சிங்கப்பூர் போறீங்களா? அப்படின்னா இந்த 7 விஷயத்தை கண்டிப்பா செய்யாதீங்க!

Singapore is one of the cleanest cities
Singapore payanam articles
Published on

லகின் மிக ஒழுக்கமான சுத்தமான நகரங்களில் ஒன்றாக சிங்கப்பூர் இருக்கிறது இதற்கு காரணமான அங்கு கடைபிடிக்கப்படும் கண்டிப்பான ஏழு சட்டங்கள் குறித்து இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.

1. குப்பை போடக்கூடாது

சிங்கப்பூர் செல்பவர்கள் கண்டிப்பாக பொது இடங்களில் குப்பை போடக்கூடாது இது தண்டனைக்குரிய குற்றமாக உள்ளது. Environmental Public Health Act படி, குப்பை போட்டால் முதல் தடவை 1,000 SGD (சுமார் 60,000 ரூபாய்) ஃபைன். இரண்டாவது தடவை 2,000 SGD, மூன்றாவது தடவை 10,000 SGD. அதனுடன் *Corrective Work Order * என்ற தண்டனை. அதாவது குப்பை போட்டவர்கள் பிரகாசமான பச்சை வேஸ்ட் வைத்து பொது இடத்தை சுத்தம் செய்ய வேண்டும்.

2. பொது இடங்களில் புகைப்பிடிக்கக் கூடாது

சிங்கப்பூரில் பொது இடங்களில் புகைபிடிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. Smoking (Prohibition in Certain Places) Act படி, பஸ், MRT, தியேட்டர், ஏசி ரெஸ்டாரன்ட், பார்க், கடற்கரை போன்ற இடங்களில் புகைபிடித்தால் 200 SGD முதல் 1,000 SGD வரை ஃபைன். சிகரெட் துண்டை குப்பையில் போடாவிட்டால் 200 SGD ஃபைன். 21 வயதிற்கு சிகரெட் வாங்க முடியாது .

3. சூயிங்கம் தடை: உலகப் புகழ் பெற்ற சட்டம்

சிங்கப்பூரின் மிக பிரபலமான சட்டமான Regulation of Imports and Exports (Chewing Gum) படி, சூயிங்கம் இறக்குமதி, விற்பனை, வைத்திருத்தல் தடை செய்யப்பட்டுள்ளது முதல் தடவை 100,000 SGD ஃபைன் அல்லது 2 வருஷம் ஜெயில். இண்டாவது தடவை 200,000 SGD அல்லது 3 வருஷம் ஜெயில்.

இதையும் படியுங்கள்:
டெல்லியில் பார்த்து ரசித்ததும் சிலிர்க்க வைத்ததும்!
Singapore is one of the cleanest cities

4. பொது இடங்களில் மது அருந்தக்கூடாது

சிங்கப்பூரில் பொது இடங்களில் மது அருந்துவது தடை செய்யப்பட்டுள்ளது . Liquor Control (Supply and Consumption) Act 2015 படி, இரவு 10:30 மணி முதல் காலை 7 மணி வரை பொது இடங்களில் மது குடிக்கக்கூடாது. மீறினால் 1,000 SGD ஃபைன்.

5. ஜே-வாக்கிங் தடை

சிங்கப்பூரில் சாலையை தவறாக கடப்பது (Jay-walking) ஒரு குற்றம். Road Traffic Act படி, பெடஸ்ட்ரியன் கிராசிங் இல்லாமல் சாலையைக் கடந்தால் 500SGD பைன் அல்லது 3மாதம் ஜெயில்.

6. பொது இடங்களில் ஒலி எழுப்பக் கூடாது

சிங்கப்பூரில் பொது இடங்களில் ஒலி மாசு ஏற்படுத்துவது Miscellaneous Offences (Public Order and Nuisance) Act படி குற்றமாகும். மியூசிக் இன்ஸ்ட்ருமென்ட் வாசித்து பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தினால் 1,000 SGD ஃபைன்.

7. பொது கழிப்பறையை சுத்தமாக வைக்கணும்

சிங்கப்பூரில் பொதுகழிப்பறையை பயன்படுத்திய பிறகு ஃப்ளஷ் பண்ணாமல் விட்டால் Environmental Public Health (Public Cleansing) Regulations படி 1000SGD பைன். இந்த சட்டம் சிங்கப்பூரோட பொது சுகாதாரத்தை உயர்த்தியிருக்கிறது.

மேற்கூறிய சட்டங்கள் அனைத்தும் சிங்கப்பூர் நாட்டை உலக அரங்கில் உயர்த்தியதோடு, மக்களின் வாழ்க்கை தரத்தையும் உயர்த்தி இருக்கிறது. ஆகவே சிங்கப்பூர் சுற்றுலா செல்பவர்கள் கவனமாக அங்குள்ள சட்டங்களை மதித்து நடக்க வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com