வாழைத்தார்களை பாதிக்கும் புதிய வகை நோய்: கூடுதல் செலவால் விவசாயிகள் வேதனை!

வாழைத்தார்களை பாதிக்கும் புதிய வகை நோய்: கூடுதல் செலவால் விவசாயிகள் வேதனை!

வாழைகளின் காம்புப் பகுதியில் ஏற்படும் கள்ளிப்பூச்சி தாக்குதலிலிருந்து வாழையை பாதுகாக்க விவசாயிகளுக்கு கூடுதல் செலவு ஏற்படுவதாக வேதனை தெரிவித்து இருக்கின்றனர்.

தமிழ்நாட்டின் காவிரி பாசனப் பகுதியான நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் வாழை விவசாயம் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. அந்தப் பகுதி மக்கள் வாழை சாகுபடியையே நம்பி வாழ்கின்றனர். இந்த நிலையில், தற்போது வாழை அறுவடைக்கு தயாராகி இருக்கிறது. பல பகுதிகளில் வாழை அறுவடை செய்யப்பட்டு விற்பனைக்காக ஏல நிலையங்களுக்குக் கொண்டு செல்லப்படும்பொழுது வாழைகளில் ஏற்பட்டுள்ள புதிய வகை நோய் தாக்கத்தால் வாழைக் காம்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளை நிறத்தில் காணப்படுகிறது. மேலும், அது பிசுபிசு தன்மை கொண்டதாகக் காட்சியளிக்கிறது. இது கள்ளிப்பூச்சி தாக்குதலால் ஏற்பட்ட பாதிப்பு என்று சொல்லப்படுகிறது.

அதேநேரம், வாழைத்தார்கள் பிசுபிசு தன்மையோடு இருப்பதால் மக்கள் வாழைப்பழத்தை வாங்கி பயன்படுத்த யோசிப்பர். இதனால் வாழைத்தார்களை விற்பனைக்கு எடுத்துச் செல்வதற்கு முன்பு அதை முழுவதும் கழுவ வேண்டிய நிலை ஏற்பட்டு இருக்கிறது. மேலும், விவசாயிகள் ஒவ்வொரு வாழை காம்பையும் கழுவதற்கு மிக நீண்ட நேரம் ஆகும் என்பதால், வாகனங்களை சுத்தம் செய்யும் வாட்டர் வாஷ் சென்டர்களுக்கு எடுத்துச் சென்று தண்ணீரை பீச்சி அடித்து அந்த பிசுபிசுத் தன்மையை நீக்குகின்றனர். இதற்காக வாட்டர் வாஷ் சென்டர்களில் வாழைத்தார் ஒன்றுக்கு 10 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இதனால் கூடுதல் செலவு ஏற்படுவதாகவும், வருமானம் குறைவதாகும் வாழை விவசாயிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளாக வாழை சாகுபடி செய்த விவசாயிகள் போதிய விலை கிடைக்காமல் நஷ்டத்தை அடைந்தனர். தற்போது அதிக விளைச்சல் கிடைத்திருக்கிறது. ஆனால், புதிய வகை கள்ளிப்பூச்சி தாக்குதலால் கூடுதல் செலவு ஏற்படுகிறது. இதனால் வருமானம் குறைகிறது. ஆக, இந்த வருடமும் வாழை விவசாயிகள் போதிய வருமானம் கிடைக்காமல் பாதிப்பையே சந்தித்து வருவதாக வாழை விவசாயிகள் கூறுகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com