2023ம் ஆண்டு கண்டுப்பிடிக்கப்பட்ட 7 வகை உயிரினங்கள்! எவை தெரியுமா?

New species discovered in 2023
New species discovered in 2023Kurit afshen (good-nature-blog-uploads.s3.amazonaws.com)

வ்வுலகில் எண்ணிலடங்கா உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றனர். அதில் பாதி உயிரினங்களே நமக்கு தெரியும். இன்னும் எத்தனையோ உயிரினங்கள் காடுகளிலும் மலைகளிலும் தீவுகளிலும் மக்களிடமிருந்து மறைந்து வாழ்கின்றனர். அதேபோல் தினமும் புதுவகையான உயிரினங்கள் வனவிலங்கு ஆராய்ச்சியாளர்கள் கண்டுப்பிடித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அந்தவகையில் 2023ம் ஆண்டு கண்டுப்பிடிக்கப்பட்ட புதிய வகை உயிரிணங்களைப் பற்றிப் பார்ப்போம்.

1. Pest Controlling- Wasps:

Pest Controlling- Wasps
Pest Controlling- WaspsImgecredit: British pest control association

லிஃபோர்னியாவில் உள்ள 'இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் நடத்திய ஆராய்ச்சியில் இந்த புதிய வகை குளவி இனம் கண்டுப்பிடிக்கப்பட்டது. 815 புதிய வகை உயிரினங்களில் 619 உயிரினங்கள் குளவி வகைகளே ஆகும். இது வயல்களை நாசம் செய்யும் குளவிகள் என்று ஆராச்சியின் மூலம் கண்டுப்பிடித்துள்ளனர்.

2. Legless lizard:

Legless lizard
Legless lizardImge credit: Wikipedia

ஸ்கின்க்ஸ் (Skinks) என்றழைக்கப்படும் இந்த வகையான பல்லி உலகில் இரண்டாவது பெரிய மலையான அங்கொலாவில் கண்டுப்பிடிக்கப்பட்டது. இலைகளில் பதுங்கி பூச்சிகளை சாப்பிடும் இந்த பல்லி பார்ப்பதற்கு சிறிய பாம்பு போல் இருக்கும்.

3. DiCaprio snake:

DiCaprio snake
DiCaprio snakeImge credit: Yahoo Finance

னாமா மற்றும் கொலம்பியா பகுதிகளில் கண்டுப்பிடிக்கப்பட்ட DiCaprio snake என்றழைக்கப்படும் பாம்பு மரங்களில் வாழக்கூடியவை. நத்தைகளை சாப்பிடும் ஐந்து வகையான பாம்புவகைகளில் இதுவும் ஒன்று. கொலம்பியாவில் உள்ள மலையில் இந்த வகையான பாம்பு ஒன்றே ஒன்று மட்டும்த்தான் கண்டறியப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

4. Hipposideros Kingstonae:

Hipposideros Kingstonae
Hipposideros KingstonaeImge credit: Species New to science

வௌவால் வகையைச் சேர்ந்த இந்த உயிரினத்தின் மூக்கு இலைப் போல் இருக்கும். இலை மூக்கு கொண்ட வௌவால் இனம் மொத்தம் 70 ஆகும். இந்த உயிரனத்தை தாய்லாந்து மற்றும் மலேசியா நாடுகளில் மட்டுமே காணமுடியும்.

5. Gymnures:

Gymnures
GymnuresImge credit: Britannica

பொன்னிற முடிகளைக் கொண்ட இந்த வகையான உயிரினம் பிலிப்பென்ஸ் நாட்டில் கண்டுப்பிடிக்கப்பட்டது. இது பாலூட்டி வகையைச் சேர்ந்தது. பிலிப்பென்ஸில் அதிகமான பெரிய மலைகள் இருப்பதால். இன்னும் நிறைய வகை உயிரினங்கள் அங்கு வாழ்கின்றன.

6. Bent-toed gecko:

Bent-toed gecko
Bent-toed geckoImge credit: Wikipedia

ந்த வகையான உயிரினம் திமர் லெஸ்ட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள தீவில் கண்டுப்பிடிக்கப்பட்டது. இதுதான் அங்கு முதன்முறை கண்டுப்பிடிக்கப்பட்ட புதியவகை உயிரினமாகும்.

7. Kodama jujutsu:

Kodama jujutsu
Kodama jujutsuImge credit: Live science

ப்பானில் உள்ள ஒகினவா தீவில் கண்டுப்பிடிக்கப்பட்ட இந்த உயிரினம் வயல்களில் அதிகம் காணப்படுகிறது. குறிப்பாக புற்களிலும் இலைகளிலும் தான் வாழ்கிறது. இரவில் தான் இதனைப் பார்க்க முடியும். இது வயல்களைப் பாதுகாக்கும் தன்மையுடையது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com