த கால வரலாறு எப்போதுமே நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தத் தவறுவதில்லை. பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்கள் தோன்றுவதற்கு முன்பாகவே, நாம் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத பல விசித்திரமான விலங்குகள் இங்கு நடமாடியுள்ளன. அந்த வரிசையில், சுமார் நாற்பது லட்சம் ஆண்டுகளுக்கு முன்பாக வடக்கு கிரீஸ் நிலப்பரப்பில் வாழ்ந்த ஒரு பிரம்மாண்டமான பாம்பின் படிமங்கள் தற்போது உலகளாவிய தொல்லுயிரியல் ஆய்வாளர்களை மலைக்க வைத்துள்ளன. 

“லாஃபிஸ் குரோட்டலாய்ட்ஸ்” எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த உயிரினம்தான், பூமியில் இதுவரை கண்டறியப்பட்ட அதிக எடையுடன் வாழ்ந்த உச்சகட்ட விஷப்பாம்பாக இருந்திருக்கலாம் என உறுதியாகக் கணிக்கப்பட்டுள்ளது. 

ராஜநாகத்தை மிஞ்சிய வீரன்!

பொதுவாகவே உலகில் இருக்கும் அதிக நீளமான விஷப்பாம்பு என்றால் நம் நினைவுக்கு வருவது கிங் கோப்ரா எனப்படும் ராஜநாகம்தான். அவை தாராளமாக பதினெட்டு அடி வரை வளரும் தன்மை கொண்டவை. ஆனால் அவற்றின் உடல் மிகவும் ஒல்லியான தேகம் கொண்டது என்பதால் அவற்றின் மொத்த எடையே வெறும் ஒன்பது கிலோ என்ற அளவில்தான் இருக்கும்.

ஆனால், இந்த பழங்கால லாஃபிஸ் விரியன் பாம்பு அந்த உடல்வாகு லாஜிக்கை சுக்குநூறாக உடைத்துள்ளது. இதன் அதிகபட்ச நீளமே 10-13 அடி வரைதான் இருந்திருக்கிறது. இருப்பினும் இதன் மொத்த எடை சுமார் 26 கிலோவாகப் பதிவாகியுள்ளது. பார்ப்பதற்கு சற்று குட்டையாக இருந்தாலும், பயங்கரமான தசை வலிமையோடு ஒரு ஹெவி வெயிட் பாக்ஸர் போல இந்த பாம்பு காடுகளில் வலம் வந்துள்ளது. ராஜநாகத்தை விட மூன்று மடங்கு அதிக எடை கொண்ட இந்த ராட்சதனை நேரில் பார்த்தால் எப்படி இருக்கும் என நீங்களே சற்றே கற்பனை செய்து பாருங்கள்.

இதையும் படியுங்கள்:
கோடிகளில் சம்பளம்... உச்சகட்ட புகழ்! திடீரென மாயமான ஹாலிவுட் Cowboy!
Gigantic Viper

ஆராய்ச்சிகளின் ஆச்சரியம்!

பிரிட்டனைச் சேர்ந்த புகழ்பெற்ற தொல்லுயிரியல் நிபுணரான ரிச்சர்ட் ஓவன் என்பவர்தான் இந்த பாம்பின் தடயங்களை 1887 வருடம் முதன்முதலில் உலகத்திற்கு வெளிச்சம் போட்டுக் காட்டினார். தெசலோனிகி என்ற இடத்திற்கு அருகில் பூமிக்கு அடியில் கிடைத்த சில பிரம்மாண்ட முதுகெலும்புகளை வைத்து, இது ஒரு புதிய ரக ராட்சத விரியன் வகையைச் சேர்ந்தது என்பதை அவர் அப்போதே மிகத் துல்லியமாகக் கண்டுபிடித்தார். 

பிளியோசீன் எனப்படும் பழமையான காலகட்டத்தில் வாழ்ந்த இவை, அப்போதைய ஐரோப்பாவின் அடர்ந்த புல்வெளிகளிலும் இருண்ட காடுகளிலும் சர்வ சாதாரணமாக மற்ற விலங்குகளை வேட்டையாடித் திரிந்துள்ளன. மிகவும் குளிர்ச்சியான ஐரோப்பிய சீதோஷ்ண நிலையில், ரத்தத்தை உறைய வைக்கும் குளிரிலும் இவ்வளவு பிரம்மாண்டமான ஒரு ஊர்வன வகை உயிரினம் எப்படி சர்வைவ் செய்தது என்பது அறிவியலாளர்களுக்கு இன்றும் விடைதெரியாத ஒரு மிகப்பெரிய புதிராகவே தொடர்கிறது.

இதையும் படியுங்கள்:
சிங்கப்பூர் போறீங்களா? அப்படின்னா இந்த 7 விஷயத்தை கண்டிப்பா செய்யாதீங்க!
Gigantic Viper

இந்த லாஃபிஸ் பாம்பின் முழுமையான எலும்புக்கூடு இன்றுவரை ஆராய்ச்சியாளர்களின் கைகளில் கிடைக்கவில்லை. கிடைத்த ஒரு சில சிறிய எலும்புத் துண்டுகளை வைத்து பல ஆண்டுகளாக பல்வேறு விதமான அறிவியல் விவாதங்கள் நடந்து வந்தன. பின்னர் 2013 வருடம் சுவிஸ் ஜர்னல் ஆஃப் ஜியோசயின்சஸ் அமைப்பு வெளியிட்ட ஆவணத்தின்படி, இதுதான் உலகின் மிகப்பெரிய விரியன் பாம்பு என்பதை அதிகாரப்பூர்வமாக அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.

logo
Kalki Online
kalkionline.com