இயற்கையின் படைப்பு: அழகான கொம்புகள் கொண்ட விலங்குகள்!

Beautiful horns
Creation of nature

உயிரினங்கள் தங்களை தற்காத்துக்கொள்ள கொம்புகளை பயன்படுத்துகிறது. சிலசமயம் இது இனக்கவர்ச்சியாக தங்கள் துணையை ஈர்க்க பயன்படுத்துகிறது.  வித்யாசமான பலவித வடிவங்களில் உள்ள கொம்புகள் கொண்ட ஏழு உயிரினங்களைப் பார்ப்போம்.

1. Addax


Beautiful horns
Addax

வட ஆப்ரிக்காவில் காணப்படும் இதை இதன் கொம்புகளைக் கொண்டே அடையாளம் காணலாம். நீண்டு வளைந்த கொம்புகள் கொண்ட இது சுமார்  மூன்று மீட்டர் நீளம் இருக்கும்.

2. markhor


Beautiful horns
markhor

தென்பகுதி மற்றும் மத்திய ஆசிய மலைப்பகுதிகளில் காணப்படும் இதன் கொம்புகள்  கண்ணைப் பறிக்கும் வகையில் இருக்கும்.  இக்கொம்புகள் சுமார் 5மீட்டர் நீளம் இருக்கும். இனப் பெருக்கத்தின்போது இதற்கு உபயோகமாக இருக்கும் இந்த கொம்புபுகள். தங்கள் பலத்தை இதன்மூலம் நிலைநாட்டும்.

3. Sable antelope


Beautiful horns
Sable antelope

நீளமாகவுமா வளைந்தும்  காணப்படும் இதன். கொம்புகள் நான்கு மீட்டர் நீளம் இருக்கும். இந்தக் கொம்புகள் மூலம் தங்கள் எதிரிகளிமிருந்து காத்துக்கொள்கிறது. 

4. Texas Longhorn


Beautiful horns
Texas Longhorn

மாடு வகையைச் சேர்ந்த இந்த இனம்  அமெரிக்காவில் காணப்படுகிறது. மிகவும் நீளமாகவும் அகலமாகவும் உள்ள இதன் கொம்பு கலாசார அடையாளமாக திகழ்கிறது. இதன் பெயரில் ஒரு ஃபுட் பால் டீம் உள்ளது. 

5. Greater kudu


Beautiful horns
Greater kudu
இதையும் படியுங்கள்:
‘விரல்கள்’ கொண்ட வினோத பழம்! புத்தரின் கை பழம்!
Beautiful horns

ஆப்ரிக்காவில் காணப்படும் இந்த ஆன்டிலோப்பின்  கொம்புகள் சுமார் ஆறு அடிகள் நீளம் இருக்கும். ஆண் இனத்திடையே  தங்களை நிலை நாட்டிக் கொள்வதில் இக் கொம்புகள் முக்கியத்துவம் பெறுகிறது.

6. Bighorn sheep


Beautiful horns
Bighorn sheep

தென் அமெரிக்காவில் காணப்படும் இந்த ஆடுகளின் கொம்புகள் மிக கனமாகவும் சுருண்டும் காணப்படும்.  இந்த கொம்புகளின் எடை  14 கிலோ கிராம் எடை இருக்கும்.  இந்த இனம் தங்களுக்குள் சண்டையிட்டு  தலைமை பதவியை வகிக்க இக்கொம்புகளை பயன்படுத்துகிறது.

7. Black buck


Beautiful horns
Black buck

இதன் கொம்புகள் மெல்லியதாகவும் சுருண்டும் காணப்படும். சண்டை போடுவதற்கும்,தங்களை எதிரிகளிடமிருந்து காக்கவும் இக்கொம்புகள் பயன்படுகிறது‌. இந்தியாவின் பசுமையான புற்கள் நிறைந்த பகுதிகளில் இது காணப்படும். இந்தியாவின் தேசிய இனமாக இது கருதப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com