பூச்சிகளை விரட்ட இயற்கையான வேப்பெண்ணெய் - தெரிந்து கொள்ள வேண்டிய அற்புதப் பயன்கள்!

Natural neem oil to repel insects
Natural neem oil to repel insects.
கலைமதி சிவகுரு

I am so thankful for kalki in my life. I am graduate from Holy Cross college in Nagercoil in the year 1983.I also tailaring work and make some bags, pouches. My writing were published in mangayarmalar, and Devathai, kudumbamalar with thinathanthi and received some prizes. Now I am writing in kalki publications. Cooking, Writing, reading anmigam books, playing chess are my hobbies.

Updated on: 

மரங்களை நோய்களிலிருந்தும் பூச்சிகளிலிருந்தும் இயற்கையாகப் பாதுகாக்க உதவும் எண்ணெய் என்றால் அது முக்கியமாக வேப்பெண்ணெய் (Neem Oil) ஆகும்.

வேப்ப மர விதைகளிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய்தான் வேப்பெண்ணெய். இதில் Azadirachtin என்ற இயற்கை வேதிப்பொருள் உள்ளது. இது பூச்சிகளின் வளர்ச்சியைத் தடுக்கிறது.

மரங்களுக்கு ஏற்படும் முக்கிய ஆபத்துகள்

மரங்களை பாதிப்பவை: இலை தின்னும் புழுக்கள், சாறு உறிஞ்சும் பூச்சிகள், பூஞ்சை நோய்கள், மரத்தடி பூச்சிகள், இவையனைத்தையும் வேப்பெண்ணெய் கட்டுப்படுத்தும்.

வேப்பெண்ணெய் செயல்: பூச்சிகள் சாப்பிட முடியாமல் செய்கிறது. புழுக்கள் வளர முடியாமல் தடுக்கிறது. முட்டைகள் உருவாகாமல் அழிகின்றன. பூஞ்சை நோய் பரவுவதை தடுக்கிறது. இதனால் பூச்சிகள் இனப்பெருக்கம் கூட செய்ய முடியாது.

மரங்களுக்கு வேப்பெண்ணெய் பயன்படுத்தும் முறை

கலவை: வேப்பெண்ணெய் – 5 ml, திரவ சோப்பு – 1 ml, தண்ணீர் – 1 லிட்டர். நன்றாக கலந்து காலை அல்லது மாலை 7 முதல் 10 நாட்களுக்கு ஒருமுறை தெளிக்கலாம்.

வேப்பெண்ணெயின் சிறப்புகள்

ரசாயன பூச்சிக்கொல்லி இல்லை, மண்ணுக்கு தீங்கு இல்லை, பறவைகள், தேனீக்கு பாதுகாப்பு, மரத்தின் இயற்கை சக்தியை அதிகரிக்கும். ஒரு சின்ன அறிவியல் விஷயம் என்ன வென்றால், வேப்பெண்ணெய் ஒரு Biopesticide. அதாவது இது இயற்கையால் உருவான பூச்சிக்கொல்லி. மண்ணையும் உயிர்களையும் பாதிக்காமல், பூச்சிகளை மட்டும் கட்டுப்படுத்தும்.

மரங்களை காப்பது + பூமியை காப்பது, அதற்கு நம்மிடம் உள்ள மிகச்சிறந்த இயற்கை ஆயுதம் வேப்பெண்ணெய்.

இதையும் படியுங்கள்:
500 ஆண்டுக்கால மர்மங்களைத் தாங்கி நிற்கும் லியுல்லைலக்கோ எரிமலை!
Natural neem oil to repel insects

கிரியோசோட் எண்ணெய் (Creosote Oil)

கிரியோசோட் எண்ணெய் என்பது மரங்களை அழிக்கும் பூச்சிகள், பூஞ்சைகள், ஈரப்பதம் ஆகியவற்றிலிருந்து, மரங்களை நீண்ட காலம் பாதுகாக்கப் பயன்படும் ஒரு சிறப்பு ரசாயன எண்ணெய் ஆகும்.

கிரியோசோட் எண்ணெய் என்றால் என்ன?

கிரியோசோட் என்பது நிலக்கரி (Coal) அல்லது மரம் எரிக்கும்போது உருவாகும் கருப்பு, கனமான எண்ணெய். அதாவது; Coal Tar- Distillation - Creosote Oil.

இதன் பயன்பாடு: மரக்கம்பங்கள், மின்கம்பம், வேலி கம்பங்கள், ரயில்வே ஸ்லீப்பர்கள் தண்டவாளத்தில் பாலங்கள் மர அடிப்பாகம், கடற்கரை மரங்கள், உப்பு நீர் எதிர்ப்பு, மர வீடுகள் பூச்சி எதிர்ப்பு. இதனால் மரம் 30 முதல் 50 வருடங்கள் கூட அழியாமல் இருக்கும்.

இது எப்படி மரத்தை காக்கிறது?

கிரியோசோட் மரத்துக்குள் ஊடுருவி பூச்சிகளை கொல்லும், பூஞ்சையை அழிக்கும், நீர் புகாமல் தடுக்கும். இதனால் கரையல் பூச்சி, மர அழுகல், ஈரப்பத சேதம், எல்லாம் தடுக்கப்படும். ஆனால் ஒரு முக்கிய எச்சரிக்கை கிரியோசோட் மனிதனுக்கு விஷம், புற்றுநோய் உண்டாக்கும் தன்மை, தோல், கண், சுவாச பாதிப்புகள் அதனால் தோட்ட மரங்களில் பயன்படுத்தக் கூடாது. பழ மரங்களில் தடை. வீட்டு உபயோக மரங்களில் கூடாது. இது தொழிற்சாலை மரங்களுக்கு மட்டுமே பயன்படுத்தபடுகிறது.

இதையும் படியுங்கள்:
மூளை இல்லாத ஜெல்லிமீன்களும் குறட்டை விட்டுத் தூங்கும்... அறிவியலை அதிரவைக்கும் புதிய உண்மை!
Natural neem oil to repel insects

கிரியோசோட் எண்ணெய் மரங்களை பல ஆண்டுகள் பாதுகாக்கும் சக்தி கொண்டது. ஆனால் அது மனிதனுக்கும் இயற்கைக்கும் ஆபத்தானது. தோட்ட மரங்களுக்கு வேப்பெண்ணெய், தொழில்துறை மரங்களுக்கு: கிரியோசோட்.

logo
Kalki Online
kalkionline.com