உலகின் மிகச் சிறிய மற்றும் அதிக விஷத்தன்மை கொண்ட தவளை எது தெரியுமா?

Smallest and Poisonous Frog
Smallest and Poisonous Frog

இவ்வுலகில் ஏராளமான சிறிய தவளைகளும், விஷத்தன்மை கொண்ட தவளைகளும் உள்ளன. அந்தத் தவளைகளிலேயே மிகக் கொடிய விஷத்தன்மைக் கொண்ட சிறிய தவளை பற்றிதான் இந்தப் பதிவில் பார்க்கவுள்ளோம்.

ஏராளமான சிறிய விஷத்தன்மைக் கொண்ட தவளை உள்ளது என்றால், இப்போது இந்தத் தவளையின் சிறப்பு என்ன என்ற கேள்வி எழுகிறதா? இந்தத் தவளைதான் தனது சிறிய உருவத்திற்கும், அதில் அது அடக்கி வைத்திருக்கும்  விஷத்திற்கும் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. இந்தத் தவளை வெறும் 10மிமீ உயரம் கொண்டதாகும்.

இந்தத் தவளையை ஆராய்ச்சி செய்த வென்ஸஸ் என்ற அறிவியல் ஆராய்ச்சியாளர்தான் இதனை முதலில் கண்டுபிடித்ததும் கூட. இந்தத் தவளை ஒரு மிகமோசமான கெட்ட வாடையை வெளிப்படுத்துமாம். அதாவது தனது உடல் அளவுக்கு சம்பந்தமே இல்லாத அளவுக்குக் கெட்ட வாடையை கொண்டிருக்கும். இதன் தோலில் முழுக்க முழுக்க 200 மடங்கு Morphine மற்றும் Caffeine விஷத்தைவிட அதிகமான விஷம் படர்ந்திருக்கிறது என்று வென்ஸஸ் கூறியுள்ளார். இதுபோன்ற உலகில் நான்கு தவளைக் குடும்பங்கள் மட்டுமே உள்ளன என்றும், உயிரைக் கொல்லும் தன்மைக் கொண்ட தவளைகள் இவை என்றும் அவர் கூறுகிறார்.

1996ம் ஆண்டு கண்டுபிடித்த இந்த உயிரனம், 1998ம் ஆண்டு புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட உயிரினத்தின் பட்டியலில் அதிகாரப்பூர்வமாக சேர்க்கப்பட்டது. அளவில் சிறியதாக இருந்தாலும், இலைக்கு இலை தாவும்போது அளவுக்கு அதிகமான சுறுசுறுப்புடன் தாவும். இதனை ஒரு ஆராய்ச்சியாளர், “இலைக்கு இலை மாறும் இந்தத் தவளையை, ஒருமுறை விட்டால் பிடிக்க முடியாது.” என்று சொல்கிறார்.

இதையும் படியுங்கள்:
இரண்டு பிரம்மாண்டங்கள் மோதுகின்றன!
Smallest and Poisonous Frog

இப்படி குட்டியாக இருந்துக்கொண்டு அனைத்து சேட்டை வேலைகளையும் செய்யும் இதனின் பெயர் Monte Iberia Dwarf Frog. இதனுடைய அறிவியல் பெயர், Eleutherodactylus Iberia ஆகும். மிக குறுகிய அளவே இருக்கும் இந்த இனம், இப்போது பெரிய அளவில் குறைந்து வருவதால், அழிவை நோக்கிச் செல்லும் இனமாக இருந்து வருகிறது.

இதற்கு முக்கியமான காரணம், சாதாரண வெப்பநிலையைக் கூட சிறிய உயிரினங்களால் தாங்க முடியாது என்பதே. அதேபோல், காடுகளை அழிப்பதாலும் இந்த உயிரினம் அழிவைச் சந்தித்து வருகிறது. கியூபாவில் அதிகமாகக் காணப்படும் இந்தத் தவளை இரவில் மிக சுறுசுறுப்பாகவும், பகலில் தன்னிலை மறந்தும் தூங்குமாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com