Milk Burfi Recipe: குழந்தைகள் விரும்பி சாப்பிடும் பால் பர்பி வீட்டிலேயே செய்யலாமே! 

Milk Burfi
Milk Burfi Recipe

உங்களுக்கு ஸ்வீட் செய்யத் தெரியுமா, தெரியாதா? “அய்யய்யோ! எனக்கு ஒன்னும் தெரியாதுங்கோ” என நீங்கள் பதில் சொல்பவராக இருந்தால், உங்களுக்கு ஏத்த ரெசிபி ஒன்றை எப்படி செய்வது என நான் இப்பதிவில் சொல்லித் தரப் போகிறேன். அதுதான் பால் பர்பி. அதாவது பால் பவுடரை பயன்படுத்தி வீட்டிலேயே எளிதாக செய்யக்கூடிய ஒரு பர்பி ஸ்வீட் ரெசிபி. இதை செய்வதற்கு வெறும் நான்கு பொருட்கள் இருந்தாலே போதும். வீட்டுக்கு யாரேனும் உறவினர்கள் வந்தால் உடனடியாக இந்த ஸ்வீட்டை செய்து கொடுத்து அசத்துங்கள். 

தேவையான பொருட்கள்: 

  • பால் பவுடர் 1 கப்

  • நெய் 5 ஸ்பூன்

  • பொடித்த சர்க்கரை ¼ கப்

  • பால் ¼ கப்

செய்முறை: 

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் நெய் சேர்த்து சூடானதும் பாலை ஊற்றவும். பால் கொதித்ததும் கொஞ்சம் கொஞ்சமாக பால் பவுடரை சேர்த்து கட்டிகள் இல்லாமல் கிளற வேண்டும். 

பின்னர் பொடித்த சர்க்கரையை அதில் சேர்த்து கிளறினால், கொஞ்சம் கொஞ்சமாக கெட்டியான பதத்திற்கு வர ஆரம்பிக்கும். இது வாணலியில் ஒட்டாமல் தனியாக பிரிந்து வரும்போது, கொஞ்சமாக வெளியே எடுத்து சூடு ஆறியதும் கையிலேயே உருட்டிப் பாருங்கள். அப்படி நீங்கள் உருட்டும்போது எளிதாக பந்து போல மாறினால் ஸ்வீட் சரியான பதத்தில் உள்ளது என அர்த்தம். 

இதையும் படியுங்கள்:
வாழ்க்கையை ஜாலியாக அனுபவித்துக் கொண்டே கோடீஸ்வரன் ஆவது எப்படி? வாங்க தெரிஞ்சுக்கலாம்! 
Milk Burfi

இப்போது அடுப்பை அணைத்து, ஒரு தட்டில் நெய் தடவி, வாணலியில் இருக்கும் கலவையை ஊற்றி பரப்பி விடுங்கள். விருப்பப்பட்டால் அதன் மேலே நட்ஸ் மற்றும் குங்குமப்பூ தூவி அலங்கரிக்கலாம். இதை அப்படியே ஒரு 15 நிமிடங்கள் விட்டால் ஓரளவுக்கு கெட்டியாக மாறிவிடும். இப்போது கத்தியைப் பயன்படுத்தி சிறு சிறு துண்டுகளாக வெட்டவும். 

அவ்வளவுதான் சூப்பரான சுவையில் பால் பர்பி தயார். இதை இன்றே முயற்சித்துப் பார்த்து உங்களது கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com