
உலகில் பல உயிரினங்கள் வாழ்கின்றன. அவை ஒவ்வொன்றும் வித்தியாசமாக இருப்பது வியப்பு. சில உயிரினங்கள் நீல நிறங்களில் காணப்படுகின்றன. இந்த நிறம் ஆகாயம் மற்றும் கடல் நிறத்தோடு ஒத்துள்ளதால் இவை மறைந்து வாழ்வதற்கும் இவற்றின் இனச்சேர்க்கைக்கும் உதவியாக இருக்கிறது. அப்படிப்பட்ட ஏழு நீல நிற உயிரினங்கள் குறித்து இப்பதிவில் காண்போம்.
1. நீல மர மானிடர்: இந்த உயிரினம் இந்தோனேஷியாவில் உள்ள படான்டா தீவில் மட்டுமே காணப்படுகிறது. இது நீல நிறத்தில் பார்க்க அழகாக இருக்கும். இது இயற்கையான நிறம் அல்ல. இதன் மேல் விழும் சூரிய வெளிச்சத்தில் இது நீல நிறத்தில் காணப்படுகிறது. இது மிகக் குறைவாகவே காணப்படுகிறது. இது விஷத்தன்மை நிறைந்தது.
2. ப்ளூ பாய்சன் டார்ட் தவளை: இந்தத் தவளையை சூரிநாம் மற்றும் பிரேசில் மழைக்காடுகளில் காணலாம். கண்களைப் பறிக்கும் நீல நிறத்தில் ஆங்காங்கே கருப்புப் புள்ளிகளுடன் காணப்படும். இதன் நிறம் இதனை எதிரிகளிடமிருந்து காத்துக்கொள்ள உதவியாக இருக்கிறது. இது மிகவும் மதிப்புள்ளதாக கருதப்படுகிறது. விஷத்தன்மை உடையது. இதன் தோலிலிருந்து நச்சு போன்ற பொருளை வெளியேற்றுகிறது. நீண்ட கால்களை உடையது.
3. நீல கானா (Blue iguana): நல்ல நீல நிறத்தில் இருக்கும் இது, சூரிய வெளிச்சம் படும்போது பளீரென்ற நீல நிறத்தில் காணப்படும். இது தாய்மை நிலையில் இன்னமும் அழுத்த நீல நிறத்தில் இருக்கும். இந்த நிறத்தால் தனது துணையை இது ஈர்க்கிறது. மேலும், இதன் நிறம் வெப்பத்தை சமன்படுத்த உதவுகிறது. சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் இனம் இது.
4. எலெக்ட்ரிக் நீல டரான்டுலா: இந்த உயிரினத்தை தாய்லாந்தில் காணலாம். நல்ல நீல நிறத்தில் காணப்படும். வெளிச்சம் பட்டு இதன் உடலில் நல்ல நீல நிறத்தை ஏற்படுத்துவதாகத் தெரிகிறது. சிலந்தி போன்ற தோற்றத்தை உடையது. காடுகளில் மரங்களிடையே ஒளிந்துகொள்ள தனது நிறத்தை இது பயன்படுத்துகிறது.
5, ப்ளு மார்ஃபோ பட்டாம் பூச்சி: இதன் இறக்கைகள் நீல நிற பல்ப் போன்று ஒளி வீசி வியக்க வைக்கிறது. இது தனது துணையை ஈர்க்க தமது நீல நிறத்தை பயன்படுத்துகிறது. மிக அழகான வண்ணத்தில் கண்ணுக்குக் குளிர்ச்சியாக உள்ள இனம் இது.
6. நீல நிற டிராகன் சீ ஸ்லக்: இந்த உயிரினம் நீல நிறத்தில் கடல் நீர் நிறத்தை ஒத்து உள்ளது. இதனால் எதிரிகளிடமிருந்து பாதுகாப்பாக இருக்கிறது. நீரில் மிதக்கும் இது, ஆபத்தான இனமாகக் கருதப்படுகிறது.
7. ப்ளு ஜே: இது நீல நிறத்தில் காணப்பட்டாலும் இதற்கு இந்த நிறம் இயற்கையானது அல்ல. இதன் இறக்கைகள் மீது சூரிய வெளிச்சம் படும்போது இது நீல நிறத்தில் காட்சி தருகிறது. இதன் உடல் மெலானின் சூரிய வெளிச்சத்தை ஈர்த்து நீல நிறமாகிது. இது தனது எதிரிகளிடமிருந்து தப்பிக்க இந்த நிறம் உதவுகிறது. இது மிகவும் புத்திசாலியாகக் கருதப்படுகிறது. இது ஆந்தை போல் கத்தி ஆந்தைகளிடமிருந்து தன்னைக் காத்துக்கொள்ளும். மணிக்கு 42 கி.மீ. பறக்கக்கூடிய வலிமை படைத்தது. இது தென் அமெரிக்காவில் அதிகமாகக் காணப்படுகிறது. இதன் சக்தி மற்றும் புத்தி இதனை ஒரு தனித்தன்மையுடன் விளங்க வைக்கிறது.