மலர்களைத் தாக்கும் கொம்பன் ஈக்களைக் கட்டுப்படுத்தும் இயற்கை வழிகள்!

Natural ways to control Komban flies
Komban fly
Published on

லர்களைத் தாக்கும் கொம்பன் ஈ என்பது சாறு உறிஞ்சும் பூச்சிகளில் ஒன்றாகும். இது பூக்களின் வளர்ச்சிக்கு பாதிப்பை ஏற்படுத்துவதுடன், பூக்களின் நிறத்தையும் மாற்றி தரமற்றவையாக ஆக்குகின்றன. இதனைக் கட்டுப்படுத்த இயற்கை பூச்சிவிரட்டிகள் மற்றும் பிற விவசாய முறைகள் பயன்படுத்தப்பட வேண்டும்.

கொம்பன் ஈ மற்றும் பிற சாறு உறிஞ்சும் பூச்சிகளான வெள்ளை ஈ, அசுவினி, இலைப்பேன், செம்பேன் சிலந்தி, மாவுப்பூச்சி ஆகியவை பூக்களின் சாற்றை உறிஞ்சி சேதப்படுத்துகின்றன. இதனால் பூக்கள் மஞ்சள் நிறமாக மாறி, வாடி உதிர்கின்றன. குத்தூசி வாய்ப்பாகம் கொண்ட இவ்வகை பூச்சிகள் இலைகளில் கூட்டமாக அமர்ந்து சாற்றை உறிஞ்சுவதால் விளிம்புப் பகுதி சுருண்டு பச்சையம் இழந்து மஞ்சள் நிறமாக மாறுகின்றன. இத்தகைய பூச்சிகளின் தாக்குதலைத் தவிர்க்க, இயற்கை முறைகள் மற்றும் விவசாய நுட்பங்களைப் பயன்படுத்துவது அவசியமாகும்.

இதையும் படியுங்கள்:
'புஸ்'னு சத்தம் போட்டா உஷார்! இந்த பாம்பு கடிச்சா உங்க ரத்தம் உறைஞ்சு போயிடும்! உடனடி சிகிச்சை அவசியம்!
Natural ways to control Komban flies

கட்டுப்படுத்தும் இயற்கை முறைகள்:

வேப்பம் கரைசல்: 0.03 சதவிகிதம் அசாடிராக்டின் கலந்த வேப்பம் சார்ந்த தாவரப் பூச்சிக்கொல்லியை தேவையான அளவு ஒட்டும் பசை கலந்து தெளிக்கலாம்.

ஒட்டுப்பொறிகள்: ஈக்களைக் கவர்ந்து ஒட்டவைக்கும் பொறிகளைப் பயன்படுத்துவதன் மூலம் அவற்றின் எண்ணிக்கையைக் குறைக்கலாம்.

பயிர்களைத் தேர்ந்தெடுத்தல்: கொம்பன் ஈக்களின் தாக்குதலைத் தாங்கும் திறன் கொண்ட ரகங்களை தேர்வு செய்து நடவு செய்வது ஒரு சிறந்த வழியாகும்.

தாக்குதலுக்கு ஆளான தரமற்ற பூக்களை தோட்டத்தின் உள்ளேயே போடாமல் அப்புறப்படுத்துவது ஈக்களின் எண்ணிக்கையை அதிகரிக்காமல் தடுக்கும்.

ஊடுபயிர்கள் மற்றும் பொறி பயிர்களைப் பயிரிடுவதன் மூலம் பூச்சிகளின் தாக்குதலைக் குறைக்கலாம். உதாரணத்திற்கு, பருத்தி பயிரில் உளுந்து அல்லது மக்காச்சோளம் போன்ற பயிர்களை ஊடுபயிராகப் பயிரிடலாம்.

இதையும் படியுங்கள்:
உலகில் அதிக பாம்பினங்கள் வாழும் 5  நாடுகள்!
Natural ways to control Komban flies

காற்றடிக்கும் திசைக்கு குறுக்காக பயிர் வரிசைகளை அமைப்பதன் மூலம், பூச்சி மருந்து தெளிக்கும் திறன் மேம்படும்.

கொப்புளங்கள் மற்றும் கழலைகளை உருவாக்கும் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவது அவசியம். ஏனெனில், அவை தாவரத்தின் பாகங்களை தாக்கி துளைத்து சதைப்பகுதியினை உண்டு சேதப்படுத்துகின்றன. நெல் ஆனைக் கொம்பன் ஈ, மா தேயிலை கொசு போன்றவை செடிகளின் வெவ்வேறு பாகங்களைத் தாக்கும்போது கழலைகள் தோன்றுகின்றன.

தொடர்ச்சியான கண்காணிப்பு: பூச்சிகளின் தாக்கத்தை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, அதற்கேற்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். சரியான சாகுபடி முறைகளைப் பின்பற்றுவது, பூச்சிகளின் பெருக்கத்தை கட்டுப்படுத்த உதவும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com