இயற்கையின் மர்மங்கள்: விஞ்ஞானிகளைத் திணறடிக்கும் 9 விசித்திர தாவரங்கள்!

Plants that baffle scientists
Strange plants
Published on

யற்கையின் படைப்பில் பல வகையான பறவைகள், விலங்குகள், மரங்கள், செடி கொடிகள் இருப்பதைக் காண்கிறோம். இவற்றுள் சில வகைகள் மனிதர்களால் புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு விசித்திரமான வாழ்வியலைக் கொண்டுள்ளன. அவற்றின் போக்கை விஞ்ஞானிகளால் கூட கண்டறிவது சிரமமாக உள்ளது. அவ்வாறான 9 வகை செடிகளைப் பற்றி இப்பதிவில் காணலாம்.

1. கோஸ்ட் ஆர்ச்சிட் (Ghost Orchid): இதழ்கள் இல்லாத பூக்களை அடிக்கடி பூக்கக்கூடிய இந்த இராட்சத வகைச் செடிகள் அமெரிக்கவிலுள்ள ஃபுளோரிடாவின் சதுப்பு நிலக் காடுகளில் காணப்படுகின்றன. இவை மகரந்தச் சேர்க்கைக்கு கூம்பு அந்துப்பூச்சி (Cone Moth)களை நம்பியுள்ளன. பற்பல ஆண்டுகளாக விஞ்ஞானிகளுக்கு இவை விளங்காத புதிராகவே உள்ளன.

2. டைடன் அருன் (Titan Arun): இச்செடியின் பூக்கள், 'கார்ப்ஸ் ஃபிளவர்ஸ் (Corpse Flowers)' என அழைக்கப்படுகின்றன. இப்பூக்களிலிருந்து வீசும் கடுமையான, சகிக்க முடியாததொரு வாசனையே இதற்கான காரணமாகும். இவை பல வருடங்களுக்கு ஒரு முறைதான் பூக்கக்கூடியவை. பூக்கள் பூப்பதில் இச்செடிகள் கொண்டுள்ள நிலையற்ற தன்மை விஞ்ஞானிகளை பெருங்குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் படியுங்கள்:
நாகப்பாம்பு கடிச்சா விஷம் ஏறாதா? 30% 'Dry Bite'னா என்ன தெரியுமா?
Plants that baffle scientists

3. வெல்விட்ச்சியா (Welwitschia): சரித்திர காலத்திற்கு முன்பே பாலைவனப் பிரதேசங்களில் வளர்ந்து வரும் இச்செடிகள் இரண்டு பெரிய இலைகளை மட்டுமே கொண்டுள்ளன. ஆயிரம் வருடங்களுக்கு ஒரு முறை மட்டுமே இந்த இரண்டு இலைகள் தோற்றுவிக்கப்படுகின்றன. மற்ற மரம், செடி, கொடிகளின் ஆயுட் காலத்துடன் இதை ஒப்பிடுகையில் இதன் வளர்ச்சியும் வாழ்வும் மிகவும் விசித்திரமானதாக உள்ளது.

4. ஜேட் ஒய்ன் (Jade Vine): இது பச்சை கலந்த நீல நிறத்தில் பூக்கள் பூக்கக்கூடியது. இதன் மகரந்தச் சேர்க்கை வௌவால் மூலம் நடைபெறுகிறது. இதன் வாழ்வியல் முறை மற்ற செடிகளைப் போல இருந்தாலும், இதன் பிறப்பிடமான பிலிப்பைன்சின் மழைக் காடுகள் தவிர, வேறெங்கும் இது வளராது.

5. ஹீ கோஸ்ட் பிளான்ட் (He Ghost Plant): இத்தாவரத்தில் பச்சையம் (Chlorophyll) கிடையாது. ஆகையால், இதன் நிறம் வெள்ளையாக உள்ளது. பச்சையம் இல்லாததால், தனக்குத் தேவையான உணவை தானே உற்பத்தி செய்துகொள்ள முடியாது. இத்தாவரம் மற்ற பூஞ்சை மீது ஒட்டுண்ணிகளாய் தங்கி வாழக்கூடும் என்று கருதப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
உங்கள் வீட்டில் நிம்மதி வேண்டுமா? இந்த ஒரு ஜப்பானிய கலை போதும்!
Plants that baffle scientists

6. ரஃபிளேசியா அர்மோல்டிய் (Rafflesia Armoldii): அழுகிய மாமிச வாசனையுடன், உலகிலேயே மிகப்பெரிய சைஸ் உள்ள பூக்களைப் பூக்கக் கூடியது இந்தத் தாவரம். இப்பூக்கள் குறிப்பிட்டுச் சொல்ல முடியாத நேரங்களில், திடீரென தோன்றி கொஞ்ச நாட்கள் மட்டுமே உயிர்ப்புடனிருக்கும்.

7. விக்டோரியா அமேசோனிகா (Victoria Amazonica): மிகப்பெரிய உருவம் கொண்ட மிதக்கும் வெள்ளை நிற அமேசான் வாட்டர் லில்லி இது. இதன் பூக்கள் முதல் நாள் வெள்ளை நிறத்திலும், இரண்டாம் நாள் பிங்க் நிறத்திலும், மூன்றாம் நாள் பர்ப்பிள் நிறத்திலும் தோற்றமளிக்கும். தனித்துவம் மிக்க இதன் உருவமும் தசை வலிமை மிக்க இத்தாவரத்தின் கட்டமைப்பும் இன்றும் விஞ்ஞானிகளை ஆச்சரியப்பட வைக்கின்றன.

8. பேட் ஃபிளவர் (Bat Flower): விசித்திரமான தோற்றமுடன் கருமை நிறம் கொண்ட இந்தப் பூ நீண்ட, கூர்மையான கன்ன மயிர்க்கற்றை (Whiskers)யுடைய வௌவால் போன்றிருக்கும். இதன் விசித்திரமான உருவமும், ரகசிய மகரந்த சேர்க்கை முறைகளும் விஞ்ஞானிகளை ஆச்சரியம் கொள்ள வைக்கின்றன.

9. சென்சிடிவ் மிமோசா (Sensitive Mimosa): சென்சிடிவ் மிமோசாவின் இலைகள் யாராவது தொட்டவுடன் தானே சுருங்கிக்கொள்ளும். மின் தூண்டுதல் போலிருக்கும் இச்செயலுக்கான காரணம் இன்று வரை விஞ்ஞானிகளுக்கு மர்மமாகவே உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com