2023 ஆம் ஆண்டு 22 புலிகள் உயிரிழந்திருப்பதாக இந்திய வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது
உலகில் உள்ள புலிகளில் 75 சதவீதம் இந்தியாவில் தான் உள்ளன. மேலும் இந்தியாவில் புலிகளை பாதுகாக்க 53 புலிகள் காப்பகங்கள் அமைக்கப்பட்ட செயல்பட்டு வருகின்றன. இந்தியாவின் பல்வேறு வகையான நிலப்பரப்புகளில், காலநிலைகளில் புலிகள் வாழ்கின்றன. எவ்வாறு 2022 ஆண்டு கணக்கெடுப்பின் படி இந்தியாவில் 3,167 புலிகள் வாழ்கின்றன.
பூமியில் புலிகள் வாழ ஏற்ற காலநிலை சூழல், நிலப்பரப்பு, உணவு என் அனைத்தையும் உள்ளடக்கியதாக இந்திய நிலப்பரப்புகளை காணப்படுகின்றன. மேலும் இந்தியா நாட்டின் தேசிய விலங்காக புலிகளை அங்கீகரித்து அவற்றிற்காக முக்கியத்துவம் அளித்து வருகிறது.
இந்த நிலையில் இந்திய வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பு வெளியிட்டிருக்க கூடிய அறிக்கை பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் புலிகள் உயிரிழந்ததை விட 2023 ஆம் ஆண்டு அதிக அளவிலான புலிகள் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இவ்வாறு இந்திய நிலப்பரப்பில் மட்டும் 202 புலிகள் நடப்பாண்டில் உயிரிழந்திருக்கின்றன. அவற்றிற்கு பல்வேறு வகையான காரணங்கள் கூறப்படுகின்றன.
முதுமை, எல்லையை பகிர்வதில் புலிகளுக்கு இடையே ஏற்படும் மோதல் அதனால் ஏற்படும் உயிரிழப்பு, நோய் மற்றும் மனிதர்களால் வேட்டையாடப்படுவதாலும் புலிகள் உயிரிழந்திருக்கின்றன. தற்போது பருவநிலை மாற்றத்தால் ஏற்பட்டுள்ள அளவுக்கு அதிகமான வெயில், தண்ணீர் தட்டுப்பாடும் புலிகளினுடைய உயிரிழப்புக்கு காரணமாக அமைந்திருக்கிறது.
50 புலிகள் உயிரிழப்பு என்பது 500 ஆண்டு கால பயன் இழப்பு ஆகும். இப்படி புலிகள் உயிரிழப்பதன் மூலம் அதிக அளவிலான தாவர உண்ணிகள் உருவெடுக்க காரணம் ஏற்படும். இதனால் உணவு சங்கிலி பாதிக்கப்படும். இது காடுகளுக்கு ஏற்றதல்ல. இதனால் புலிகளினுடைய உயிரிழப்பை மிக முக்கிய பிரச்சினையாக கருதி அவற்றிற்காக செய்ய வேண்டிய நடவடிக்கைகளை அரசாங்க மேற்கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.