பாம்புகளைப் பற்றிய வினோத கட்டு கதைகள்..! இதெல்லாம் உண்மையே கிடையாதுங்க...!

Snake Myths
Snake Myths
Published on

பாம்புகள், உணவு சங்கிலியில் ஒரு முக்கிய இடத்தை பெறுகின்றன. சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை சமநிலையை பேணி காப்பதில் பாம்புகள், மறைமுகமாக பல நன்மைகளை செய்கின்றன. அப்படிப்பட்ட இந்த பாம்புகள் தான் ஒரு சில நேரங்களில், எதிர்பாராத விதமாக மனிதனுக்கு ஆபத்தாக மாறுகிறது. இருந்தும் பாம்புகள் பற்றிய பொய்யான வினோத கட்டுக் கதைகள் இன்றும் சொல்லப்பட்டு தான் வருகிறது. அந்தக் கட்டுக்கதைகள் என்னென்னவென்று..? இந்த பதிவில் பார்ப்போம்.

இதையும் படியுங்கள்:
பல முறை திருடப்பட்டும் தானாகக் கோயிலை தேடி வந்த அதிசய அம்பிகை திருச்சிலை!
Snake Myths

பாம்புகளைப் பற்றிய கட்டுக் கதைகள்.

  1. ஒருவரால் ஒரு பாம்பு சாகடிக்கப்பட்டால், அந்தப் பாம்பின் துணைப் பாம்பானது அந்த நபரை பழிவாங்கும் அல்லது பழிவாங்க காத்துக் கொண்டிருக்கும். - (பாம்புகள் பொதுவாக பழி வாங்குவதில்லை. ஞாபகம் வைத்துக் கொள்ளும் திறனும் குறைவுதான்)

  2. பாம்புகள் பால் குடிக்கும். - (பாம்புகள் என்றுமே தாகத்திற்கு தண்ணீர் தான் குடிக்கும்)

  3. பாம்புகளுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட தலைகள் இருக்கும். அதாவது இரண்டு தலை நாகம், ஐந்து தலை நாகம், 10 தலை நாகம் என்று பாம்புகள் இருக்கும். - (பாம்புகளுக்கு ஒரு தலை மட்டுமே உண்டு. சினிமாவில் மட்டுமே ஐந்து தலை நாகம் சாத்தியம்) 

  4. வயதான இராஜாநாகப் பாம்புகளின் வாயிலிருந்து மதிப்புமிக்க நாகமாணிக்க கல்லானது கிடைக்கும். - (பாம்புகளின் ஆயுட்காலம் 20 இலிருந்து 30 ஆண்டுகள். பாம்பிடமிருந்து நாகமாணிக்கம் கிடைப்பதில்லை.)

  5. பாம்பாட்டிகளின் மகுடி சத்தத்தை கேட்டு, பாம்புகள் அதற்கேற்றார் போல் நடனமாடும். - (மகுடியின் அசைவை நோக்கியே நகரும். இதை நாம் நடனம் என்று தவறாகப் புரிந்துகொள்கிறோம்)

  6. பெரும்பாலும் பாம்பின் தலையின் வடிவத்தை வைத்து தான், அந்த பாம்பின் விஷத்தை அறிய முடியும். - (பாம்புகளின் விஷம் அதன் இனத்தை பொறுத்து மாறுபடும்)

  7. பாம்புகள் காற்றில் நீண்ட தூரம் பறக்கும் சக்தி படைத்தவை. - (பாம்புகள் காற்றில் பறப்பதில்லை, ஒரு கிளையில் இருந்து மற்றொரு கிளைக்கு தாவுகின்றன.)

  8. பெரும்பாலான பறக்கும் மற்றும் வைன் பாம்புகள் காற்றில் பறந்து வந்து, மனிதனின் கண், தலை போன்ற பகுதிகளில் துளையிட்டு இரத்தத்தை உறிஞ்சும். (எந்த ஒரு பாம்பும் துளையிட்டு இரத்தத்தை உறிஞ்சுவதில்லை)

  9. ஒரு பாம்பை அடித்தால், கண்ணுக்கு ஒன்பது பாம்பு தொடர்ந்து தென்படும். நல்ல பாம்பை அடித்துக் கொன்றால், பாம்பை புதைத்து, அந்த இடத்தை சுற்றி பால் ஊற்ற வேண்டும். - (பாம்பை கொன்றால் ப்ளூ கிராஸ்தான் நமது கண்ணுக்கு தெரியுமே தவிர, தொடர்ந்து ஒன்பது பாம்புகள் கண்ணுக்கு தெரியாது)

  10. பாம்புகள் விஷத்தை காற்றில் அதிக தூரம் பீச்சி அடிக்கும். இதனால் விஷம் நமக்கும் ஏற கூடும். - (குறிப்பிட்ட சிறிய தொலைவுகளுக்குள்ளேயே விஷத்தை பீச்சி அடிக்கின்றன)

  11. பாம்புகளின் வாலில் விஷம் இருக்கும். அதேபோல் ஊசி போல் கொடுக்கு காணப்படும்.

  12. பாம்பு சட்டையை கையில் தேய்த்தால், கையானது இரும்பு போல் வலிமையாகும்.

  13. பாம்புகளுக்கு காதுகள் உண்டு. எல்லா சத்தங்களும் துள்ளியமாக அதற்கு கேட்கும். - (நாக்கின் மூலமே வெளிப்புற சத்தங்களை உணர்ந்து கொள்கின்றன)

  14. பெண் நாகப் பாம்பும், ஆண் சாரை பாம்பும் இனப்பெருக்கத்தில் ஈடுபடும். - (உண்மையில் பாம்புகள் தங்கள் இனத்தில் தான் இணை சேரும்).

இதையும் படியுங்கள்:
கருப்பு, பச்சை, சிவப்புன்னு பல நிறங்கள்ல தங்கமா? உங்களுக்குத் தெரியுமா?
Snake Myths

இப்படி பல கட்டுக் கதைகளை பாம்பின் விஷயங்களில் நாம் பார்க்கிறோம். எனவே முறையான உண்மையான தகவல்களை மட்டுமே நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். மற்ற நேரங்களில் பாம்புகளின் விஷயங்களில்  இது போன்ற கட்டுக் கதைகளை ஒருபோதும் நாம் நம்ப கூடாது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com