கருப்பு, பச்சை, சிவப்புன்னு பல நிறங்கள்ல தங்கமா? உங்களுக்குத் தெரியுமா?

Gold in every color
Nature's Colorful Treasures

ஹாய் குட்டீஸ்! தங்கம் என்றால் மஞ்சள் மட்டுமல்ல. பச்சை, கருப்பு, நீலம் எனப் பல வண்ணங்களில் 'தங்கம்' இருக்கு! நாம் தினமும் பார்க்கும் சில பொருட்கள் ஏன் இந்த அதிசயப் பெயரைப் பெற்றன? வாங்க, இந்தச் சூப்பர் ரகசியத்தை தெரிஞ்சுக்கலாம்!

1. பச்சை தங்கம் (Green Gold):

Bamboo and tea
Bamboo and tea

விடை: மூங்கில் மற்றும் தேயிலை.

காரணம்: இவை பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த பயிர்கள்.

2. கருப்பு தங்கம் (Black Gold):

Petrol or Oil
Petrol or Oil

விடை: பெட்ரோலியம் அல்லது கச்சா எண்ணெய்.

காரணம்: இதன் வணிகம் மற்றும் பொருளாதார முக்கியத்துவம் காரணமாக இவ்வாறு அழைக்கப்படுகிறது.

3. முட்டாள்களின் தங்கம் (Fool's Gold):

Pyrite
Pyrite

விடை: பைரைட் கனிமம் (Pyrite).

காரணம்: இதன் தங்க நிறம் மற்றும் உலோகப் பளபளப்பு காரணமாக, உண்மையான தங்கமாகத் தவறாக கருதப்படுவதால் இப்பெயர் வந்தது.

இதையும் படியுங்கள்:
சிறுவர் சிறுகதை: மந்திரக் கைத்தடி!
Gold in every color

4. கருப்பு வைரம் (Black Diamond):

Coal
Coal

விடை: நிலக்கரி.

காரணம்: இதன் அத்தியாவசிய பயன்பாட்டின் காரணமாக இப்பெயர் பெற்றது.

5. கடல் தங்கம் (Sea Gold) அல்லது மிதக்கும் தங்கம் (Floating Gold):

Ambergris
Ambergris

விடை: திமிங்கல வாந்தி (அம்பர்கிரிஸ்).

காரணம்: இதன் விலை தங்கத்தை விட அதிகமாக இருப்பதால் 'மிதக்கும் தங்கம்' என்றும் அழைக்கப்படுகிறது. இது நீண்ட நேரம் நீடிக்கும் வாசனைத் திரவியங்கள் (perfumes) செய்யப் பயன்படுகிறது.

6. காய்கறி தங்கம் (Vegetable Gold) அல்லது தங்க இழை (Golden Fiber):

Jute
Jute

விடை: சணல் (Jute).

காரணம்: இதன் பிரகாசமான நிறம் மற்றும் அதிக சந்தை மதிப்பு காரணமாக இவ்வாறு அழைக்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
கண்ணைக் கவரும் 'கலைடாஸ்கோப்'
Gold in every color

7. வெள்ளை தங்கம் (White Gold):

Cotton
Cotton

விடை: பருத்தி (Cotton).

காரணம்: இந்தியாவின் பொருளாதார முக்கியத்துவத்தின் காரணமாக இவ்வாறு அழைக்கப்படுகிறது.

8. வெள்ளை வைரம் (White Diamond):

Uranium
Uranium

விடை: யுரேனியம்.

காரணம்: இதன் அதிக மதிப்பு மற்றும் ஆற்றல் மூலமாகப் பயன்படுவதால் இப்பெயர் பெற்றது.

9. நீல தங்கம் (Blue Gold):

water
water

விடை: தண்ணீர் (Water).

காரணம்: இது மிகவும் மதிப்புமிக்க ஆதாரமாக இருப்பதால் இவ்வாறு குறிப்பிடப்படுகிறது.

10. திரவ தங்கம் (Liquid Gold):

Milk, Petrol and Argan oil
Milk, Petrol and Argan oil

விடை: கழுதை பால், பெட்ரோலியம் (கச்சா எண்ணெய்), ஆர்கன் எண்ணெய்.

காரணம்: கழுதைப் பாலின் மகத்தான மருத்துவ குணங்கள், பெட்ரோலியத்தின் பொருளாதார மதிப்பு மற்றும் ஆர்கன் எண்ணெயின் அழகு நன்மைகளுக்காக இவை திரவத் தங்கம் என்று குறிப்பிடப்படுகின்றன.

11. சிவப்பு தங்கம் (Red Gold):

saffron
saffron

விடை: குங்குமப்பூ (Saffron).

காரணம்: அதன் அதிக மதிப்பு மற்றும் சிவப்பு நிறம் காரணமாக இவ்வாறு அழைக்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
பில்டிங் பிளாக்ஸ் (Building Blocks) பற்றி நீங்கள் அறிந்திராத ரகசியங்கள்!
Gold in every color

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com